8th Pay Commission முக்கிய அப்டேட்: 44% ஊதிய உயர்வு விரைவில்... அரசாங்க அறிவிப்பு எப்போது?

8th Pay Commission: 8வது சம்பள கமிஷன் அமல்படுத்தப்பட்டாலோ அல்லது ஃபிட்மென்ட் ஃபாக்டரின் சதவீதத்தை அரசு உயர்த்தினாலோ மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் உயரும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 5, 2023, 01:08 PM IST
  • 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஊதியக்குழு அமலுக்கு வருகிறது.
  • 2013 இல், 7வது சம்பள கமிஷன் உருவாக்கப்பட்டது.
  • 2016-ம் ஆண்டு அது அமல்படுத்தப்பட்டது.
8th Pay Commission முக்கிய அப்டேட்: 44% ஊதிய உயர்வு விரைவில்... அரசாங்க அறிவிப்பு எப்போது? title=

8th Pay Commission, Latest Update: மத்திய அரசு ஊழியர்களுக்கு தொடர்ந்து பல நல்ல செய்திகள் காத்திருக்கின்றன. அதில் அகவிலைப்படி உயர்வு, அகவிலைப்படி அரியர் தொகை, 8 ஆவது ஊதியக்குழு ஆகியவை முக்கியமானவையாகும். இவற்றில் 8வது ஊதியக்குழு பற்றிய சில முக்கிய புதுப்பிப்புகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

8th Pay Commission: புதிய ஊதியக்குழு

புதிய ஊதியக்குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வந்த நிலையில், தற்போது அதற்கான தேவையும் கோரிக்கைகளும் வலுத்துள்ளன. 8வது ஊதியக்குழுவை விரைவில் அமைக்க வேண்டும் என ஊழியர் அமைப்புகள் அரசுக்கு அழுத்தம் கொடுக்க முயல்கின்றன. ஆனால், இதுவரை இதை அரசு தெளிவாக மறுத்து வருகிறது. எனினும், அரசு இதை பரிசீலிக்கக்கூடும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான சில காரணங்களையும் அவை கூறியுள்ளன. முதலாவதாக, ஊழியர்கள் சரியான நேரத்திற்கு முன்பே அடுத்த ஊதியக்குழுவிற்கான கோரிக்கையை முன்வைக்கவில்லை. அதற்கான நேரம் வந்துவிட்டது.

10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஊதியக்குழு அமலுக்கு வருகிறது

2013 இல், 7வது சம்பள கமிஷன் (7th Pay Commission) உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு 2016-ம் ஆண்டு அது அமல்படுத்தப்பட்டது. இதற்குப் பிறகு ஊழியர்களின் சம்பளத்தில் கணிசமான உயர்வு ஏற்பட்டது. தற்போது மீண்டும் அடுத்த ஊதியக்குழு அமைக்கப்படும் என ஊழியர்கள் காத்திருந்தனர். புதிய ஊதியக் குழுவின் பரிந்துரைகள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை அமல்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.  ஆகையால் இந்த ஆண்டு அடுத்த ஊதியக்குழு குறித்த அறிக்கையை அரசு வெளியிடும் என ஊழியர்கள் எதிர்பார்க்கிறார்கள்

ஏழாவது ஊதியக்குழு விதிகளின் படி, அகவிலைப்படி (Dearness Allowance) 50 சதவீதத்தை எட்டும்போது, ​​அது பூஜ்ஜியமாகக் குறைக்கப்படும். இதற்குப் பிறகு, அப்போதுள்ள அடிப்படை சம்பளத்துடன் 50 சதவீத டிஏ சேர்க்கப்பட்டு, அகவிலைப்படி கணக்கீடு பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்கும். ஜூலை 2023-க்கான அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்டு, மொத்த அகவிலைப்படி 46 சதவிகிதமாக உயர்த்தப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும், ஜனவரி 2023 -இலும் அகவிலைபப்டி 4 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டால், மொத்த அகவிலைப்படி 50 சதவிகிதத்தை எட்டும். அந்த நிலையில், ஊதிய திருத்தம் செய்யப்பட வேண்டும். ஊதிய திருத்தம் செய்ய வேண்டுமானால், புதிய ஊதிய குழு அமைக்கப்பட வேண்டியது அவசியமாகும். மேலும் அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல்களும் வரவுள்ள நிலையில், அரசு மத்திய அரசு ஊழிய்ரகளுக்கு ஒரு மிகப்பெரிய பரிசை வழங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

மேலும் படிக்க | புதிய GPF வட்டி விகிதம் அறிவிப்பு! நடப்பு காலண்டுக்கு 7.1% வருமானம் கிடைக்கும்

அரசின் நிலைப்பாடு என்ன?

‘அடுத்த ஊதியக் குழுவை அமைப்பது குறித்து அரசுக்கு இதுவரை எந்த யோசனையும் இல்லை’ என நிதித் துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது தெளிவுபடுத்தினார். இதுதான் அரசின் தற்போதைய நிலைப்பாடாக உள்ளது. இது தவிர ஊழியர்களின் சம்பளத்தை சீரமைக்க அரசங்கம் ஒரு புதிய சூத்திரம் குறித்தும் ஆலோசித்து வருவதாக செய்திகள் வருகின்றன. 

ஊழியர்களின் ஊதியம் 44% அதிகரிக்கும்

8வது ஊதியக்கமிஷன் அமலுக்கு வந்தால் ஊழியர்களின் ஊதியத்தில் 44% உயர்வு இருக்கும். 8வது சம்பள கமிஷன் அமல்படுத்தப்பட்டாலோ அல்லது ஃபிட்மென்ட் ஃபாக்டரின் சதவீதத்தை அரசு உயர்த்தினாலோ மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் உயரும். இதை ஒரு உதாரணத்துடன் புரிந்துகொள்ளலாம். 

தற்போது, மத்திய அரசு ஊழியர்களின் ஃபிட்மெண்ட் ஃஒஆக்டர் 2.57 சதவீதமாக உள்ளது. இதன்படி மத்திய ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.18,000 ஆகும். ஃபிட்மென்ட் ஃபாக்டரை 3.68 சதவீதமாக உயர்த்த கோரிக்கை உள்ளது. ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அதிகரித்தால், குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் 44 சதவீதத்திற்கு மேல் அதாவது நேரடியாக ரூ.18,000 -இலிருந்து  ரூ.26,000 ஆக உயரும். இதற்கான அரசாங்க அறிவிப்பு எப்போது வரும்? இந்த ஆண்டே அரசு புதிய ஊதியக் குழுவை அமைக்குமா? இந்த கேள்விகளுக்கான பதிலை நாம் மிக விரைவிலேயே பெறக்கூடும். எனினும், இது அமைக்கப்பட்டவுடன் ஊழியர்களின் ஊதியத்தில் மிகப்பெரிய ஏற்றம் இருக்கும் என்பதில் ஐயமில்லை. 

மேலும் படிக்க | EPF கணக்கு வைத்திருப்பவர்களுக்கான அப்டேட்! புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது EPFO

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News