UNSC: உதவித்தொகையை குறைத்த இந்தியா! ஐநா பாதுகாப்பு சபையின் நடவடிக்கை என்னவாக இருக்கும்?

UNSC Membership And India : ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்தாலும் ஏன் இன்னும் நிறைவேறவில்லை?

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 27, 2024, 12:48 AM IST
  • UNSC: தொகையை குறைத்த இந்தியா!
  • ஐநா பாதுகாப்பு சபையின் நடவடிக்கை
  • ஐநா பாதுகாப்பு சபை நிரந்தர உறுப்பினர்
UNSC: உதவித்தொகையை குறைத்த இந்தியா! ஐநா பாதுகாப்பு சபையின் நடவடிக்கை என்னவாக இருக்கும்? title=

ஐக்கிய நாடுகள் சபையின் (UN) மிகவும் சக்திவாய்ந்த அமைப்பான UNSC என்பது சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பு கொண அமைப்பாகும். உலகின் முக்கிய பிரச்சினைகளுக்கு UNSC யிடமிருந்து ஒப்புதல் பெறுவதும் அவசியம். சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை பராமரிக்க அல்லது எங்கும் தடைகளை விதிக்க UNSCக்கு அதிகாரம் உள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்திர உறுப்பு நாடாக மாற்றுவதில் சீனா மிகப்பெரிய தடையாக மாறிய நிலையில், ​​இந்தியா இப்படி பாடம் கற்பித்தது. இந்தியா UNSC நிரந்தர இருக்கை சீனா: ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா உரிமை கோருவதில் தடைகளை உருவாக்குவதை சீனா நிறுத்தவில்லை. இந்தியாவும் கடுமையான நடவடிக்கை எடுத்து UNSC க்கு வழங்கப்பட்ட தொகையை பாதியாக குறைத்துள்ளது.
 
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்புரிமை பெறுவதில் தடைகளை ஏற்படுத்துவதை சீனா நிறுத்தவில்லை. இந்தியாவுக்கு பிரச்சனை ஏற்படுத்தும் எந்தவொரு சந்தர்ப்பத்தையும் சீனா தவறவிடாது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சி   நிரந்தர உறுப்பினர் பதவியின் அடிப்படையில்  சீனா மீது இந்தியா வாய்மொழி தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | நியூயார்க் நகரம் கடலில் மூழ்கும் என எச்சரிக்கும் நாசா! அதிர்ச்சிகரமான ஆய்வு

வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் முதல் ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்திய தூதர் ருசிரா காம்போஜ் என இந்தியாவுக்குக் ஆதரவாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்புரிமையை எந்த மேற்கத்திய நாடுகளும் எதிர்க்கவில்லை என்றும், சீனா மட்டுமே அந்த காரணமாக இருக்கிறது என சுட்டி காட்டுகிறார்கள்.

ஐக்கிய நாடுகள் சபைக்கான பட்ஜெட்டை குறைத்த இந்தியா 
பிப்ரவரி 1ஆம் தேதி அறிவிக்கப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் ஐக்கிய நாடுகள் சபைக்கு அளித்து வந்த உதவியை பாதியாகக் குறைத்துள்ளது இந்தியா. கடந்த ஆண்டு ரூ.382 கோடி உதவி வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ரூ.175 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. சீனாவின் சூழ்ச்சிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா எடுக்கும் கடினமான நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | PML-N: பஞ்சாப் மாகாணத்தின் முதல் பெண் முதலமைச்சர்! சரித்திரம் படைத்த மரியம் நவாஸ்

ஐநா சபையில் இந்தியாவுக்கு சீனா தடை 
இந்தியாவின் இந்த நடவடிக்கை, ஐக்கிய நாடுகள் மீதான அழுத்தத்தை அதிகரிப்பதற்கான ஒரு வழியாகவே பார்க்க முடியும் என்று தூதரக விவகாரங்களில் வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்தியா ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினருக்கான வலுவான போட்டியாளராக உள்ளது, ஆனால் சீனா தனது வீட்டோவைப் பயன்படுத்தி பாதையை கடினமாக்குகிறது.

பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் போன்ற நாடுகளும் இந்தியாவுக்கு ஆதரவாக உள்ளன. யுஎன்எஸ்சி ஐந்து நிரந்தர உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ரஷ்யா மற்றும் பிரான்ஸ் மற்றும் 10 நிரந்தரமற்ற உறுப்பினர்கள் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் உள்ளனர்.

மேலும் படிக்க | Udyogini: பெண்களுக்கான சிறப்பு திட்டம்! வட்டியில்லாத கடனை பெற முடியும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News