வாஷிங்டன்: அமெரிக்காவின் 6 மாநிலங்களில் ஒன்றாக வந்த பல சூறாவளிகள் ஒன்றாக இணைந்ததால், அந்த மாநிலங்களில் பெரும் அழிவு ஏற்பட்டுள்ளது. கென்டக்கி மாகாணத்திலேயே 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
கென்டக்கி கவர்னர் ஆண்டி பெஷியர் இந்த சூறாவளியை தனது மாநில வரலாற்றில் மிக மோசமான புயல் என்று வர்ணித்துள்ளார். கென்டக்கியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கென்டக்கியில் 2 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
அமேசான் ஊழியர்கள் 6 பேர் சூறாவளிக்கு பலி
அமெரிக்காவில் (America) வந்த சூறாவளியில் அமேசான் நிறுவன ஊழியர்கள் 6 பேர் பலியாகினர் என்று கூறப்பட்டுள்ளது. இங்கு சனிக்கிழமையன்று, அமேசான் கிடங்கு டொர்னாடோ சூறாவளியின் பிடியில் சிக்கியது. அப்போது கிடங்கின் மேற்கூரை உடைந்தது. கிடங்கின் கூரை 11 அங்குலம் தடிமனாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | தப்லிகி ஜமாத் மீது தடை விதித்தது சவுதி அரேபியா..!!
அமெரிக்காவின் இந்த மாநிலத்தில் மிக அதிக அழிவு
தற்போது தாக்கியுள்ள சூறாவளிகளிகளின் மையப்புள்ளியாக கருதப்படும் கென்டக்கியின் மேஃபீல்டில் அதிகபட்ச அழிவு ஏற்பட்டுள்ளது. மேஃபீல்டில் மெழுகுவர்த்தி தொழிற்சாலை இடிந்து விழுந்த விபத்தில் பலர் காணாமல் போயுள்ளனர். மேஃபீல்ட் நகரத்தில் இருந்து வெளிவந்துள்ள படங்களிலிருந்தே இந்த பயங்கரமான அழிவை அறிய முடிகிறது. இந்த புயலில் நகரில் உள்ள அனைத்து வீடுகளும் இடிந்து விழுந்தன. நகரம் இப்போது வாழ ஏற்ற இடமாகவும் இல்லை.
கென்டக்கியில் பயங்கர காட்சி
கென்டக்கியில் மணிக்கு 70 மைல் என்ற வேகத்தில் சூறாவளி வீசத் தொடங்கியது. இது மணிக்கு 200 மைல்களாக அதிகரித்துள்ளது. இந்த அளவிலான சூறாவளி மிகவும் ஆபத்தான வகைக்குள் வைக்கப்பட்டுள்ளது. கென்டக்கியில் இருந்து படங்கள் அதற்கு சாட்சியாக அமைந்துள்ளன.
இந்த புயல் அமெரிக்காவின் பல மாநிலங்களில் பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த புயலால் (Flood) இதுவரை 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கென்டக்கியின் ஆளுநரின் கூற்றுப்படி, வெள்ளிக்கிழமை இரவு மாநிலத்தின் பயங்கரமான இரவுகளில் ஒன்றாக உள்ளது. சில பகுதிகளில் இந்த புயல் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு அழிவை ஏற்படுத்தியுள்ளது.
ALSO READ | 1 நகரம், 889 கமாண்டோக்கள், 5000 பாதுகாப்புப் பணியாளர்கள் ஏன் இந்த பலத்த பாதுகாப்பு?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR