இன்றைய (28-04-2018) உங்கள் ராசிபலன் - பார்க்க!

சனிக்கிழமையான இன்றைய நாள் எப்படி இருக்கும்: உங்கள் அதிஷ்ட நிறம் மற்றும் அதிஷ்ட எண் - உள்ளே!!

Last Updated : Apr 28, 2018, 08:15 AM IST
இன்றைய (28-04-2018) உங்கள் ராசிபலன் - பார்க்க! title=

மேஷம்: 
இன்று உடல் உபாதைகள் ஏதேனும் இருப்பின், இக்கால கட்டத்தில் தீரும். வீண் வழக்குகளிலிருந்து விடுபடுவீர்கள். அலைச்சல்களுடன் நடந்த செயல்கள் நல்லபடியாக முடிவடையும். வெளியில் கொடுத்திருந்த பணம் திரும்பவும் கை வந்து சேரும். சிலர் மனம் விரும்பிய வீட்டிற்குக் குடி பெயர்வார்கள். தக்க சமயத்தில் உயர்ந்தவர்களின் நட்பைப் பெற்று கௌரவக் குறைவு ஏற்படாமல் காக்கப்படுவீர்கள். களவு போயிருந்த பொருட்கள் திரும்பவும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

ரிஷபம்: 
இன்று வேலையாட்களிடம் தொழில் சம்பந்தப்பட்ட ரகசியங்களை வெளிப்படையாக சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பேசுங்கள். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் கடுமை காட்டாதீர்கள். முடிந்த வரை கடன் தருவதை தவிர்க்கப் பாருங்கள், சிலருக்கு பங்குதாரர்களுடன் மோதல்கள் வரும். அனுபவமிக்க வேலையாட்களை ஊக்கத்தொகை, சலுகைகள் என கொடுத்து தக்க வைத்துக் கொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

மிதுனம்:  
இன்று மனஇறுக்கம், ஏமாற்றம், வீண் விரயம், ஒருவித படபடப்பு, நம்பிக்கையின்மை வந்துபோகும். தடைபட்டுக் கொண்டிருந்த கல்யாணம் கூடி வரும். இனி உங்கள் ரசனைக்கேற்ற வாழ்க்கைத்துணை அமைவார். விடுபட்ட பாடத்தில் வெற்றி பெறுவீர்கள். சிலரின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாறாதீர்கள். முகப்பரு, தோலில் நமைச்சல், கனவுத் தொல்லை வந்து நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

கடகம்: 
இன்று உங்களுக்கு எதிராக இருந்த நிலைமை மாறும். வாழ்க்கைத்துணையுடன் இருந்த பிணக்க நிலை மாறும். முன்கோபம், பிடிவாதம் நீங்கும். குடும்பத்தில் இருந்த வந்த மந்த நிலை மாறி உற்சாகம் துளிர்விடும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

சிம்மம்: 
இன்று செலவுகளைக் கட்டுப்படுத்தப்பட வேண்டிய நேரம் இது. குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும். நீண்ட நாட்களாக குழந்தை பாக்யம் வேண்டி காத்திருப்பவர்களுக்கு நற்பலன் கிட்டும் நேரம். சகோதர சகோதரிகள் உதவுவார்கள். கூட்டுக் குடும்பமாக மகிழ்ச்சியாக இருக்கலாம். தங்களைப் பிரிந்து படிப்புக்காக வெளியில் செல்ல வேண்டியது இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

கன்னி: 
இன்று எடுத்த காரியத்தை சாமர்த்தியமாக பேசி வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். நீண்ட தூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நன்மையாக இருக்கும். கூர்மையான மதி நுட்பத்தால் எந்த பிரச்சனையையும் எளிதாக தீர்த்து விடுவீர்கள். 

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

துலாம்: 
இன்று உடன்பணிபுரிபவர்களை மதித்து நடந்து கொள்வது திடீர் அவமானங்களை குறைக்கும். சீக்கிரமாக மக்கும் அல்லது அழியும் பொருட்களை வியாபாரம் செய்வது நல்ல லாபத்தை தரும். தம்பதியர் அன்னியோன்யம் அதிகரிக்கும். உறவினர்களின் வீட்டு விசேஷங்களில் குதூகலமாக கலந்து கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

விருச்சிகம்: 
இன்று வியாபாரிகள் அயலார் பொருட்களில் ஆசைப்படும் நிலை தோன்றும். அக்னி பயம், பாம்பு பயம் இரண்டும் ஏற்படும். சிவபக்தி கைகொடுக்கும். பிள்ளைகளின் பள்ளியில் பெறும் பரிசுகளும் வீட்டு உபயோக பொருட்கள் அதிகரிப்பதும் வெளிநாட்டு கடிதத்  தொடர்புகள் கணிச லாபம் தருவதும் குடும்பத்தில் மகிழ்ச்சியை கூட்டும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

தனுசு: 
இன்று ரியல் எஸ்டேட் துறையினர் ஒப்பந்தங்களை முடித்து விடுவது நல்லது. கடும் முயற்சிகளின் பேரில் வேலை கிடைக்கும். அரசு வழி உதவிகள் தடையில்லாமல் கிடைக்கும். குடும்பப் பெண்கள் எண்ணியது கிடைக்கப் பெறுவர். வண்டி, வாகனம் நல்ல லாபத்தைத் தரும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7

மகரம்: 
இன்று மேல்அதிகாரிகள் உங்கள் நேர்மையான ஆலோசனைகளை மதித்து நடப்பார்கள். உங்களின் மறைமுக எதிரிகளை இனம் கண்டு ஒதுக்குவீர்கள். அதேசமயம் உறவினர் யாரிடமாவது மனக்கசப்பு ஏற்படலாம். கலைத்துறையினருக்கு அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். பாராட்டும், பணமும் உங்கள் உள்ளத்தை உற்சாகப்படுத்தும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

கும்பம்: 
இன்று பல பிரச்னைகள் ஒரே நேரத்தில் சிரமம் தந்தாலும் ஏற்றுக் கொண்டு முயற்சியினால் வெற்றிகளை ஈட்டுவீர்கள். ரியல் எஸ்டேட் துறையினர் முன்னேற்றம் காண்பர். எதிலும் உணர்ச்சிவசப்பட வேண்டாம். கிடைக்கப் பெற்ற பணத்தை தவறான வழிகளில் முதலீடு செய்ய நேரும். ஆகவே மிகுந்த எச்சரிக்கை தேவை.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

மீனம்: 
இன்று கட்டுமானப் பணிகள், ரியல் எஸ்டேட் இவற்றில் முழு முதலீடு செய்ய அதிர்ஷ்டமான நாள். மிகுந்த துணிச்சலுடன் பெரிய கம்பெனிகளை ஆரம்பித்து வெற்றி பெறலாம். அரசாங்க வேலைகளுக்கு ஒப்பந்தங்கள் செய்து கொள்ளலாம். அலுவலகப் பெண்கள் ஆற்றலை காட்ட நல்ல சந்தர்ப்பம் இது.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

Trending News