அமெரிக்க அதிபர் தேர்தல்: விலகினார் விவேக் ராமசாமி... முன்னாள் அதிபருக்கு திடீர் ஆதரவு!

America Presidential Election Campaign: குடியரசு கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட இருந்த விவேக் ராமசாமி தனது பிரச்சாரத்தை நிறுத்திக்கொள்வதாக இன்று அறிவித்தார். 

Written by - Sudharsan G | Last Updated : Jan 16, 2024, 12:05 PM IST
  • அவருக்கு வயது 38 ஆகும்.
  • இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் விவேக் ராமசாமி
  • விவேக் ராமசாமி பயோடெக் தொழில்முனைவர் ஆவார்.
அமெரிக்க அதிபர் தேர்தல்: விலகினார் விவேக் ராமசாமி... முன்னாள் அதிபருக்கு திடீர் ஆதரவு! title=

America President Election: 2024ஆம் ஆண்டின் குடியரசுக் கட்சிகளுக்குள்ளேயே வேட்பாளரை தேர்ந்தெடுக்க நடைபெற்ற தேர்தலில் மோசமான செயல்பாட்டிற்குப் பிறகு விவேக் ராமசாமி (Vivek Ramasamy) அதிபர் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தொடர்ந்து அவர், "அடுத்த ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்பை தேர்வு செய்ய உறுதி எடுப்போம்" என்று அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகிய பிறகு விவேக் ராமசாமி கூறினார். 

பயோடெக் தொழில்முனைவரான விவேக் ராமசாமிக்கு வயது 38. தற்போது இவர் தனது முன்னாள் போட்டியாளரும், முன்னாள் ஜனாதிபதியுமான டொனால்ட் டிரம்பிற்கு தனது ஆதரவு கரத்தை நீட்டியுள்ளார். இதற்கு முன்னர் ஒருமுறை, டொனால்ட் டிரம்பை "21 ஆம் நூற்றாண்டின் சிறந்த ஜனாதிபதி" என்று புகழ்ந்தது இங்கு நினைவுக்கூரத்தக்கது. அதே நேரத்தில் குடியரசுக் கட்சி வாக்காளர்களை புதியவர்களை தேர்வு செய்யவும் வலியுறுத்தினார்.

விவேகம் ராமசாமி, டிரம்பை முன்மாதிரியாக வைத்து தனது சொந்த பரபரப்புரையில் பின்பற்றினார், தன்னை ஒரு கவர்ச்சியான, வெளிப்படையான ஜனரஞ்சகவாதியாகக் வெளிக்காட்டிக் கொண்டார் எனலாம். அவர் தொடர்ந்து தன்னை எதிர்த்து போட்டியிடுபவர்களை கடுமையான கருத்துகளால் தாக்கி வந்தார்.

மேலும் படிக்க | திக்குமுக்காடும் ஏமன்... அமெரிக்காவும் இங்கிலாந்தும் இணைந்து தாக்குதல் - பின்னணி என்ன?

தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகிய அவர், "இன்றிரவு, நான் உண்மையை எதிர்கொள்ள வேண்டும். ஏற்றுக்கொள்வது எனக்கு கடினமாக இருந்தது, ஆனால் நாங்கள் உண்மை நிலவரத்தை பார்த்தோம். உண்மை என்னவென்றால், இன்று இரவு நாங்கள் எதிர்பார்த்த பலனைப் பெறவில்லை. அதனால்தான் இந்த ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தை இடைநிறுத்த முடிவு செய்துள்ளேன்," என்றார். மேலும், நியூ ஹாம்ப்ஷயரில் டிரம்புடன் பிரசாரம் செய்யப் போவதாகவும் விவேக் ராமசாமி கூறினார். 

டிரம்பிற்கு தனது ஆதரவு குறித்து அவர் கூறுகையில், "டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவிக்க இன்று இரவு முன்னதாகவே அழைத்தேன். இனிமேல், ஜனாதிபதி பதவிக்கு எனது முழு ஆதரவும் அவருக்கு இருக்கும்" என்றார். மேலும், "நாட்டின் எதிர்காலத்திற்கான எங்கள் பார்வையைப் பகிர்ந்து கொள்வதற்காக நியூ ஹாம்ப்ஷயரில் நடைபெறும் பேரணியில் டொனால்ட் டிரம்புடன் நானும் இணைவேன்" எனவும் உறுதியளித்தார்.

விவேக்கை தாக்கிய டிரம்ப்

இதற்கு முன்னர் விவேக் ராமசாமியை டிரம்ப் தாக்கி பேசியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. டிராம்பின் சட்ட சிக்கல்கள் மற்றும் வலுவான அரசியல் எதிரிகள் அவரை பலவீனமான வேட்பாளராக மாற்றியதாக கூறி ராமசாமி சமீபத்தில் டிரம்பிற்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுத்தார். சமூக ஊடகங்களில் ராமசாமியைத் தாக்கி டிரம்ப் பதிலளித்தார். விவேக் ராமசாமியின் பிரச்சாரத்தை "வஞ்சகமானது" மற்றும் "மிகவும் தந்திரமானது" என டிரம்ப் சாடினார். 

பிரச்சாரத்தின் போது ட்ரம்பின் மிகப்பெரிய ஆதரவாளர்களில் ராமசாமியும் ஒருவராக இருந்தார். அவர் ட்ரம்பை "21 ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த ஜனாதிபதி" என்று புகழ்ந்தார், மேலும் அவரது வேட்புமனுவுக்கு ஏராளமான குற்றவியல் குற்றச்சாட்டுகள் மற்றும் தடைகள் இருந்தபோதிலும் அவருக்கு ஆதரவாக நின்றார்.

மேலும் படிக்க | இஸ்ரேல் - ஹமாஸ் போர்... 100 நாட்களில் 10,000 குழந்தைகள் பலி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News