சீனாவின் புதிய பிரதமராக லி கியாங்க் நியமிக்கப்பட்டுள்ளார். சீனாவின் இரண்டாவது அதிகாரம் மிக்க பதவிக்கு, அதிபர் ஜின் பிங்கிற்கு நெருக்கமான லி கியாங் நியமிக்கப்பட்டுள்ளார். சீனாவில் பிரதமரை, ‘பிரீமியர்’ என்று அழைப்பார்கள். உண்மையில், நம் நாட்டில் பிரதமருக்கு உள்ள அதிகாரங்கள் எதுவும் சீனாவின் பிரீமியர் பதவியில் இருக்கும் அந்நாட்டு பிரதமருக்கு இருக்கது.
சீனாவில் ப்ரீமியர் என்ற பிரதமர், பெயர் அளவில் மட்டும் நாட்டை ஆட்சி செய்வார். சீனாவில், நாட்டின் அதிகாரம் மொத்தமும் அதிபர் ஜி ஜின்பிங் வசம்தான் உள்ளது. இருந்தாலும் சீனாவில் அதிபருக்கு அடுத்த செல்வாக்கும் அதிகாரமும் கொண்ட பதவி பிரீமியர் பதவி என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய பிரதமர் லீ காச்சியாங்கின் (Li Keqiang) பதவிக்காலம் முடிந்ததை அடுத்து புதிய பிரதமர் நியமிக்கபட்டுள்ளார். தற்போதைய பிரதமர், திங்கள்கிழமை முடிவடையும் தேசிய மக்கள் காங்கிரஸ் அமர்வின் போது ஓய்வு பெற உள்ளார்.
மேலும் படிக்க | 6 மாதங்களுக்கு ஒரு முறை நாட்டை மாற்றும் தீவு! 364 ஆண்டு கால நடைமுறை!
சீனாவின் மூன்றாவது முறையாக பொறுப்பேற்றிருக்கும் அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங், சீன நாடாளுமன்றத்தின் வருடாந்திர கூட்டத்தின் போது, பிரதமர் பதவிக்கு தனது நண்பரான லீ காச்சியாங் நியமிக்கப்படுவதாக இன்று அறிவித்தார்.
நாட்டின் பொருளாதாரத்தை நிர்வகிப்பதில் 63 வயதான லி கியாங் எவ்வாறு செயல்படுவார் என்று தெரிந்துக் கொள்வதில் உலகம் ஆர்வமாக உள்ளது. சீனாவின், 'உச்ச தலைவர்' ஜி ஜின்பிங்கின் நெருங்கிய நண்பரான லி கியாங் 2004 முதல் 2007 க்கு இடையில் ஜி ஜிங்பிங்கின் தலைமை அதிகாரியாகவும் பணியாற்றினார்.
ஷாங்காய் முன்னாள் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரான லி கியாங், லி கெகியாங்கிற்குப் பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய பிரதமர் இரண்டு முறை பிரதமர் என்ற வகையில் மொத்தம் பத்து ஆண்டுகள் பதவி வகித்தார்.
மேலும் படிக்க | உடும்பை கடித்து குதறிய 10 அடி நீள கோப்ரா பாம்பு...வீடியோ வைரல்
சீனாவின் சீரற்ற பொருளாதார மீட்சியை மேம்படுத்தும் கடினமான பணியை புதிதாக பதவியேற்கும் லி கியாங் எதிர்கொள்வார். நுகர்வோர் மற்றும் தனியார் துறையினரிடையே பலவீனமான நம்பிக்கையுடனும், உலகளாவிய தலையீடுகளுடனும், மூன்று வருட கோவிட்-19 தடைகளுக்குப் பிறகு நாட்டின் பொருளாதாரம் தள்ளாடுகிறது.
கடந்த ஆண்டு வெறும் 3 சதவீதம் மட்டுமே வளர்ச்சி கண்டுள்ள சீனா, இனி மும்முரமான நடவடிக்கைகளை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் தொடக்க நாளில், பெய்ஜிங் 2023ஆம் ஆண்டு வளர்ச்சி இலக்கை சுமார் 5 சதவீதமாக நிர்ணயித்துள்ளது - இது ஏறக்குறைய மூன்று தசாப்தங்களில் அதன் குறைந்த இலக்கு என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த பத்து ஆண்டுகளாக, சொல்லப்போனால், தற்போதைய பிரதமர் மற்றும் ஜி ஜிங்பிங்கின் ஆட்சிக் காலத்தில், நாட்டின் முக்கிய பதவிகளில் தனது விசுவாசிகளையே அதிபர் ஜி ஜிங்பிங் நியமித்தார். மேற்கு நாடுகளுடன் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் தனக்கு நெருக்கமானவரை பிரதமராக்கும் ஜி ஜிங்பிங்கின் அரசியல் சாணக்கியம் அனைவரும் எதிர்பார்த்த ஒன்றுதான்.
மேலும் படிக்க | Viral Video: சீனாவின் ‘புழுக்கள்’ மழை பெய்ததா... உண்மை நிலை என்ன!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ