7th Pay Commission: ஆண்டுக்கு ரூ. 96,000 உயரப்போகும் அரசு ஊழியர்களின் சம்பளம்!

7th Pay Commission: ஃபிட்மென்ட் பேக்டரை 2.57 சதவீதத்தில் இருந்து 3.68 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர், இந்த கோரிக்கைக்கு பிறகு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.   

Written by - RK Spark | Last Updated : Jul 20, 2022, 06:50 AM IST
  • மத்திய ஊழியர்களின் சம்பளம் மாதம் ரூ.8,000 உயர்த்தப்படலாம்.
  • ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் மிகப்பெரிய அளவில் உயரும்.
  • செப்டம்பர் 1ம் தேதி முதல் ஊழியர்களின் சம்பளம் பெரிய அளவில் உயரும் என்று கூறப்படுகிறது.
7th Pay Commission: ஆண்டுக்கு ரூ. 96,000 உயரப்போகும் அரசு ஊழியர்களின் சம்பளம்!  title=

7th Pay Commission: 7வது ஊதியக் குழுவின் கீழ் அரசு மத்திய அரசு ஊழியர்களுக்கு ஃபிட்மென்ட் பேக்டரை அதிகரிப்பது குறித்து விரைவில் ஒப்புதல் அளிக்க இருப்பதால் மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடிய விரைவில் மகிழ்ச்சிகரமான தகவல் கிடைக்க போகிறது.  வெளியாகியுள்ள தகவல்களின்படி, மத்திய ஊழியர்களின் சம்பளம் மாதம் ரூ.8,000 உயர்த்தப்படலாம், தற்போது ஊழியர்களுக்கு ஃபிட்மென்ட் பேக்டரின் கீழ் 2.57 சதவீத ஊதியம் வழங்கப்படுகிறது.  இருப்பினும் அது 3.68 சதவீதமாக உயர்த்தப்பட்டால், ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் மிகப்பெரிய அளவில் உயரும்.

மேலும் படிக்க | 7th Pay Commission: டிஏ நிலுவைத் தொகை பற்றிய முக்கிய அப்டேட் 

சம்பள உயர்வுக்கு அரசு ஒப்புதல் அளித்தால், செப்டம்பர் 1ம் தேதி முதல் ஊழியர்களின் சம்பளம் பெரிய அளவில் உயரும் என்று கூறப்படுகிறது.  குறைந்தபட்ச ஊதியம் மொத்தம் ரூ.18 ஆயிரத்தில் இருந்து ரூ.26 ஆயிரமாக அதிகரிக்கலாம்.  இதன் விளைவாக ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம்  ஒரு மாதத்தில் ரூ.8000 மற்றும் ஒரு வருடத்தில் ரூ.96,000 அதிகரிக்க வாய்ப்புள்ளது.  மத்திய அரசின் கீழ் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க ஃபிட்மென்ட் காரணி பயன்படுகிறது.  மேலும் அங்கீகரிக்கப்பட்டவுடன், ஃபிட்மென்ட் பேக்டரின் கீழ் சம்பள அளவு மாதத்திற்கு ரூ.8,000 அதிகரிக்கும்.

ஃபிட்மென்ட் பேக்டரை 2.57 சதவீதத்தில் இருந்து 3.68 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர், இந்த நீண்ட கோரிக்கைக்கு பிறகு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரத்தில் இருந்து ரூ.26 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. 
 உதாரணமாக, ஒருவரின் குறைந்தபட்ச சம்பளம் ரூ. 18 ஆயிரம் எனில் அவர்களுக்கு 2.57 சதவீத ஃபிட்மென்ட் பேக்டருடன் அல்லோவன்சஸ் தவிர்த்து ரூ. 46,260 கிடைக்கும்.  ஆனால் ஃபிட்மென்ட் காரணி 3.68 சதவீதம் அதிகரித்தால், அவர்களின் சம்பளம் ரூ.95,680 ஆக இருக்கும்.

மேலும் படிக்க | 8th Pay Commission எப்போது? மத்திய அரசுக்கு மகஜர் கொடுக்கும் ஊழியர் சங்கங்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News