வயது என்பது வெறும் எண் மட்டும் தான், வயதிற்கு நம் செயல்பாட்டிற்கும் சம்பந்தம் இல்லை என பெரு நாட்டு தாத்தா ஒருவர் மீண்டும் நிரூபித்துள்ளார்!
முதியவர்கள் குழந்தைகளை போல் நடந்துக்கொள்வதை நாம் பார்த்திருக்கின்றோம், ரசித்திருக்கின்றோம். காரணம் முதியவர்கள் உடல் அளவில் மட்டுமே முதிற்சி அடைகின்றனர். மனதளவில் மீண்டும் குழந்தையாய் மாறிவிடுகின்றனர்.
அந்த வகையில் பெரு நாட்டைச் சேர்ந்த முதியவர் ஒருவர் தன்னையும் மறந்து பாடல் ஒன்றுக்கு நடணம் ஆடியுள்ளார். இந்த நிகழ்வின் வீடியோ பதிவினை எட்கிராட் டாசா என்பவர் தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார். தன் கையில் இருக்கும் கைத்தடியினை தூக்கி எறிந்துவிட்ட நடணம் ஆடும் இந்த தாத்தா தான் தற்போது இணைய பிரியர்களின் தீனி.
சுமார் 3 நிமிடம் ஒளிப்பரப்பாகும் இந்த விடியோவினை இதுவரை 174 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர். மேலம் 1.8 மில்லியன் ரசிகர்கள் தங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளனர்.