US Elections:‘நீங்க கொஞ்சம் Shut Up பண்ணுங்க?’ Oviya style-ல் Trump-ஐ அடக்கிய Biden!!

நவம்பர் 3 ம் தேதி அமெரிக்கத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இதற்கு 35 நாட்களுக்கு முன்னதாக டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோ பிடென் ஆகியோர் ஒருவருக்கொருவர் திறமை மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் குற்றம் சாட்டி வேட்பாளர் விவாதங்களைத் துவக்கி வைத்தனர்.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 30, 2020, 04:17 PM IST
  • நீங்கள் சிறிது நேரம் அமைதியாக இருக்கிறீர்களா? – பிடென்.
  • தொற்றுநோயைக் குறைத்து மதிப்பிட்டதற்காக ட்ரம்பை விமர்சித்தார் பிடென்.
  • சீனாவும், இந்தியாவும் சரியான எண்ணிக்கைகளை அளிப்பதில்லை – டிரம்ப்.
US Elections:‘நீங்க கொஞ்சம் Shut Up பண்ணுங்க?’ Oviya style-ல் Trump-ஐ அடக்கிய Biden!! title=

புதுடெல்லி: அமெரிக்கத் தேர்தல்கள் (American Elections) உலகமே உன்னிப்பாக கவனிக்கும் தேர்தல்கள். உலகின் மிக முக்கியமான நபரை தேர்ந்தெடுக்கும் செயல்முறை அது என்பதால், பலரது கவனமும் அமெரிக்கத் தேர்தல்கள் பக்கம் தற்போது திரும்பியுள்ளன. அதிபர் வேட்பாளர்களின் தேர்தல்களுக்கு முந்தைய விவாதங்கள் எப்போதுமே ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் நிகழ்வாகும். தற்போதைய வேட்பாளர்ளான டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோ பிடெனின் விவாதத்திலும் கூச்சலுக்கும், கேலிப் பேச்சுகளுக்கும், வசைகளுக்கும், நக்கல் பேச்சுகளுக்கும் குறையிருக்கவில்லை. விவாதத்தில் அனல் பறந்தது என்றுதான் கூற வேண்டும்.

நவம்பர் 3 ம் தேதி அமெரிக்கத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இதற்கு 35 நாட்களுக்கு முன்னதாக டொனால்ட் டிரம்ப் (Donald Trump) மற்றும் ஜோ பிடென் (Joe Biden) ஆகியோர் ஒருவருக்கொருவர் திறமை மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் குற்றம் சாட்டி வேட்பாளர் விவாதங்களைத் துவக்கி வைத்தனர்.

கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் காரணமாக இரு வேட்பாளர்களும் வழக்கமான ஹேண்ட்ஷேக், அதாவது கைகுலுக்கல் இல்லாமல் மேடைக்கு வந்தனர். இருப்பினும், இது அவர்களுக்கு இடையேயான கசப்பை மட்டுமே அதிகரித்தது. டிரம்பிற்கும் பிடெனுக்கும் இடையில் ஒரு தனிப்பட்ட வாக்குவாதம் தொடங்கியது. உச்சநீதிமன்ற காலியிடம், கொரோனா வைரஸ் மற்றும் அமெரிக்க சுகாதார அமைப்பு தொடர்பான பிரச்சினைகளைப் பற்றி பிடன் பேசத் தொடங்கும்போதெல்லாம் டிரம்ப் அவரை இடைமறித்துக்கொண்டே இருந்தார்.

முதல் 20 நிமிடங்களிலேயே ஆத்திரமடைந்த பிடென் அமெரிக்க அதிபரிடம் திரும்பி, “நீங்கள் சிறிது நேரம் அமைதியாக இருக்கிறீர்களா?” என்று கேட்டார்.

பிடென் ஒரு பலமற்ற வேட்பாளர் என டிரம்ப் கூறிக்கொண்டே போனபோது, “இந்த கோமாளி பக்கத்தில் இருந்தால், ஒரு வார்த்தையைக் கூட பேச முடியாது” என்று பிடென் கூறினார்.  

“அவர் இதுவரை சொன்னது எல்லாம் பொய். அவரது பொய்களைப் பற்றி கூற நான் இங்கு வரவில்லை. அவர் ஒரு பொய்யர் என்பது அனைவருக்கும் தெரியும்” என்றார் பிடென்.

தேர்தல் கணிப்புகளில் பிடென் தற்போது முன்னணியில் உள்ளார். அனைவரும் நினைத்தது போலவே, COVID-19 தொற்றுநோயைக் காரணம் காட்டி பிடென் டிரம்பை சாடினார். இதுவரை 200,000 க்கும் அதிகமான உயிர்களைக் கொன்ற COVID-19 தொற்றுநோய் அமெரிக்காவை ஆட்டிப்படைத்து வருகிறது.

ALSO READ: 2021 நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டார் அமெரிக்க அதிபர் Donald Trump!!

தன்னை தற்காத்துக் கொண்ட டிரம்ப், இது “சீனாவின் தவறு” என்றும், தனது அரசாங்கம் வைரஸிலிருந்து நாட்டைக் காப்பாற்ற மிகச் சிறந்த நடவடிக்கைகளை எடுத்தது என்றும் கூறினார்.

தொற்றுநோயைக் குறைத்து மதிப்பிட்டதற்காக ட்ரம்பை விமர்சித்த பிடென், தனி மனித இடைவெளி மற்றும் பிற தொற்றுநோய் நெறிமுறைகளைக் கையாள்வதில் அதிபர் முற்றிலும் பொறுப்பற்றவராக நடந்து கொண்டார் என்று கூறினார்.

எனினும் அதற்கும் டிரம்ப், “இது சீனாவின் தவறு, இப்படி நடந்திருக்கக்கூடாது," என்று கூறினார்.

“சீனாவும், இந்தியாவும் சரியான எண்ணிக்கைகளை அளிப்பதில்லை. சீனாவில் எத்தனை பேர் இறந்துள்ளார்கள் என்பது உங்களுக்குத் தெரியாது.

உங்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பல ஆளுநர்கள் அதிபர் டிரம்ப் ஒரு அற்புதமான வேலையை செய்துள்ளார் என்று கூறினார்கள். இன்னும் சில வாரங்களில் நம்மிடம் இதற்கான தடுப்பு மருந்து இருக்கும். முன்பை விட இப்போது மிகக் குறைவான மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள்," என்று தன் பக்க நியாயங்களை எடுத்துறைத்தார் டிரம்ப்.

குறிப்பிடத்தக்க வகையில், 7.2 மில்லியனுக்கும் அதிகமான நோய்த்தொற்றுகள் மற்றும் 206,000 க்கும் அதிகமான இறப்புகளுடன் COVID-19 ஆல் உலகின் மிக மோசமான பாதிப்புக்குள்ளான நாடு அமெரிக்காவாகும்.

ALSO READ: COVID-19 தடுப்பூசியை உருவாக்கவும், விநியோகிக்கவும் WHO உடன் சேர மாட்டேன்: US

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News