வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச் சூடு: அவசரமாக அழைத்துச் செல்லப்பட்ட டிரம்ப்!!

திங்களன்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு வெளியே திடீரென துப்பாக்கிச் சூடு ஏற்பட்டது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 11, 2020, 11:09 AM IST
  • அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச் சூடு.
  • ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
  • வெள்ளை மாளிகைக்குள்ளே எந்த பாதுகாப்பு மீறலும் இல்லை எனத் தகவல்.
வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச் சூடு: அவசரமாக அழைத்துச் செல்லப்பட்ட டிரம்ப்!! title=

திங்களன்று அமெரிக்காவின் (America) வெள்ளை மாளிகைக்கு வெளியே திடீரென துப்பாக்கிச் சூடு ஏற்பட்டது. இதன் காரணமாக, அமெரிக்க ரகசிய சேவை அதிகாரிகள், பத்திரிக்கை சந்திப்பின் இடையில் இருந்த அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்பை (Donald Trump), சந்திப்பு நடந்த அறையிலிருந்து திடீரென அழைத்துச் சென்றனர்.

பல நிமிடங்கள் கழித்து ஊடக அறைக்குத் திரும்பிய டிரம்ப், ஒரு நபர் சட்ட அமலாக்கத் துறையால் சுட்டுக் கொல்லப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகக் கூறினார். சந்தேகத்திற்கு இடமளிக்கும் விதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த அந்த நபரிடம் ஆயுதம் இருந்ததாகத் தனக்கு தகவல் வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

"வெள்ளை மாளிகைக்கு வெளியே ஒரு துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது" என்று டிரம்ப் கூறினார். "அனைத்தும் கட்டுப்பாட்டில் இருப்பதாகத் தெரிகிறது. ... ஆனால் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது, ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அந்த நபரின் நிலை பற்றி இன்னும் எந்தத் தகவலும் இல்லை." என்று அவர் மேலும் தெரிவித்தார்.

வெள்ளை மாளிகை (White House) மைதானத்தின் விளிம்பில் வேலி அருகே துப்பாக்கிச் சூடு நடந்ததாக அவர் கூறினார்.

இரகசிய சேவைப் பிரிவு (Secret Service) ஒரு ட்வீட்டில் "USSS அதிகாரி சம்பந்தப்பட்டுள்ள துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. ஒரு USSS அதிகாரியும் மற்றொரு நபரும் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். எனினும் இந்த சம்பவம் நடந்த போது, வெள்ளை மாளிகை கட்டிடத்திற்குள் யாரும் வரவில்லை, இந்த இடத்தின் பாதுகாப்பிற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவித்தது.

டிரம்ப் செய்தியாளர் சந்திப்பிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டவுடன், சிறிதி நேரத்திற்கு அந்த அறை பூட்டப்பட்டது. துப்பாக்கிச் சூட்டில் வேறு யாரும் காயமடையவில்லை என்று டிரம்ப் கூறினார். இரகசிய சேவைப் பிரிவின் உடனடி நடவைக்கையை பாராட்டிய அவர், இந்த சமபவம் தொடர்பான மற்ற விவரங்களை பின்னர் ரகசிய சேவைப் பிரிவு தெரிவிக்கும் என்று கூறினார்.  

ALSO READ: அடுத்த அமெரிக்க அதிபர் யார்... 2016-ல் ட்ரம்ப் வருவார் என்பதை கணித்தவர் கருத்து என்ன...!!!

அதிபர் டிடம்ப் பங்குச் சந்தைகள் பற்றி பேசிக்கொண்டிருந்த போது, ஒரு ரகசிய சேவைப் பிரிவு அதிகாரி, மேடைக்கு வந்து அவரை அழைத்துச் சென்றார்.  கருவூல செயலாளர் ஸ்டீவன் முனுச்சின் மற்றும் மேலாண்மை அலுவலகம் மற்றும் பட்ஜெட் இயக்குனர் ரஸ் வொட் ஆகியோரும் அறைக்கு வெளியே அழைத்துச் செல்லப்பட்டனர்.

ட்ரம்ப் செய்தியாளர்களிடம் தான் பத்திரிக்கையாளர் அறையிலிருந்து, வெஸ்ட் விங்கில் உள்ள ஓவல் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவித்தார்.

ALSO READ: 45 நாட்களில் Tik Tok, WeChat ஆகியவை அமெரிக்காவில் தடை செய்யப்படும்: டிரம்ப்

Trending News