புதுடெல்லி: 1971 போருக்குப் பிறகு, இந்தியா 2019 பிப்ரவரி 26, அன்று பாலகோட்டில் முதன்முறையாக வான்வழித் தாக்குதலை நடத்தியது. அதில் பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமதுவின் பயங்கரவாத முகாமை அழிக்கப்பட்டது. பாலகோட் விமானத் தாக்குதல் இன்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. ஜம்மு-காஷ்மீரில் புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 40 மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) வீரர்கள் கொல்லப்பட்டனர்.
எல்லை கட்டுப்பாட்டை தாண்டி உள்ள பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.
2019 பிப்ரவரி 26, அன்று அதிகாலை 3.30 மணியளவில், 12 மிராஜ் 2000 போர் விமானங்கள் கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடந்து, பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது (JeM) பயங்கரவாத முகாம்களை அழித்தனர். யூரி மற்றும் பாலகோட் வான்வழித் தாக்குதல்களால் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கை, இனி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினால், இந்தியா (India) பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது, தக்க பதிலடி கொடுக்கும் என்பதை நிரூபித்தது.
ALSO READ | Pakistan பிரதமர் இம்ரானின் கட்சி அலுவலகத்தில் பத்திரிகையாளர் மானபங்கம்!!!
பாலகோட் வான்வழித் தாக்குதல் தொடர்பான முக்கிய விஷயங்கள்
1. பாலகோட்டில் விமானப்படையின் நடவடிக்கையின் ரகசியத்தை காக்க, இதற்கு இந்திய ஆபரேஷனின் ஏழாவது மற்றும் ஒன்பதாவது படைப்பிரிவுகளால் இயக்கப்படும் 'ஆபரேஷன் பந்தர்' (Operation Bandar) என்ற குறியீட்டு பெயர் வழங்கப்பட்டது.
2. 2019, பிப்ரவரி 14, அன்று புல்வாமாவில் பாகிஸ்தான் (Pakistan) பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாலகோட் வான்வழி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த சிஆர்பிஎஃப் கணவாய் மீது கார் மோதி நடத்தப்பட்ட வெடி குண்டு தாக்குதலில் 42 மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) ஜவான்கள் கொல்லப்பட்டனர்.
3. பாலகோட் விமானத் தாக்குதலுக்கு மிராஜ் -2000 மற்றும் சுகோய் எஸ்யூ -30 ஆகியவை இந்திய விமானப்படையால் பயன்படுத்தப்பட்டன.
4. பால்கோட் விமானத் தாக்குதலில் முக்கியமாக குவாலியர் விமானப்படை தளத்திலிருந்து பறந்த 12 மிராஜ் 2000 களால் நடத்தப்பட்டது.
5. இந்திய போர் விமானங்கள் பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது (JeM) பயங்கரவாத முகாமை தகர்த்தன. இந்த தாக்குதலில் இருநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR