மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் 4 பரிசுகள்: எக்கச்சக்க ஊதிய உயர்வு

7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பல பெரிய பரிசுகள் காத்துக்கொண்டு இருக்கின்றன. இதில் அகவிலைப்படி, வீட்டு வாடகை கொடுப்பனவு மற்றும் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் ஆகியவை அடங்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 23, 2024, 05:37 PM IST
  • ஹோலிக்குப் பிறகு 50 சதவீத அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு வரும் என எதிர்பார்க்ப்படுகின்றது.
  • புதிய DA ஜனவரி 2024 முதல் அமலுக்கு வரும்.
  • து ஜூன் 2024 வரை பொருந்தும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் 4 பரிசுகள்: எக்கச்சக்க ஊதிய உயர்வு title=

7வது ஊதியக்குழு, சமீபத்திய செய்திகள்: இன்னும் சில மாதங்களில் மக்களவைத் தேர்தல் (Lok Sabha Election) நடக்கவுள்ளது. இதற்கு முன், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பல பெரிய பரிசுகள் காத்துக்கொண்டு இருக்கின்றன. இதில் அகவிலைப்படி, வீட்டு வாடகை கொடுப்பனவு மற்றும் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் ஆகியவை அடங்கும். ஜூலை முதல் டிசம்பர் 2023 வரையிலான ஏஐசிபிஐ இன்டெக்ஸ் தரவுகளின் அடிப்படையில், அகவிலைப்படியை 3 முதல் 4% வரை அதிகரிக்கலாம் என கூறப்படுகின்றது. இன்னும் சில நாட்களில் டிசம்பர் மாதத்திற்கான ஏஐசிபிஐ குறியீட்டு (AICPI Index) எண்கள் வெளிவரும். 

அதே நேரத்தில் டிஏ அதிகரிப்புடன், எச்ஆர்ஏவும் (HRA) அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர பிப்ரவரி 1ம் தேதி இடைக்கால பட்ஜெட்டை மோடி அரசு தாக்கல் செய்ய உள்ளதால், இந்த நேரத்தில் ஃபிட்மென்ட் ஃபேக்டரை அதிகரிப்பது குறித்தும் பரிசீலிக்க வாய்ப்பு உள்ளது. இந்த மூன்றிலும் உடன்பாடு ஏற்பட்டால், ஊழியர்களின் சம்பளத்தில் பெரும் ஏற்றம் (Salary Hike) இருக்கும்.

அகவிலைப்படி உயர்வு (DA Hike)

மத்திய அரசு ஊழியர்கள் (Central Government Employees) மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரண விகிதங்கள், ஆண்டுக்கு இரு முறை மறுஆய்வு செய்யப்படுகின்றது. ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி முந்தைய ஆண்டின் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டின் அடிப்படையிலும், ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி (Dearness Allowance) ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டின் அடிப்படையிலும் கணக்கிடப்படுகின்றது.  நவம்பர் வரை வந்துள்ள ஏஐசிபிஐ தரவுகளின் அடிப்படையில், அகவிலைப்படி குறைந்தபட்சம் 50 சதவிகிதத்தை எட்டும் என்பது தெளிவாகிறது. டிசம்பர் தரவு வந்தவுடன் முழுமையான உயர்வு பற்றி தெரியவரும். தற்போது ஊழியர்களுக்கு 46% டி.ஏ (DA) வழங்கப்படுகிறது.

ஹோலிக்குப் பிறகு 50 சதவீத அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு வரும் என எதிர்பார்க்ப்படுகின்றது. புதிய DA ஜனவரி 2024 முதல் அமலுக்கு வரும். இது ஜூன் 2024 வரை பொருந்தும். அத்தகைய சூழ்நிலையில் டிஏ அரியர் தொகையும் கிடைக்கும். இதன் பலன் ரூ.48 லட்சம் ஊழியர்கள் மற்றும் 68 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு (Pensioners) கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

வீட்டு வாடகை கொடுப்பனவு (House Rent Allowance)

மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி (DA) விரைவில் 50% ஆக அதிகரிக்கும். அகவிலைப்படியுடன் மத்திய ஊழியர்களின் வீட்டு வாடகை கொடுப்பனவும் (House Rent Allowance) அதிகரிக்கும். 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் கீழ் (7th Pay Commission) மத்திய அரசு அதை அதிகரிப்பதற்கான விதிகளை அமைத்துள்ளது.

2021 இல் அகவிலைப்படி (Dearness Allowance) 25% ஐத் தாண்டியபோது HRA திருத்தப்பட்டது. ஜூலை 2021 இல் 25% DA ஐ தாண்டியதால் HRA 3% அதிகரித்தது. அகவிலைப்படி விரைவில் 50% அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நடந்தால், HRA அதிகபட்சமாக 3 சதவீதமாக உயரும். தற்போது நகரத்தின் அடிப்படையில் HRA 27%, 18% மற்றும் 9% ஆக உள்ளது. இது 3% அதிகரித்தால், இந்த கொடுப்பனவு 30%, 20% மற்றும் 10% ஆக உயரும். 

மேலும் படிக்க | Mutual Fund: ₹1 லட்சத்தை ₹75 லட்சமாக மாற்றும் ஃபார்முலா..!!

பயணப்படி  (Travel allowance)

இரண்டாவது பரிசு பயணப்படியாக (Travel Allowance) இருக்கும். டிஏ அதிகரிப்புடன், பயணப்படியும் (TA) அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், பயணக் கொடுப்பனவை ஊதியக் குழுவுடன் இணைப்பதன் மூலம், டிஏ அதிகரிப்பு இன்னும் அதிகமாக இருக்கும். பயணக் கொடுப்பனவு வெவ்வேறு ஊதியக் குழுக்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. உயர் TPTA நகரங்களில், கிரேடு 1 முதல் 2 வரையிலான பயணக் கொடுப்பனவு ரூ.1800 மற்றும் ரூ.1900 ஆகும். கிரேட் 3 முதல் 8 வரை ரூ.3600 + டி.ஏ. அதேசமயம், மற்ற இடங்களுக்கு இந்த விகிதம் ரூ. 1800 + டி.ஏ ஆக உள்ளது.

ஃபிட்மென்ட் ஃபாக்டர் அதிகரிக்கும் (Fitment Factor Hike)

மக்களவை தேர்தலுக்கு முன், மத்திய அரசின் மோடி அரசு, ஊழியர்களின் ஃபிட்மென்ட் ஃபாக்டர் (Fitment Factor) குறித்தும் முக்கிய முடிவை எடுக்கலாம் என, ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. தற்போது, ​​7வது ஊதியக்குழுவின் கீழ், ஊழியர்களின் ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.57 சதவீதமாகவும், அடிப்படை சம்பளம் ரூ.18000 ஆகவும் உள்ளது. ஊழியர்களின் தேவையை கருத்தில் கொண்டு, இதை 2.57ல் இருந்து 3.00 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இது நடந்தால் அடிப்படை சம்பளம் ரூ.18000ல் இருந்து ரூ.21000 ஆக உயரும், இதனால் வெவ்வேறு நிலை ஊழியர்களின் சம்பளத்தில் வெவ்வேறு உயர்வு இருக்கும். 

உதாரணமாக, ஒரு மத்திய ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ. 18,000 என்றால், கொடுப்பனவுகளைத் தவிர்த்து அவருடைய சம்பளம் ரூ.18,000 X 2.57 = ரூ.46,260 ஆக இருக்கும். ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 3 மடங்கு ஆனால், சம்பளம் ரூ 21000 X 3 = ரூ 63,000 ஆக உயரும். 

மேலும் படிக்க | Budget 2024: காப்பீட்டுத் துறையில் இந்த குட் நியூஸ் நிச்சயம் இருக்கும்.... நிபுணர்கள் கருத்து

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News