viral! அம்பானி மகனின் நிச்சயதார்த்த அழைப்பு வீடியோ பார்க்க!

முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்த அழைப்பு வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது!

Last Updated : Jun 5, 2018, 05:25 PM IST
viral! அம்பானி மகனின் நிச்சயதார்த்த அழைப்பு வீடியோ பார்க்க! title=

முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானி. இவர் அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்துள்ளார். ஆகாஷ் அம்பானிக்கும், ஸ்லோகா மேத்தாவுக்கும் இடையே காதல் இருந்ததாக தகவல்கள் வெளியாகின. இவர்கள் இருவரும் மும்பையில் உள்ள அம்பானி இன்டர்நேஷனல் பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள். 

இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் என சிறு நிகழ்ச்சி கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி கோவாவில் நடைபெற்றது. இதில் குடும்ப உறுப்பினர்களும், குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அதன் பிறகு மார்ச் மாதம் 28 ஆம் தேதி அம்பானி குடும்பத்தினர் அளித்த விருந்தில் பாலிவுட் மற்றும் விளையாட்டு நட்சத்திரங்கள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர். 

இந்நிலையில், தற்போது இருவருக்கும் அதிகார பூர்வமான நிச்சயதார்த்தம் வரும் 30 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான அழைப்பு இரு வீட்டினரின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்த அழைப்புடன் ஒரு வீடியோ இணைக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் மணமக்கள் இருவரும் இணைந்திருக்கும் புகைப்படங்கள் ஒரு இந்திப் பாடலுடன் காணப்படுகிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. 

Trending News