கொரோனா காலத்தில் செவிலியர்களுக்கு 50% சம்பள உயர்வை அறிவித்துள்ள நாடு எது தெரியுமா?

ஊதிய உயர்வு ஞாயிற்றுக்கிழமை, அதாவது ஈரானின் தேசிய செவிலியர் தினத்தன்று துணை சுகாதார அமைச்சர் கமல் தகவினேஜாத்தால் அறிவிக்கப்பட்டது. 

Written by - ZEE Bureau | Last Updated : Dec 21, 2020, 03:37 PM IST
  • மேற்கு ஆசியாவில் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஈரான் ஒன்றாகும்.
  • செவிலியர்கள் தங்கள் ஊதியத்தில் 50 சதவீதம் அதிகரிப்பு பெறுவார்கள் என்று ஈரான் அரசாங்கம் அறிவித்துள்ளது.
  • இந்த ஆண்டு சுகாதாரத் துறையில் 52,000 க்கும் மேற்பட்ட புதிய வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளன.
கொரோனா காலத்தில் செவிலியர்களுக்கு 50% சம்பள உயர்வை அறிவித்துள்ள நாடு எது தெரியுமா?

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முன்னணித் தொழிலாளர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள் என்பது சமீபத்திய காலங்களில் நாம் கண்கூடாகக் கண்டுள்ள உண்மையாகும். கொரோனா வைரஸ் உலகெங்கிலும் உள்ள மக்களைத் தொடர்ந்து பாடாய் படுத்தி வருகிறது. இந்த நிலையில், ஒரு நாடு, தன் நாட்டில் சுகாதாரத் துறைகளில் பணிபுரியும் செவிலியர்களின் மதிப்பைப் புரிந்து கொண்டுள்ளது.

ஊடக செய்தி வெளியிட்டுள்ளபடி, நாடு முழுவதும் உள்ள செவிலியர்கள் தங்கள் ஊதியத்தில் 50 சதவீதம் அதிகரிப்பு பெறுவார்கள் என்று ஈரான் அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஈரானில் (Iran) உள்ள மருத்துவமனைகள் மற்றும் பராமரிப்பு இல்லங்களில் உள்ள செவிலியர்கள் உடனடி அதிகரிப்பின் பலனை அடைவார்கள். நாட்டில் அதிகரித்து வரும் தொற்றின் எண்ணிக்கையை சமாளிப்பதில், இந்த நடவடிக்கை சுகாதாரப் பணியாளர்களுக்கு ஊக்கமளிக்கும் அன்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஊதிய உயர்வு ஞாயிற்றுக்கிழமை, அதாவது ஈரானின் தேசிய செவிலியர் தினத்தன்று துணை சுகாதார அமைச்சர் கமல் தகவினேஜாத்தால் அறிவிக்கப்பட்டது.

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா சையத் அலி கமேனி, அண்மையில் தொலைக்காட்சியில் பேசிய உரையில், சுகாதாரப் பணியாளர்களுக்கு (Health Workers), குறிப்பாக செவிலியர்களுக்கு கூடுதல் ஆதரவைக் கோரியிருந்தார்.

ALSO READ: தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் COVID-19 Vaccine போட்டுக்கொள்ளலாமா?

இது நாட்டில் உள்ள சுகாதாரப் பணியாளர்களுக்கான முதல் உயர்வு அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. மார்ச் மாதத்தில் தொற்றுநோய் நாட்டுக்குள் நுழைந்த தருணத்தில் செவிலியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டது என்று தாகவினேஜாத் கூறினார்.

இரண்டு ஊதிய உயர்வுகளிலும், செவிலியர்களின் ஊதியம் புதிய பணியாளர்களுக்கு மாதத்திற்கு 280 டாலருக்கும், மூத்த ஊழியர்களுக்கு மாதத்திற்கு 400 டாலருக்கும் இடையில் இரட்டிப்பாகும் என்று அவர் கூறினார்.

சுகாதாரப் பணியாளர்கள் மேற்கொண்ட கூடுதல் பணிகளுக்காக, செவிலியர்கள் (Nurses) அவர்களின் ஊதியத்தில் சுமார் 25 சதவீதம் அதிகம் பெறுவார்கள் என்று துணை சுகாதார அமைச்சர் கூறினார்.

மேற்கு ஆசியாவில் கொரோனா (Coronavirus) தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஈரான் ஒன்றாகும். இதன் காரணமாக சுகாதாரத்திற்கான செலவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு சுகாதாரத் துறையில் (Health Sector) 52,000 க்கும் மேற்பட்ட புதிய வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளன. இவற்றில் பாதி செவிலியர்களுக்காக ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

ALSO READ: Coronavirus Vaccine போட்டுக்கொள்ளும் முன் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News