வாட்ஸ்அப் குரூப்பில் ஏற்பட்ட சண்டையால் குரூப்பின் அட்மினை கொலை செய்த குரூப் நண்பர்கள்!!
ஹரியானாவில் நண்பர்களுக்கிடையிலான வாட்ஸ்அப் குரூப்பில் சண்டை ஏற்பட்டுள்ளதால் அந்த குரூப்பின் அட்மினை கொலைசெய்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்பட்டுள்ளது!
ஹரியானாவின் சோனேபட் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய லவ் ஜோஹர் என்பவர், தன் பகுதியில் உள்ள நண்பர்களைச் சேர்த்து ஒரு வாட்ஸ்அப் குரூப் உருவாக்கியுள்ளார். இந்த குரூப்பிற்கு ‘ஜோஹர்’ என்று பெயரிட்டுள்ளனர்.
அப்பகுதியில் உள்ள கோத்ரா என்ற பிரிவைச் சேர்ந்தவர்கள் பலரும் இந்த குரூப்பில் இணைக்கப்பட்டுள்ளனர். கோத்ரா குலத்தவர் அனைவரும் இணைந்து செயல்படுவதற்காகவே இந்த குரூப் உருவாக்கப்பட்டுள்ளது என்பது தெரிகிறது.
இதையடுத்து, குரூப் அட்மினான லவ், ஞாயிற்றுக்கிழமை இரவு தனது தனிப்பட்ட புகைப்படம் ஒன்றை தன்னை அறியாமல் ஜோஹர் குரூப்பில் பதிவிட்டுள்ளார். இதை தொடர்ந்து, அதே குரூப்பில் உள்ள தினேஷ் என்பவருக்கும் லவ்-க்கும் புகைப்படம் மூலம் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தப் பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் எனக் கூறி, லவ் மற்றும் அவரது நண்பர்கள் மூன்று பேரை தனது நண்பரின் வீட்டுக்கு அழைத்துள்ளார் தினேஷ்.
லவ்-வை தினேஷ்-ன் நண்பர்களை மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் தாக்கியுள்ளனர். இந்த இரு குழுவினரும் தெருவில் சண்டை ஏற்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில், லவ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவரின் நண்பர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
#Haryana: A 28-year-old man was killed & three others were injured after a fight over a message in a WhatsApp group turned violent in Sonepat. Police says, 'Case has been registered against the accused. As of now, all the accused absconding'. pic.twitter.com/IUTwZ4DFLv
— ANI (@ANI) June 5, 2018
இந்த சம்பவம் குறித்து லவ் குடும்பத்தினர் போலீஸில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த வழக்கில் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.