Video: 29ஆவது மாடியில் மலைப்பாம்பு... அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்!

Python Video: 29ஆவது மாடியில் உள்ள ஒரு வீட்டின் ஃபிரிட்ஜின் பின்புறம் மறைந்திருந்த மலைப்பாம்பை பாம்பு மீட்பு பணியாளர்கள் பத்திரமாக மீட்ட நிலையில், அதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ளனர்.

Written by - Sudharsan G | Last Updated : Mar 8, 2023, 03:43 PM IST
  • இந்த பாம்பை அவர்கள் செல்லமாக Banana என்றழைக்கின்றனர்.
  • அந்த பாம்பின் வகை, பைபால்ட் பால் பைத்தான் என கண்டறியப்பட்டது.
  • தற்போது அதை விலங்கு பாதுகாப்பகத்தில் வைத்துள்ளனர்.
Video: 29ஆவது மாடியில் மலைப்பாம்பு... அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்!  title=

Python Video: அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி நகரின் லிபர்ட்டி ஹூமேன் சொசைட்டி என்ற இடத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டின் உள்ளே, மலைப்பாம்பு ஒன்றை பாாம்பு மீட்பவர்கள் மீட்டுள்ளனர். அந்த பாம்பு, பைபால்ட் பால் மலைப்பாம்பு என அவர்கள் அடையாளம் கண்டுள்ளனர். அந்த வீட்டின் ஃபிரிட்ஜின் பின்புறம், அந்த மலைப்பாம்பு மறைந்திருந்துள்ளது. 

மலைபாம்பை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த குடும்பம் உடனடியாக பாம்பை மீட்பு பணியாளர்களுக்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து, அங்கு வந்த மீட்பு பணியாளர்கள் பாம்பை மீட்டு, விலங்கு பாதுகாப்பு மையத்திற்கு கொண்டு சென்றனர். இந்த பாம்பு, பைபால்ட் பால் பைத்தான் (piebald ball python) என்பது பைட் பால் பைத்தான் (pieball python) என்றும் அழைக்கப்படுகிறது. அவை பழுப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தில் காணப்படுகிறது. பெரிய வெள்ளைத் திட்டுகள் மற்றும் தோலின் கோடுகள் நிறமற்ற வகையிலும் இருக்கும்.

29ஆவது மாடியில்... 

மீட்கப்பட்ட அந்த பாம்பு குறித்து, பாம்பை மீட்டவர்கள் பேஸ்புக்கில் வீடியோ வெளியிட்டுள்ளனர். மேலும், இந்த பாம்பை "Banana" (வாழைப்பழம்) என்றும் செல்லப்பெயரிட்டு அழைக்கின்றனர். மேலும், இந்த பாம்பு குறித்து பல்வேறு தகவல்களை வீடியோவில் பகிர்ந்த அவர்கள், அந்த அடுக்குமாடி குடியிருப்பின் 29ஆவது மாடியில் இருந்துதான் பாம்பு மீட்கப்பட்டது என்ற அதிர்ச்சி தகவலையும் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க | சிலந்தி வலையில் சிக்கிய சின்னாபின்னமான பாம்பு: வைரல் வீடியோ

அந்த வீடியோவில்," Banana, மிக அழகான பைபால்ட் பால் பைத்தான் வகை பாம்பு. இது ஆபத்தானது இல்லை. ஆனால், சிலருக்கு திடீரென பாம்பை பார்த்தால் பயம் வரும்தானே. Banana தற்போது இங்கு வந்துள்ளது. இது, குடியிருப்பாளர் ஒருவரின் வீட்டின் ஃபிரிட்ஜ்க்கு பின் ஒளிந்திருந்தது. அவர்கள் பதறியடித்து, எங்களை அழைத்தார்கள். இது, அந்த அடுக்குமாடி குடியிருப்பின் 29ஆவது மாடியில் இருந்து மீட்கப்பட்டது என்பதை நாங்கள் உங்களிடம் கூறினோமா?" என குறிப்பிட்டுள்ளனர். 

மேலும், அந்த வீடியோவில்,"இது மக்களுடன் மிகவும் பழக்கப்பட்டது. வீட்டில் வளர்க்கப்படும் பாம்பு. இதை வளர்ப்பவரிடம் இருந்து இந்த பாம்பு தப்பித்திருக்கலாம். இந்த பாம்பு குறித்த தகவல் தெரிந்தால், தங்களிடம் தகவல் அளிக்கவும்" என தெரிவித்துள்ளனர்.

பால் பைத்தான்

7 நாள்கள் வரை, அந்த பாம்பை வளர்ப்பவர்கள் உரிமைக்கோரவில்லை என்றால், அந்த பாம்பு பாதுகாப்பக்கத்தில் வளர்க்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பால் மலைப்பாம்பு (Ball Python) அமெரிக்காவில் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் மிகவும் பிரபலமான ஊர்வனவற்றில் ஒன்றாகும். மேலும் பைபால்ட் மார்ப் மிகவும் மதிப்புமிக்க வகைகளில் ஒன்றாகும். குறிப்பாக, பைட் பால் மலைப்பாம்பு என்பது நிலையான பால் மலைப்பாம்புகளின் தனித்துவமான வண்ண உருவம் கொண்டதாகும்.

மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்கா பகுதிகளில் அதிகமாக காணப்படும் பால் மலைப்பாம்புகள் (Ball), பாம்பு ஆர்வலர்கள் மற்றும் வளர்ப்பவர்களுக்கான செல்லப்பிராணிகளின் மிகவும் பிரபலமானவையாகும். ஏனெனில் அவை மென்மையானவை, சுறுசுறுப்பு அற்றவை மற்றும் விஷமற்றவை. பால் மலைப்பாம்பு அதன் பாதுகாப்பு உத்திக்காக மிகவும் அறியப்படுகிறது. இது அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் இறுக்கமான ஒரு பந்தை போன்று தன்னை மாற்றிக்கொள்ளும். 

மேலும் படிக்க | ஒரு சில நொடிகள்.. மலைப்பாம்பை கடித்து குதறிய முதலை, வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News