ஆன்லைன் மூலம் கடன் வாங்க போறீங்களா? இந்த விஷயங்களில் கவனம் தேவை!

Online Loan Apps: ஆன்லைனில் கடன் வாங்க திட்டம் வைத்து இருந்தால், கடனுக்கும் விண்ணப்பிக்கும் முன் சில முக்கியமான விஷயங்களை மனதில் வைத்து பிறகு விண்ணப்பிப்பது நல்லது.  

Written by - RK Spark | Last Updated : Apr 10, 2024, 03:32 PM IST
  • ஆன்லைன் மூலம் கடன் வாங்கினால் ஜாக்கிரதை.
  • சில விதிகளில் கவனமாக இருக்க வேண்டும்.
  • இல்லை என்றால் அபராதங்கள் விதிக்கப்படலாம்.
ஆன்லைன் மூலம் கடன் வாங்க போறீங்களா? இந்த விஷயங்களில் கவனம் தேவை! title=

கடந்த காலங்களில் வங்கிகளில் கடன் வாங்க வேண்டும் என்றால் குறைந்தது 6 மாதங்கள் ஆகும்.  அதிக நேரம் கியூவில் நின்று, முறையான ஆவணங்களை வங்கிகளில் சமர்ப்பித்து, கடன் வாங்க பல நாட்கள் அவர்களை பின்தொடர வேண்டி இருக்கும். அப்படி இருந்தும் சிலருக்கு கடன் கிடைக்காமல் போய் உள்ளது. தற்போது இதனை மாற்றி அமைக்க பல தனியார் நிறுவனங்கள் வந்துள்ளன. இந்த நிறுவனங்கள் ஒவ்வொருவருக்கு அவர்களின் சம்பளம் அடைப்படையில் கடன்களை வழங்குகின்றன.  இதன் காரணமாக சில வங்கிகளும் எளிதாக கடன்களை வழங்கி வருகின்றன.  சிலர் வங்கி இருப்பு மற்றும் கிரெட் ஸ்கோரை வைத்து கடன் வழங்குகின்றனர். 

மேலும் படிக்க | இருக்கும் பணத்தை இரட்டிப்பாக்க வேண்டுமா? அப்போ ‘இதில்’ முதலீடு செய்யுங்கள்..

தற்போது ஆன்லைன் மூலம் கடன் வாங்கும் வழக்கம் அதிகரித்து வருகிறது. கடனுக்கு விண்ணப்பித்த சில நிமிடங்களில் தேவையான பணம் நமது வங்கி கணக்கிற்கு வந்துவிடுகிறது.  இவை பார்ப்பதற்கு எளிதாகத் தோன்றினாலும், இதில் பல ஆபத்துகள் உள்ளன. எனவே இதுபோன்ற உடனடியாக கிடைக்கும் ஆன்லைன் கடன்களுக்கு விண்ணப்பிக்கும் முன் நீங்கள் சில முக்கிய விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டும். ஆன்லைன் மூலம் கடனுக்கு விண்ணப்பிக்கும் முன்பு, தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் சில உள்ளன.  அவற்றை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.  

வட்டி விகிதம் மற்றும் கட்டணம்

உடனடியாக பணம் வேண்டும் என்ற கட்டாயத்தில் பலரும் வட்டி விகிதங்கள், செயலாக்கக் கட்டணம் மற்றும் பிற கட்டணங்கள் போன்றவற்றை விசாரிக்காமல் கடன்களை பெற்றுவிடுகின்றனர். இந்த சமயங்களில் பலரும் இதுபோன்ற முக்கியமான விஷயங்களை சரிபார்ப்பதில்லை. வங்கிகள் அல்லது எந்தஒரு நிதிநிறுவனங்களில் கடனைப் பெறுவதற்கு முன் முதலில் கவனிக்க வேண்டிய விஷயம் வட்டி விகிதம் மற்றும் பிற கட்டணங்கள் ஆகும்.  வங்கிகளுடன் ஒப்பிடும்போது, ​​ஆன்லைன் மூலம் பெறப்படும் வட்டி விகிதம் அதிகமாக இருக்கும்.

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

பொதுவாக ஆன்லைன் கடன்களுக்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிலிருந்து நிறைய விதத்தில் வேறுபட்டு இருக்கும். ஏனெனில் இதுபோன்ற ஆன்லைன் ஆப்ஸ்கள் RBI விதிமுறைகளின் கீழ் வராது. எனவே மாதாந்திர EMIயை நீங்கள் தவறவிட்டால், அதற்கான வட்டிவிகிதங்கள் பல மடங்கு அதிகமாக இருக்கும்.  இதனால் எதிர்காலத்தில் உங்கள் CIBIL ஸ்கோரையும் கடன் தகுதியையும் பாதிக்கலாம்.
 
திருப்பிச் செலுத்தும் விதிமுறைகள்

ஆன்லைன் ஆப்ஸ்கள் உங்களின் தகுதியை மீறியும் கடன்களை வழங்க முன் வருகின்றனர்.  ஆனால் உங்களுக்கு தேவையான தொகையை மட்டும் கடனாக வாங்குவது எப்போதும் நல்லது. ஆன்லைன் மூலம் அதிக அளவிலான கடன்களை வாங்குவது எதிர்காலத்தில் கூடுதல் கடன் சுமைக்கு வழிவகுக்கும்.  அதே போல கடன் வரப்போகும் ஆர்வத்தில் குறிப்பிட்ட ஆன்லைன் ஆப்ஸ்கள் கேட்டும் அனைத்து விவரங்களையும் தந்துவிடுகிறோம். ஒருவேளை உங்களால் கடனை சரியான முறையில் திரும்ப செலுத்த முடியாத பட்சத்தில் இந்த நிறுவனங்கள் இந்த விவரங்களை உங்களுக்கு எதிராக பயன்படுத்தலாம்.

அபராதங்கள்

ஆன்லைனில் உடனடி கடனை எடுப்பதற்கு முன்பு, கடனை திருப்பிச் செலுத்தும் விதிமுறைகளின் விவரங்களை எப்போதும் சரிபார்க்கவும். தாமதமாகப் பணம் செலுத்துவதற்கான அபராதங்களை தெரிந்து கொண்டு கடனை பெறுவது நல்லது. நீங்கள் தாமதமாக கடனை திரும்பி செலுத்தினால் எதிர்காலத்தில் உங்கள் CIBIL மதிப்பெண்கள் பாதிக்கப்படலாம்.

மேலும் படிக்க | சட்டவிரோத கடன் செயலிகளுக்கு ஆப்பு வைக்கும் ஆர்பிஐ! புதிய நடைமுறை விரைவில்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News