ஐக்கிய நாடுகளின் உட்டா மாகாணத்தை சேர்ந்த இரு சிறுவர்கள், தனி விமான திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்!
கடந்த வியாழன் அன்று உட்டா மாகானத்தின் கிராமப்புற பகுதியை சேர்ந்த இரு சிறுவர்கள், அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனி நபர் விமானத்தினை கடத்தி சுமார் 15 மைல்கள் பயணம் செய்துள்ளனர். இச்சம்பவத்தினை நேரில் பார்த்த சிலர் உட்டா காவல்துறைக்கு புகார் அளித்துள்ளனர்.
சம்பத்தை நேரில் பார்த்தவர்கள் கொடுத்த புகாரின் பேரில் அந்த இரு சிறுவர்களையும் ஐக்கிய நாடுகள் வழித்தடம் எண்: 40-ல் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களின் வயது முறையே 14 மற்றும் 15 என அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் இந்த இரு சிறவர்களும் மாகாணத்தின் வடக்கு பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும், கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறி தங்களது நண்பர்களுடன் தங்கி வந்துள்ளனர் எனவும் காவல்துறை அறிக்கை தெரிவிக்கின்றது.
விமானத்தை திருடி சிறுவர்கள் ஆரம்பத்தில் வாஸ்ட்சா பிரண்ட் பகுதி பறக்க முயன்றதாகவும், பின்னர் தங்களது முடிவை மாற்றிக் கொண்டதாகவும் தெரிகிறது. பின்னர் இச்சிறுவர்கள் இருவரும் வெர்னல் மலைப் பகுதி மையத்தில் பிடிப்பட்டனர் எனவும் இந்த அறிக்கை குறிப்பிடுகின்றது. விசாரணையில் சாகச பயணம் மேற்கொள்ள நினைத்து தாங்கள் இவ்வாறு பறக்க முயன்றதாக காவல்துறையிடம் சிறுவர்கள் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையின் கண்கானிப்பில் உள்ள இச்சிறுவர்களின் மீது வழக்கு பதியப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.