7வது ஊதியக்குழு, சமீபத்திய செய்திகள்: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கூடிய விரைவில் இரண்டு பெரிய பரிசுகளை வழங்க மோடி அரசு தயாராகி வருகிறது. இந்த முறை மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை (டிஏ) வழக்கமான நேரத்திற்கு முன்னதாகவே அரசு அதிகரிக்கலாம் என்று நம்பப்படுகிறது. இது ஊழியர்களுக்கு மிகப்பெரிய நன்மை அளிக்கக்கூடிய ஒரு விஷயமாக இருக்கும். இது தவிர ஊழியர்களின் ஃபிட்மெண்ட் ஃபாக்டரிலும் மிகப்பெரிய அதிகரிப்பு இருக்கலாம் என கூறப்படுகின்றது. இதற்கிடையில் பல மாநில அரசுகளும் தங்கள் ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வருகின்றன.
அந்த வகையில் 2024 புத்தாண்டுக்கு முன்னதாக, பஞ்சாப் அரசு மாநில அரசு ஊழியர்களுக்கு நற்செய்தியை வழங்கியுள்ளது. பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் திங்கள்கிழமை அரசு ஊழியர்களுக்கு (State Government Employees) மிகப்பெரிய பரிசாக அகவிலைப்படி உயர்வை பற்றிய அறிவிப்பை வெளியிட்டார். இதனையடுத்து அரசு ஊழியர்களின் சம்பளத்தில் மிகப்பெரிய ஏற்றம் இருக்கும். இந்த உயர்வு டிசம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
7வது ஊதியக் குழுவின் கீழ் 4% அகவிலைப்படி உயர்வு
7வது ஊதியக் குழுவின் (7th Pay Commission) கீழ் அகவிலைப்படி உயர்த்தப்பட்ட (DA Hike) பிறகு, மொத்த அகவிலைப்படி 38 சதவீதமாக உயரும் என்று மாநில அமைச்சகம் சார்ந்த சேவைகள் சங்கத்தின் (பிஎஸ்எம்எஸ்யு) தலைவர் அம்ரிக் சிங் தெரிவித்தார். பி.எஸ்.எம்.எஸ்.யு.வின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் பின்னர் இது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டது. இந்த சமயத்தில் ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் பகவந்த் மான் பேசினார்.
மேலும் படிக்க | சூப்பர் செய்தி!! இந்த வழிகளில் வருமானம் வந்தால் ஒரு ரூபாய் கூட வரி செலுத்த வேண்டாம்
இந்தக் கூட்டத்திற்குப் பிறகு, PSMSU தலைவர் கூறுகையில், மீதமுள்ள 8 சதவீத டிஏவும் (Dearness Allowance) விரைவில் வழங்கப்படும் என்று முதல்வர் உறுதியளித்தார்.
ஊழியர்களுக்கு முதல்வர் பகவந்த் மானின் புத்தாண்டு பரிசு
முதல்வர் பகவந்த் மான் சமூக ஊடக தளமான 'எக்ஸ்' -இல் "இன்று பஞ்சாப் மாநில அமைச்சகத்தின் கூட்டணி சேவைகள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் ஒரு கூட்டத்தை நடத்தினேன், அவர்களின் பிரச்சினைகளை விரிவாக விவாதித்தோம். ஊழியர்களுக்கு புத்தாண்டு பரிசாக டிஏ அதிகரிப்பை வழங்க உள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம், டிஏ நான்கு சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது, இது டிசம்பர் 1, 2023 முதல் அமலுக்கு வரும்.” என்று எழுதியுள்ளார்.
பஞ்சாப் மாநில அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், நிலுவையில் உள்ள 12 சதவீத டிஏவை விடுவிக்க வேண்டும், ஒப்பந்த ஊழியர்களை முறைப்படுத்த வேண்டும் என மூன்று முக்கிய கோரிக்கைகளை வைத்து வருகின்றனர். PSMSU ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 8 அன்று தொடங்கிய அதன் ஒரு மாதத்திற்கும் மேலான வேலைநிறுத்தத்தை நிறுத்தியது. முதலமைச்சருடனான சந்திப்பிற்கு முன்னதாகவே அந்த அமைப்பு வேலை நிறுத்தத்தை ஒத்திவைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு
சில நாட்களுக்கு முன்னர்தான் அரசாங்கம் ஜூலை 2023 -க்கான டிஏ அதிகரிப்பு பற்றிய அறிவிப்பை வெளியிட்டது. இதனால் ஊழியர்களின் சம்பளத்தில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டது. இப்போது அடுத்த அரையாண்டு, அதாவது ஜனவரி 2024 -க்கான டிஏவை உயர்த்துவதற்கான யோசனை பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு பெரிய பரிசாக இருக்கும். அகவிலைப்படியை அதிகரிப்பது குறித்து அரசு அதிகாரப்பூர்வமாக எதுவும் கூறவில்லை. எனினும் 2024 ஆம் ஆண்டு நிகழவுள்ள மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு அரசு இந்த முடிவை எடுக்கலாம் என நம்பப்படுகின்றது.
மேலும் படிக்க | ரயில் டிக்கெட்டை கடைசி நேரத்தில் கேன்சல் செய்தாலும்... பணம் முழுமையாக கிடைக்கும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ