சிறுகோள் மீது NASA - SpaceX ஏவும் விண்கலம்; பூமிக்கு வரும் ஆபத்து தவிர்க்கப்படுமா..!!

விண்வெளியில் சுற்றும் சிறுகோள்களால் ஏற்படக் கூடிய ஆபத்தைத் தவிர்க்க அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் இணைந்து விண்கலம் ஒன்றை விண்வெளிக்கு அனுப்புகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 24, 2021, 02:03 PM IST
  • நாசா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலத்தை விண்ணில் செலுத்தும்
  • கலிபோர்னியாவில் உள்ள வாண்டன்பெர்க் தளத்தில் இருந்து விண்கலம் ஏவப்படும்
  • எதிர்கால ஆபத்தைத் தவிர்ப்பதே இதன் நோக்கம்
சிறுகோள் மீது  NASA - SpaceX ஏவும் விண்கலம்; பூமிக்கு வரும் ஆபத்து தவிர்க்கப்படுமா..!! title=

வாஷிங்டன்: நாசா பூமியை சுற்றி வரும் பொருட்களை, குறிப்பாக பூமிக்கு அருகில் உள்ள பொருட்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. தற்போது, ​​460 அடிக்கும் அதிகமான உயரத்தில், பூமிக்கு அருகில் உள்ள 10,000 பொருள்கள் உள்ளன. ஆனால் அவை கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு பூமியைத் தாக்க வாய்ப்பில்லை என்பதால், தற்போது பூமிக்கு உடனடி அச்சுறுத்தலும் இல்லை. எனினும்  முன்னெச்சரிக்கை அவசியம்.

இந்நிலையில், எதிர்கால அச்சுறுத்தல்களைத் தவிர்க்க அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் விண்கலம் ஒன்றை விண்வெளிக்கு அனுப்புகிறது. இந்த விண்கலத்தை ஏவுவதன் நோக்கம் விண்வெளியில் சுற்றும் சிறுகோள் ஒன்றை தாக்கி அதன் பாதையை மாற்றுவதே. எதிர்காலத்தில் பூமியை சிறுகோள் தாக்குதலில் இருந்து காப்பாற்ற  விண்கலத்தை ஏவும்  நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

Falcon-9  ராக்கெட் 

நாசா (NASA) மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் ஆகிய விண்கலங்கள் மோதும் சிறுகோள்  (Asteroid) காரணமாக பூமிக்கு எந்த ஆபத்தும் இல்லை ஜீ நியூஸிற்கு சொந்தமான இணையதளமான WION  செய்தி வெளியிட்டுள்ளது. எதிர்காலத்தில் பூமியை நோக்கி நகரும் சிறுகோள், பூமிக்கு அச்சுறுத்தலாக மாறுவதற்கு முன்பு அதை எவ்வாறு அகற்றுவது என்பதைக் கண்டறிய அனுப்பப்படுகிறது. இது புதன்கிழமை கலிபோர்னியாவில் உள்ள வாண்டன்பெர்க் விண்வெளிப் படைத் தளத்தில் இருந்து SpaceX-ன் Falcon-9 ராக்கெட்டில் ஏவப்படும்.

DART மிஷன்

இந்த விண்கலம் மணிக்கு 1500 மைல் வேகத்தில் இந்த சிறுகோள் மீது மோதும், அதனால் சிறுகோள் திசையில் ஏற்படும் மாற்றத்தை பதிவு செய்ய முடியும். இதனுடன், சிறுகோளின் வளிமண்டலம், உலோகம், தூசி, மண் போன்றவை மோதலின் போது ஆய்வு செய்யப்படும். இந்த பணியின் பெயர் இரட்டை சிறுகோள் திசைமாற்ற சோதனை (Double Asteroid Redirection Test - DART) என்று நாசா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. கைனெடிக் இம்பாக்டர் டெக்னிக் (Kinetic Impactor Technique)  என்ற நுட்பம் இதில் பயன்படுத்தப்படுகிறது

ALSO READ | விண்வெளியில் போர் மூண்டால் சாமான்யரின் வாழ்க்கையும் ஸ்தபித்து விடும்..!!!

$330 மில்லியன் திட்டம்

DART விண்கலம் 2600 அடி விட்டம் கொண்ட டிடிமோஸ் (Didymos) என்ற சிறுகோள் நோக்கி நகரும். 525 அடி விட்டம் கொண்ட ஒரு சிறிய நிலவு போன்ற விண்கல் சுற்றி வருகிறது. நாசா விஞ்ஞானி தாமஸ் ஸுபர்சென்  $330 மில்லியன் திட்டத்தைப் பற்றி, கூறுகையில், இது ஒரு முன்னோடியான முயற்சி என குறிப்பிட்டார். பூமிக்கு உள்ள எதிர்கால அச்சுறுத்தல்களைத் தவிர்க்க மட்டுமே DART பணி செயல்படுத்தப்படுகிறது என்று நாசா விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

ALSO READ | செயற்கைக்கோளை அழித்த ரஷ்யா; விண்வெளியில் அதிகரிக்கும் குப்பை; கலக்கத்தில் NASA..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News