ஊழியர்களுக்கு ஜாக்பார்ட்! 18 மாத DA நிலுவைத் தொகை குறித்து சூப்பர் அப்டேட்!

7th Pay Commission:மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களுக்கு 18 மாத அகவிலைப்படி நிலுவைத்தொகையை அரசு வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.    

Written by - RK Spark | Last Updated : Nov 29, 2022, 06:30 AM IST
  • 18 மாத டிஏ நிலுவைத் தொகையை வழங்க மத்திய அரசு திட்டம்.
  • 2021ம் ஆண்டு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 11 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது.
  • அகவிலைப்படி நிலுவை தொகையானது 3 தவணைகளாக வழங்கப்படும்.
ஊழியர்களுக்கு ஜாக்பார்ட்! 18 மாத DA நிலுவைத் தொகை குறித்து சூப்பர் அப்டேட்! title=

7th Pay Commission:மத்திய அரசு ஊழியர்களுக்கு சமீபத்தில் அகவிலைப்படியை உயர்த்தி அவர்களை அரசு மகிழ்ச்சியடைய செய்தது, தற்போது அரசு ஊழியர்களுக்கு மீண்டும் ஒரு நல்ல செய்தியினை வழங்கவுள்ளது.  இந்த நல்ல செய்தி குறித்து சில ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவல்களின்படி, 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள 18 மாத அகவிலைப்படி (டிஏ) நிலுவைத் தொகையை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.  நீண்ட நாட்களாகவே மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களுக்கு 18 மாத அகவிலைப்படி நிலுவைத்தொகையை அரசு வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.  

மேலும் படிக்க | ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரசு வழங்கிய முக்கிய செய்தி, கட்டாயம் படிங்க

தற்போது அரசு அதன் ஊழியர்களுக்கு நிலுவைத்தொகை வழங்குவது குறித்து விரைவில் ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.  2020 ஜனவரி முதல் ஜூன் 2021 வரை மொத்தம் 18 மாத கால் நிலுவைத்தொகை பாக்கியுள்ளது.  கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 11 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது, இதனை தொடர்ந்து இதுவரை ஊழியர்களுக்கான அகவிலைப்படி இருமுறை உயர்த்தப்பட்டுள்ளது.  தற்போது மொத்தமாக ​​அரசு ஊழியர்களுக்கு 38 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு இருக்கிறது.

மேலும் வெளியாகியுள்ள தகவல்களின்படி, அகவிலைப்படி நிலுவை தொகையானது அரசு ஊழியர்களுக்கு மூன்று தவணைகளாக வழங்கப்படும் என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன.  அதன்படி லெவல்-3 ஊழியர்களின் அகவிலைப்படி நிலுவைத் தொகை ரூ.11,880 முதல் ரூ.37,554 ஆகவும், லெவல்-13 அல்லது லெவல்-14ஐச் சேர்ந்தவர்களுக்கு ரூ.1,44,200 முதல் ரூ.2,18,200 ஆகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு சம்பளம் ரூ.49,420 அதிகரிக்க வாய்ப்பு! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News