August Bank Holidays : அலர்ட் மக்களே! நாளை முதல் 4 நாட்களுக்கு வங்கிகள் தொடர் விடுமுறை

August Bank Holidays: ஆகஸ்ட் 18 முதல் 4 தொடர் விடுமுறைகள் வருகின்றன. ஆனால் இந்த விடுமுறைகள் அனைத்து மாநிலங்களிலும் உள்ள வங்கிகளுக்கு ஒரே நேரத்தில் பொருந்தாது. விவரமாக இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 17, 2022, 04:51 PM IST
  • ஆகஸ்ட் 2022 வங்கி விடுமுறைகள்.
  • நடப்பு ஆகஸ்ட் மாதத்தில் 16 நாட்கள் கடந்துவிட்டன.
  • ஆகஸ்ட் 18 முதல் 4 தொடர் விடுமுறைகள் வருகின்றன.
August Bank Holidays : அலர்ட் மக்களே! நாளை முதல் 4 நாட்களுக்கு வங்கிகள் தொடர் விடுமுறை  title=

ஆகஸ்ட் வங்கி விடுமுறைகள் 2022: நடப்பு ஆகஸ்ட் மாதத்தில் 16 நாட்கள் கடந்துவிட்டன. ரிசர்வ் வங்கியின் நாட்காட்டியின்படி, இந்த மாதத்தில் ஏற்கனவே 10 வங்கி விடுமுறைகள் கடந்துவிட்டன. இன்னும் 8 விடுமுறைகள் உள்ளன. இந்த 8 விடுமுறை நாட்களில் ஆகஸ்ட் 18 முதல் 4 தொடர் விடுமுறைகள் வருகின்றன. ஆனால் இந்த விடுமுறைகள் அனைத்து மாநிலங்களிலும் உள்ள வங்கிகளுக்கு ஒரே நேரத்தில் பொருந்தாது. இந்த நான்கு நாட்களில் வங்கி வேலை உள்ளவர்கள், தங்கள் வங்கி எந்த நாளில் வேலை செய்யும் என்பதை தெரிந்து கொள்வது நல்லது. இந்த 4 நாட்களில் எந்தெந்த மாநிலங்களில் எந்தெந்த நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

ஆகஸ்ட் 18 முதல் தொடர்ந்து 4 விடுமுறைகள்:

நாட்டில் கிருஷ்ணாஷ்டமி கொண்டாட்டங்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு தேதிகளில் கொண்டாடப்படுகின்றன. எனவே, ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள வங்கிகளுக்கு கிருஷ்ணாஷ்டமி விடுமுறை நாள் வேறுபடும். 

புவனேஸ்வர், தேராதூன், லக்னோ, கான்பூர் மற்றும் சில வட மாநிலங்களில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி (வியாழக்கிழமை) ஸ்ரீ கிருஷ்ணாஷ்டமி விடுமுறை. அதனால் அன்றைய தினம் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை, சண்டிகர், அகமதாபாத், போபால், ஜம்மு-காஷ்மீர், பாட்னா, ராஞ்சி, ஷில்லாங் மற்றும் சிம்லாவில் உள்ள வங்கிகளுக்கு ஆகஸ்ட் 19-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) ஜன்மாஷ்டமி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஐதராபாத்தில் உள்ள வங்கிகளுக்கு ஆகஸ்ட் 20 ஆம் தேதி (சனிக்கிழமை) ஜன்மாஷ்டமி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் பொது விடுமுறை ஆகும்.

மேலும் படிக்க | IRCTC New Rules: டிக்கெட் புக்கிங்கில் புதிய விதிகளை அமல்படுத்தியது ஐஆர்சிடிசி! 

ஆகஸ்ட் மாதத்திற்கான விடுமுறை நாட்களின் முழுமையான பட்டியல் இதோ:

1 ஆகஸ்ட் 2022: காங்டாக்கில் மட்டும் விடுமுறை (துருப்கா தேஷி விழா)

7 ஆகஸ்ட் 2022: ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை.

8 ஆகஸ்ட் 2022: மொஹரம் பண்டிகையை முன்னிட்டு ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் வங்கிகளுக்கு விடுமுறை.

9 ஆகஸ்ட் 2022: சண்டிகர், டேராடூன், புவனேஸ்வர், கவுகாத்தி, இம்பால், ஜம்மு, பனாஜி, ஷில்லாங், சிம்லா, திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் உள்ள வங்கிகளுக்கு மொஹரம் விடுமுறை.

11 ஆகஸ்ட் 2022: ரக்ஷாபந்தனை முன்னிட்டு நாடு முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை

12 ஆகஸ்ட் 2022: சில மாநிலங்களில் ரக்ஷாபந்தன் விடுமுறை.

13 ஆகஸ்ட் 2022: மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை என்பதால், நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை. 

14 ஆகஸ்ட் 2022: நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை.

15 ஆகஸ்ட் 2022: சுதந்திர தினத்தன்று நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை.

16 ஆகஸ்ட் 2022: பார்சி புத்தாண்டு அன்று மும்பை மற்றும் நாக்பூரில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை. 

(ஆகஸ்ட் மாதத்தில் இதுவரையிலான விடுமுறைகள் முடிந்துவிட்டன)

18 ஆகஸ்ட், 2022: புவனேஸ்வர், தேராதூன், லக்னோ, கான்பூர் மற்றும் சில வட மாநிலங்களில் உள்ள வங்கிகளுக்கு ஜன்மாஷ்டமியை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்படும்.

19 ஆகஸ்ட் 2022: சென்னை, ராஞ்சி, அகமதாபாத், போபால், சண்டிகர் ஆகிய இடங்களில் உள்ள வங்கிகளுக்கு ஜன்மாஷ்டமி விடுமுறை.

20 ஆகஸ்ட் 2022: ஹைதராபாத்தில் ஜென்மாஷ்டமி விடுமுறை.

21 ஆகஸ்ட் 2022: ஞாயிற்றுக்கிழமை என்பதால் நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படும்.

27 ஆகஸ்ட் 2022: இரண்டாவது சனிக்கிழமையன்று நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை.

28 ஆகஸ்ட் 2022: ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை.

29 ஆகஸ்ட் 2022: ஸ்ரீமந்த் சங்கர்தேவ் விழா (குவஹாத்தியில் மட்டும் விடுமுறை)

31 ஆகஸ்ட் 2022: விநாயக சதுர்த்தி அன்று குஜராத், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் வங்கிகளுக்கு விடுமுறை.

மேலும் படிக்க | கார்களுக்கு லோன் பெற சில எளிய டிப்ஸ்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News