சாம்சங் கேலக்சி S9 ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்ற நிலையில். இது அடுத்த ஆண்டிலிருந்து விற்பனைக்கு வரும் என எதிர்பர்க்கப்படுகிறது.
சாம்சங் கேலக்சி S9 ஸ்மார்ட்போன் கீக்பென்ச் தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. அதுபோன்று, பென்ச்மார்க்கிங் தளத்திலும் SM-G960F சாம்சங் ஸ்மார்ட்போன் பட்டியலிடப்பட்டுள்ளது.
கீக்பென்ச் தளத்தின் படி சாம்சங் கேலக்சி S9-ல் சிங்கிள்-கோர் 2680 மற்றும் மல்டி-கோர் 7787 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இந்த சாம்சங் கேலக்சி S9 முந்தைய மாடல்களைவிட அதிக அட்டகாசமான திறன்களைக் கொண்டதாக இருக்கும். மேலும், ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ மற்றும் 4 ஜிபி ரேம்'மையும் கொண்டுள்ளது.
இந்த சாம்சங் கேலக்சி S9-ல் எக்சைனோஸ் 9810 ஆக்டாகோர் பிராசஸர் மற்றும் புதிய வகை ஸ்னாப்டிராகன் பிராசஸர்ரைக் கொண்டுள்ளது. எனவே, இதில் ஸ்னார்டிராகன் 845 சிப்செட்- ஆகா இருக்கலாம் என எதிர்பர்க்கப்படுகிறது.
தற்போது, சாம்சங் கேலக்ஸி S9-ல் 3D சென்சிங் கேமரா, ஐபோன் X-ல் உள்ளது போன்று முக அங்கீகார வசதிகளுடன் வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.