பிக்சட் டெபாசிட்களை விட அதிக லாபம் தரும் தபால் நிலையத்தின் 3 திட்டங்கள்!

பெண் குழந்தையின் எதிர்கால தேவைக்கு ஒரு சிறந்த திட்டமாக சுகன்யா சம்ரிதி அக்கவுண்ட்ஸ் ( எஸ்எஸ்ஏ ) திட்டம் செயல்படுகிறது.  

Written by - RK Spark | Last Updated : Jun 30, 2022, 03:14 PM IST
  • ரெப்போ விகிதத்தின் அதிகரிப்பிற்கு பிறகு குறுகிய கால எஃப்டி கணக்குகளுக்கு வட்டி விகிதம் அதிகரித்து இருக்கிறது.
  • இந்த திட்டத்தின் மூலம் எஃப்டி கணக்கு வைத்திருப்போருக்கு அதிக வட்டி விகிதங்கள் கிடைக்கிறது.
  • மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (எஸ்சிஎஸ்எஸ்) என்பது ஒரு சிறிய சேமிப்பு திட்டமாகும்.
பிக்சட் டெபாசிட்களை விட அதிக லாபம் தரும் தபால் நிலையத்தின் 3 திட்டங்கள்! title=

ரிசர்வ் வங்கியின் மானிட்டரி பாலிசி கமிட்டி (எம்பிசி) ஜூன் மாதத்தில் ரெப்போ விகிதத்தை 4.90% ஆக உயர்த்தியதில் இருந்து டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்கள் அதிகமாக உள்ளன.  ரெப்போ விகிதத்தின் அதிகரிப்பிற்கு பிறகு குறுகிய கால எஃப்டி கணக்குகளுக்கு வட்டி விகிதம் அதிகரித்து இருக்கிறது.  தற்போது தபால் நிலையங்களில் சிறப்பான 3 திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இந்த திட்டத்தின் மூலம் எஃப்டி கணக்கு வைத்திருப்போருக்கு அதிக வட்டி விகிதங்கள் கிடைக்கிறது.

மேலும் படிக்க | Mutual Funds: பாதுகாப்பான முறையில் பணத்தை அள்ளலாம்: எளிய முதலீட்டு டிப்ஸ் இதோ

சீனியர் சிட்டிசன் சேவிங்ஸ் ஸ்கீம் (எஸ்சிஎஸ்எஸ்):

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (எஸ்சிஎஸ்எஸ்) என்பது ஒரு சிறிய சேமிப்பு திட்டமாகும், இது என்பிஎஸ்  மற்றும் பிஎம்விவிஐ ஆகியவற்றுக்கு மத்தியில் அதிகம் விரும்பப்படும், மற்றும் வருமானம் ஈட்டக்கூடிய ஒரு திட்டம் இதுவாகும்.  60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 55 வயதுக்கு மேற்பட்ட ஓய்வு பெற்ற சிவில் ஊழியர்கள், வயதான ராணுவ ஊழியர்கள் அனைவரும் இந்த கணக்கை வைத்துக்கொள்ளலாம்.  இந்த திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்தவர்களுக்கு 80சி பிரிவின் கீழ் ரூ.1.5 லட்சம் வரை வரிச்சலுகை கிடைக்கும்.  இந்த திட்டத்தின் மூலம் மூத்த குடிமக்களுக்கு 7.4% வரை வருமானம் கிடைக்கிறது.

பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட் அக்கவுண்ட் (பிபிஎஃப்):

எக்ஸெம்ப்ட்-எக்ஸெம்ப்ட்-எக்ஸெம்ப்ட் ஸ்டேட்டஸ் காரணமாக நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு மிகவும் பிடித்தமான திட்டம் பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட் அக்கவுண்ட் ( பிபிஎஃப் ) ஆகும்.  குறைந்தபட்சமாக ரூ.500 டெபாசிட் மூலம் வருடத்திற்கு ரூ.1.5 லட்சம் வரை பங்களிப்பு கிடைக்கும், மேலும் 80சி பிரிவின் கீழ் முதலீட்டாளர்களுக்கு வரி சலுகை கிடைக்கும்.  இதன் முதிர்வு காலம் 15 வருடங்கள் ஆகும், இதன்மூலம் வருடத்திற்கு 7.1% வரை வருமானம் கிடைக்கும்.  இந்த கணக்கு திறந்து 5 வருடங்களுக்கு பிறகு தான் அவசர தேவைக்காக பணத்தை பெற்றுக்கொள்ள முடியும்.

சுகன்யா சம்ரிதி அக்கவுண்ட்ஸ் (எஸ்எஸ்ஏ):

தனது பெண் குழந்தையின் எதிர்காலத்திற்கு பெற்றோர்கள் பயன்படுத்தக்கூடிய ஒரு சிறந்த திட்டம் தான் இந்த சுகன்யா சம்ரிதி அக்கவுண்ட்ஸ் ( எஸ்எஸ்ஏ ).  10 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் பெயரில் அவரது பாதுகாவலர் இந்த திட்டத்தை பயன்படுத்தி கொள்ளலாம், ஒரு குடும்பத்தில் இரண்டு பெண் பிள்ளைகளுக்கு மட்டுமே இந்த கணக்கை தொடங்கி கொள்ளலாம்.  குறைந்தபட்சமாக ரூ.250 முதல் ரூ.1,50,000 வரை டெபாசிட் செய்து கொள்ளலாம், இந்த கணக்கின் முதிர்ச்சி காலம் 15 ஆண்டுகள் ஆகும்.  இந்த திட்டத்தில் 80சி பிரிவின் கீழ் ரூ.1.5 லட்சம் வரை வரி சலுகை அளிக்கப்படும், மேலும் இந்த திட்டத்தில் ஆண்டுக்கு 7.6% வரை வருமானம் கிடைக்கும்.

மேலும் படிக்க | 7th Pay Commission: ஜூலை மாதம், டிஏ, இபிஎஃப், கிராஜுவிட்டி அனைத்திலும் பம்பர் ஏற்றம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News