சமூக வலைதள நிறுவனமான ட்விட்டரை கைப்பற்றுவதற்காக உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க் தொடர்ந்து முயற்சித்து வந்தார். ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை முதலில் வாங்கிய உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், பின்னர் அனைத்து பங்குகளையும் வாங்க முன்வந்தார். ஒரு பங்கு 54.2 அமெரிக்க டாலர் என ட்விட்டர் நிறுவனத்தின் மொத்த பங்குகளையும், 4,400 கோடி அமெரிக்க டாலர்களுக்கு வாங்க எலான் மஸ்க் பேச்சு வார்த்தைஇந்திய ரூபாயில் இதன் மதிப்பு, ரூ.3.37 லட்சம் கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் பல்வேறு காரணங்களால் இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்படாமல் தள்ளிப்போனது. பின்னர் ஒரு கட்டத்தில், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் திட்டத்தையே கைவிட எலான் மஸ்க் முடிவு செய்தார். $44 பில்லியன் டாலருக்கு ட்விட்டரை வாங்க இருந்த எலன் மஸ்க் தற்போது அந்த திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்போவதாக கடந்த மே மாதம் தெரிவித்தார். ட்விட்டர் நிறுவனம் போலி கணக்குகள் குறித்த தகவலை கொடுக்க வில்லை என்றும், ட்விட்டரில் உள்ள போலி கணக்குகள் குறித்த முழு விவரங்களை அறிந்த பின்னரே, ட்விட்டர் நிறுவனத்தை தான் வாங்கப்போவதாகவும் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். இதை அடுத்து, ட்விட்ட நிறுவன பங்குகள் 17.7% சரிந்து $37.10 என்ற நிலையில் இருந்தது. முன்னதாக, ஏப்ரல் மாத தொடக்கத்தில் எலன் மஸ்க் இந்த நிறுவனத்தில் தனது பங்குகளை வாங்குவதாக அறிவித்த போது பங்கின் விலை $54.20 ஆக இருந்தது.
மேலும் படிக்க | எலான் மஸ்க் மீது வழக்கு தொடர்ந்த ட்விட்டர் நிறுவனம்! காரணம் இதான்
இந்நிலையில், 44 பில்லியன் டாலருக்கு ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்கிற்கு விற்பனை செய்ய ட்விட்டர் நிறுவன பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ட்விட்டர் பங்குதாரர்கள் கூட்டம் ஆன்லைனில் நடைபெற்ற நிலையில், ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு எலான் மஸ்கிடம் விற்பனை செய்வது குறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாகெடுப்பில், எலான் மஸ்கிடம் ட்விட்டரை விற்பனை செய்ய, பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே, டிவிட்டர் நிறுவனத்தை வாங்க போவதில்லை என எலோன் மஸ்க் பின் வாங்கிய நிலையில், அது தொடர்பாக, எலான் மஸ்கிற்கு எதிராக ட்விட்டர் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், இந்த வழக்கு அக்டோபர் மாதம் விசாரணைக்கு வருகிறது. ஒப்பந்தத்தை முடிக்கும்படி எலான் மஸ்கிற்கு அழுத்தம் கொடுக்க ட்விட்டர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதை அடுத்து எலான் மஸ்க் என்ன செய்ய போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மேலும் படிக்க | புதிய ட்விட்டர் CEO நியமிக்க எலோன் மஸ்க் திட்டம்; அச்சத்தில் ட்விட்டர் ஊழியர்கள்
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ