பணத்தை பாதுகாக்கவும், பல மடங்காக பெருக்கவும் மிகவும் சுலபமான வழிமுறை! மனி மேக்கிங் டிப்ஸ்!

Saving Money For Life : சம்பாதித்த பணம் பத்திரமாக இருக்கவும், அது மேலும் பணத்தை சம்பாதித்துக் கொடுக்கவும் சேமிப்புத் திட்டங்களில் பணத்தை சேமிக்கலாம்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 26, 2024, 09:49 AM IST
  • ரிஸ்கே இல்லாமல் பணத்தை சேமிக்க வழிகள்!
  • சேமிக்கும் பணத்தை பாதுகாக்கலாம்
  • சேமிப்பை பல மடங்காக்கும் திட்டங்கள்
பணத்தை பாதுகாக்கவும், பல மடங்காக பெருக்கவும் மிகவும் சுலபமான வழிமுறை! மனி மேக்கிங் டிப்ஸ்! title=

நாம் சம்பாதிக்கும் பணம் அத்தனையையும் உடனே செலவு செய்துவிடுவதில்லை, ஏனென்றால் உடனடி செலவுகளைத் தவிர அவ்வப்போது வரும் செலவுகளுக்கும் பணம் தேவை. தினசரி உணவு உடை அத்தியாவசிய செலவுகளைத் தவிர, குழந்தைகளின் படிப்பு, மருத்துவ செலவு, எதிர்காலத்திற்கான சேமிப்பு என வாழ்க்கையில் பல விஷயங்களுக்காக பணத்தை சேமிக்க வேண்டியது அனைவருக்கும் அவசியமாகிறது. பணத்தை சேமிப்பது என்பது கையில் வந்த பணத்தை அப்படியே வீட்டில் வைத்திருப்பது அல்ல.

பணத்தை பாதுகாப்பது

சம்பாதித்த பணம் பத்திரமாக இருக்கவும், அது மேலும் பணத்தை சம்பதாத்தித்துக் கொடுக்கவும் சேமிப்புத் திட்டங்களில் பணத்தை சேமிக்கலாம். சேமிப்புத் திட்டங்கள் என்பது உங்கள் பணத்தைப் பாதுகாப்பாக வைப்பதுடன், எதிர்கால நிதி இலக்குகளை அடைவதற்கான முதலீட்டுத் திட்டங்களாக பார்க்கப்படுகின்றன.

சேமிப்பு திட்டங்கள் 

அதில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் சேமிப்புத் திட்டங்கள் உங்கள் சேமிப்பை விரைவாக முதலீடுகளாக மாற்றவும், நீண்ட காலத்திற்கு முதலீடு செய்யவும் உதவும். இந்தத் திட்டங்களில் அவ்வப்போது சிறிய அளவில் சேமித்து வந்தாலும், உங்கள் வருமானம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்லும்.  

சேமிப்பு திட்டங்கள் என்றால் என்ன?
சேமிப்புத் திட்டங்கள் என்பது இந்திய அரசாங்கம் அல்லது பொது/தனியார் வங்கிகள் நடத்தும் திட்டங்கள் ஆகும். இவற்றில் பணத்தை முதலீடு செய்தால், குறிப்பிட்ட காலகட்டத்தில் உங்கள் பணம் அதிகரிக்கும். நமது இலக்குகளுக்கு ஏற்றவாறு வெவ்வேறு சேமிப்புத் திட்டங்கள் உள்ளன,

சேமிப்புத் திட்டங்களில், குறைந்தபட்ச முதலீடு, அதிகபட்ச முதலீடு என முதலீட்டு எல்லைகள் உள்ளன. அதேபோல, சேமிப்புக்கு கிடைக்கும் வட்டி விகிதங்கள் மற்றும் வரிச் சலுகைகள் ஆகியவையும் திட்டத்திற்கு திட்டம் மாறுபடுகின்றன. சிறந்த சேமிப்பு மற்றும் முதலீட்டுத் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது உங்கள் பணத்தை அதிகரிப்பதற்கான அவசியமான திட்டமிடல் ஆகும்.

மேலும் படிக்க | கல்யாணத்துக்கு இவ்வளவு செலவா? சம்பாதிப்பதை திருமணத்துக்கே செலவழிக்கும் இந்தியர்கள்!

வரிகளை குறைக்க சேமிப்பு

சிறந்த சேமிப்புத் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது என்பது, வருமான வரியைக் குறைக்கவும் உதவும். வங்கி வைப்புத்தொகை, தபால் அலுவலக திட்டங்கள், என்எஸ்சி, கேவிபி, சுகன்யா சம்ரித்தி யோஜனா என சேமிப்பு திட்டங்களில் பல்வேறு வகைகல் உள்ளன. அதேபோல பங்கு தொடர்பான அல்லது கடன் தொடர்பான திட்டங்களிலும் பணத்தை முதலீடு செய்து சேமிக்கலாம். நிலையான வைப்புத்தொகை, பாரம்பரிய காப்பீட்டுத் திட்டங்கள் மற்றும் ஆன்லைன் சேமிப்பு என முதலீட்டுத் திட்டங்கள் பல்வேறு வகைகளில் உள்ளன.

சேமிப்பு திட்டங்களின் பலன்கள்
தனிநபர்கள் சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் ஓய்வூதியத்திற்கான திட்டமிடல், குழந்தைகளின் கல்வி மற்றும் குழந்தைகளின் திருமணம் என நீண்ட கால இலக்குகளை அடைய சேமிப்பு உதவுகிறது. 

தற்போது பல்வேறு சேமிப்புத் திட்டங்கள் இருந்தாலும், அவை திட்டம் மற்றும் துறைக்கு ஏற்ப மாறுபடுகின்றன. உதாரணமாக, பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள மக்களுக்கு உதவுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது என்றால், சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தில் பெண் குழந்தைகளுக்காக மட்டுமே அவர்களுடைய பெற்றோர் சேமிக்க முடியும்.

சேமிப்புத் திட்டங்களுக்கான பராமரிப்பு மற்றும் முதலீடு மிகவும் எளிமையானது என்பதும், இந்த சேமிப்புகளை ஆன்லைன் மூலமாகவே செய்துவிடலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட திட்டங்கள் என்பதால், இந்த சேமிப்புத் திட்டங்கள் பாதுகாப்பானவை.

மேலும் படிக்க | பெண்களே உஷார்! ஆண்களின் இந்தப் பழக்கங்களை புறக்கணிக்க வேண்டாம்!

வரி சேமிப்பு FDகள்

வரி சேமிப்பு FDகளில் ரூ.1.5 லட்சம் வரையிலான முதலீடு செய்து, வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் விலக்கு பெறலாம். இந்த நிலையான கால முதலீடுகளின் குறைந்தபட்ச லாக்-இன் காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். இந்த எஃப்டிக்களை, வங்கிகள் அல்லது தபால் நிலையங்களில் திறக்கப்படலாம். வரி-சேமிப்பு FD களில் இருந்து கிடைக்கும் வட்டி உங்கள் பொருந்தக்கூடிய ஸ்லாப் விகிதத்தில் வரிக்கு உட்பட்டது.

குறைந்த ரிஸ்க் மற்றும் உறுதியான லாபத்தை எதிர்பார்க்கும் முதலீட்டாளர்களுக்கு, இந்த முதலீடு சரியான தேர்வாகும். வரி சேமிப்பு FDகளுக்கு குறைந்தபட்சம் ரூ.100 தான். இதற்கு உச்ச வரம்பு இல்லை என்றாலும், ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரையிலான முதலீடுகளுக்கு வருமான வரி விலக்கு உண்டு.  

வருமான வரி சேமிப்பு எஃப்டியின் வட்டி விகிதம் வங்கிக்கு வங்கி மாறுபடும் என்றாலும், தற்போது இது ​​5.75% முதல் 8.60% வரை உள்ளது.
குறைந்தபட்ச முதலீட்டு காலம் ஐந்து ஆண்டுகள் என்பதும், இதிலிருந்து கிடைக்கும் வருமானமான வட்டிக்கு வரி உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | ஊழியரை விட 10 மடங்கு குறைவாக சம்பளம் வாங்கும் கெளதம் அதானி! ஆச்சரியம் அளிக்கும் ஊதியம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News