Ukraine - Russia war: ஆயுதமேந்திய உக்ரைன் அழகு ராணியின் கோரிக்கை

ரஷ்யாவுக்கு எதிரான போரில் தாய் நாட்டுக்காக ஆயுதமேந்தியிருக்கும் உக்ரைன் அழகு ராணி உலக ரசிகர்களிடம் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். 

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 2, 2023, 03:33 PM IST
  • ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைன் அழகி
  • உலக மக்கள் நன்கொடை அளிக்க வேண்டுகோள்
  • நன்கொடைகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும்
Ukraine - Russia war: ஆயுதமேந்திய உக்ரைன் அழகு ராணியின் கோரிக்கை title=

ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த குடிமக்கள் பலர் தன்னார்வத்துடன் களமிறங்கியுள்ளனர். அவர்களுடன் மிஸ் உக்ரைன் பட்டம் வென்ற அனஸ்தேசியாவும் தீரமுடன் களமிறங்கியுள்ளார். தொடர்ந்து போரில் ஈடுபட்டு வரும் அவர், தன்னாட்டு மக்களுக்காக உலக ரசிகர்களிடம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில், போரில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை அனுப்புமாறு கேட்டுக் கொண்டுள்ளார். நன்கொடை அனுப்ப வேண்டிய முகவரியையும் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார். 

மேலும் படிக்க | ரஷ்யா-உக்ரைன் போர்: கோரிக்கைகளை ஏற்றால் பேச்சுவார்த்தைக்கு தயார் - புடின்

24 வயதான அனஸ்தேசியா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், " உலகம் முழுவதும் இருக்கும் மக்களுக்கு என் வணக்கம். நான் மிஸ் உக்ரைனாக இருந்ததை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். உக்ரைன் கடுமையான போரை எதிர்கொண்டுள்ளது. ரஷ்யாவை எதிர்த்து போராடுவதற்கு உக்ரைன் மக்களும் தயாராக உள்ளனர். நாங்கள் எங்கள் நாட்டை மட்டுமல்ல சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்க கடுமையாக போரிட்டு கொண்டிருக்கிறோம். இந்த போரில் உக்ரைனுக்கு உதவியாக நீங்கள் இருக்க வேண்டும். தயவு செய்து உங்களால் முடிந்த உதவியை அளிக்க முன் வாருங்கள்.

மேலும் படிக்க | சிக்கலில் இருக்கும் உக்ரைன் அதிபர் - அமெரிக்கா, இங்கிலாந்தின் ரகசிய திட்டம்

எனது சமூகவலைதளம் மூலம் பெறப்படும் நன்கொடைகள் அனைத்தும் உக்ரைனில் போரால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு கொடுக்கப்படும். எங்களுக்கு உதவ முன்வாருங்கள்" எனக் கேட்டுக் கொண்டுள்ளார். அவரின் இந்த வேண்டுகோள் சமூக ஊடகங்களில் தீயாக பரவி வருகிறது. பலர் மாடல் அழகி அனஸ்தேசியாவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். உண்மையான மற்றும் பொறுப்புள்ள குடிமகளாக செயல்படுவதாகவும், நாட்டை பாதுகாக்க அவர் எடுக்கும் முயற்சிகள் ஒவ்வொன்றும் முன்மாதிரியாக இருப்பதாகவும் பலர் தெரிவித்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பு அவர் போரில் பங்கேற்க தயாரான புகைப்படங்கள் வைரலானது. அதனை சிலர் கிண்டல் செய்திருந்த நிலையில், அவர்களுக்கு விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில் தான் பல ஆண்டுகளாக ஏர்சாஃப்ட் வீரராக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இதனால், அவரை கிண்டல் செய்தவர்கள் வாயடைத்துபோயுள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News