Krishna Janmashtami: கிருஷ்ண ஜென்மாஷ்டமி வரலாறும், கொண்டாட்டங்களும் ..!!

ஸ்ரீ கிருஷ்ணர் விஷ்ணுவின் அவதாரம். மதுராவின் இளவரசி தேவகி மற்றும் வசுதேவருக்கு எட்டாவது குழந்தையாக பிறந்த கண்ணன், கோகுலத்தில் தாய் யசோதாவின் மடியில் தனது குழந்தைப் பருவத்தை கழித்தார். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 18, 2022, 04:01 PM IST
Krishna Janmashtami: கிருஷ்ண ஜென்மாஷ்டமி  வரலாறும்,  கொண்டாட்டங்களும் ..!! title=

எப்பொழுதெல்லாம் அதர்மமும் அநியாயமும் பூமியில் தலை தூக்குகிறதோ, அப்போதெல்லாம் கடவுள் பூமியில் அவதாரம் எடுத்திருக்கிறார். விஷ்ணு பகவான் அதர்மத்தை அழிக்க  பூமியில் அவதாரம் பல எடுத்தார். ஸ்ரீ கிருஷ்ணர் விஷ்ணுவின் அவதாரம். மதுராவின் இளவரசி தேவகி மற்றும் வசுதேவருக்கு எட்டாவது குழந்தையாக பிறந்த கண்ணன், கோகுலத்தில் தாய் யசோதாவின் மடியில் தனது குழந்தைப் பருவத்தை கழித்தார். பகவான் கண்ணனை மன்னனிடமிருந்து அவரைக் காப்பாற்றுவதற்காக, கண்ணன் பிறந்த பிறகு, வாசுதேவர் தனது உறவினர்களான நந்தகோபர் மற்றும் யசோதா ஆகியோரிடம் கண்ணனை கொண்டு சேர்த்தார். ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்தது முதல் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் அற்புதங்களைக் காட்டினார். மனித சமுதாயத்தை வழிநடத்தும் வகையில், ஸ்ரீ கிருஷ்ணரின் வாழ்க்கை தொடர்பான பல கதைகள் உள்ளன. கிருஷ்ணர் அவதரித்த நால் பெருவிழாவாக பக்தர்களால் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா இந்த ஆண்டு ஆகஸ்ட் 19/20 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த சந்தர்ப்பத்தில் கிருஷ்ண ஜென்மாஷ்டமியின் வரலாறு மற்றும் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளுங்கள்.

கிருஷ்ண ஜென்மாஷ்டமியின் வரலாறு

இந்தியாவில், கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா மிகுந்த நம்பிக்கையுடன் பிரம்மாண்டமாக, கொண்டாடப்படுகிறது. அண்ணன் கம்சனின் அட்டூழியங்கள் அதிகரித்த வண்ணம் இருந்தன். தனது சகோதரி தேவகியை சிறையில் அடைத்தான் கம்சன். சிறையில் வாழ்ந்த சகோதரி தேவகிக்கு, ஆவணி மாத கிருஷ்ண பக்ஷ அஷ்டமி திதியில் தனது எட்டாவது குழந்தையாக ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்தார். கம்சனின் கொடுங்கோன்மையிலிருந்து மக்களை விடுவிக்க விஷ்ணு கிருஷ்ண அவதாரம் எடுத்தார். 

மேலும் படிக்க | ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்: பூஜை நேரம், முகூர்த்தம் மற்றும் யோகம் குறித்த விவரம்

கிருஷ்ண ஜென்மாஷ்டமியின் முக்கியத்துவம்

ஸ்ரீ கிருஷ்ணர் மும்மூர்த்திகளில் ஒருவரான விஷ்ணுவின் அவதாரம். ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாத கிருஷ்ண பக்ஷ அஷ்டமி திதி நாளில் பகவான் கிருஷ்ணரின் அருளை பெறுவதற்காக விரதம் அனுசரிக்கிறார்கள், பூஜைகள் செய்கிறார்கள். அவர்கள் கீர்த்தனைகளை பாடி கொண்டாடுகிறார்கள். இந்நாளை முன்னிட்டு கோயில்கள் சிறப்பாக அலங்கரிக்கப்படுகின்றன. சில இடங்களில் உறி அடிக்கும் விழாவும் ஜென்மாஷ்டமி அன்று கொண்டாடப்படுகிறது.

மேலும் படிக்க: Krishna Jayanthi: கோபிகைகளின் பானையை கண்ணன் ஏன் உடைத்தார்? உறியடியின் பின்னணி ரகசியம்!

கிருஷ்ண ஜென்மாஷ்டமி கொண்டாடப்படும் விதம்

நடு இரவில் அவதி கண்ணனை நினைத்து, ஜென்மாஷ்டமி நள்ளிரவில், வீட்டில் குழந்தை வடிவ கண்ணன் வருவதாக கொண்டாடி, வீடுகளில் பாத கமல கோலங்களை வரைகின்றனர். குழந்தைகளை கிருஷ்ணரை போன்று ஆடை அணிகலன்களை அணிவிக்கிறார்கள். புஷ்பங்களை சமர்ப்பித்து, தூப-தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். கண்ணனுக்கு குறிப்பாக பால், தயிர், வெண்ணெய் பிடிக்கும். அன்று சீடை முறுக்கு போன்ற பலகாரங்களும் செய்து கண்ணனை வழிபடுகிறார்கள். 

உறி அடி  ஏன், எப்படி கொண்டாடப்படுகிறது?

சில இடங்களில் ஜென்மாஷ்டமி நாளில் உறி அடி  விழா கொண்டாடப்படுகிறது. கன்னையாவுக்கு வெண்ணெய், தயிர் மற்றும் தயிர் மிகவும் பிடிக்கும். வெண்ணெயை அதிகம் விரும்பி, தனது நண்பர்களுடன் சேர்ந்து ஊர் மக்கள் வீட்டில் உள்ள வெண்ணெயை திருடிச் சாப்பிட்டு வந்தார். கண்ணனிடமிருந்து வெண்ணெயை காப்பாற்ற, பெண்கள் வெண்ணெய் பானையை உயரத்தில் தொங்கவிடுவார்கள், ஆனால் பால் கோபாலன் குறும்புகாரன் ஆயிற்றே... தனது நண்பர்களுடன் சேர்ந்து, ஒருவர் மீது ஒருவர் ஏறி நின்று,  உயரத்தில் தொங்கும் பானையிலிருந்து வெண்ணெய்யைத் திருடுவார். கிருஷ்ணரின் இந்த குறும்புகளை நினைவுகூர, ஜென்மாஷ்டமியின் போது பக்தர்கள் பானையை உயரத்தில் தொங்கவிட்டு,  சிறுவர்கள் கோபுரத்தை போல் ஒருவர் மீது ஏறி நின்று உறியடிப்பார்கள். நடனமாடுகிறார்கள், பாடுகிறார்கள், பானையை அடைந்து அதை உடைக்கிறார்கள். அதற்கு தஹி ஹண்டி என்றும் பெயர், மேலே செல்லும் சிறுவர்கள் கோவிந்தா கோவிந்தா என கூறிக் கொண்டே செல்வார்கள்.

மேலும் படிக்க: சூரியனின் பெயர்ச்சியால் ஜென்மாஷ்டமியில் இருந்து மகிழப்போகும் 4 ராசிகள்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

Trending News