Budget 2024: இந்த 4 விஷயங்களுக்கு மட்டும் தான் பட்ஜெட்டில் முன்னுரிமை!

Budget 2024: பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டில் இந்த நான்கு முக்கிய பகுதிகளில் கவனம் செலுத்த உள்ளோம் என்று  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி உள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Jan 30, 2024, 09:29 AM IST
  • பிப்ரவரி 1ம் தேதி இடைக்கால பட்ஜெட்.
  • இந்த அரசின் கடைசி பட்ஜெட் இது தான்.
  • நிறைய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு.
Budget 2024: இந்த 4 விஷயங்களுக்கு மட்டும் தான் பட்ஜெட்டில் முன்னுரிமை! title=

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், இந்த ஆண்டு திட்டமிடப்பட்ட மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக இடைக்கால பட்ஜெட்டில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் மற்றும் ஏழைகளின் நலனுக்கு அரசாங்கம் முக்கியத்துவம் அளிக்கக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளார்.  மேலும் சாதி, சமூகம் அல்லது மதத்தை கருத்தில் கொள்ளாமல் இந்த குழுக்களை மேம்படுத்துவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார். வரும் பிப்ரவரி 1ம் தேதி நிதியமைச்சர்பாராளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை வாசிக்க உள்ளார்.

மேலும் படிக்க | பல நிதியமைச்சர்களின் சாதனைகளை பின்தள்ளி முன்னேறும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

2014 முதல் மோடி அரசாங்கத்தின் நோக்கம் மக்களின் அடிப்படைத் தேவைகளான வீடுகள், தண்ணீர், சாலைகள் மற்றும் மின்சாரம் போன்றவற்றை கொடுப்பது தான் என்று அவர் சுட்டி காட்டினார். முந்தைய 50-60 ஆண்டுகளில் இந்த அவசர உணர்வு இல்லாததை அவர் எடுத்து கூறினார். கூடுதலாக, உலகளாவிய சவால்களுக்கு மத்தியில் இந்தியாவின் நிதி திறனை அதிகப்படுத்த அரசு பாடுபட்டு வருவதாக கூறினார். உணவு ஏற்றுமதி தொடர்பாக நீடித்த ஒப்பந்தத்தை ஏற்படுத்த இந்தியாவுடன் கூட்டு சேர பல நாடுகள் ஆர்வமாக உள்ளன என்றும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

பட்ஜெட்டில் என்ன என்ன எதிர்பார்ப்புகள்?

வேலைவாய்ப்பு: நிறுவனங்களுக்கு மானியம் வழங்கும் தன்னம்பிக்கை இந்தியா வேலைவாய்ப்புத் திட்டத்தை (ABRY) இந்திய அரசு விரிவுபடுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் வேலை வாய்ப்புகள் உருவாகும். இந்தத் திட்டம் மார்ச் 2024க்குள் முடிவடையும். அதே நேரத்தில், கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் NREGS-ன் பட்ஜெட்டையும் அதிகரிக்கலாம். இது தவிர, ரயில்வே, பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு போன்ற துறைகளில் வேலை வாய்ப்புகளை உருவாக்க சில சிறப்பு அறிவிப்புகளையும் வெளியிடலாம்.

வருமான வரி விலக்கு: நடுத்தர மக்களின் வரிச்சுமையை குறைக்க மத்திய அரசும் இந்த பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு அறிவிக்கலாம். வருமான வரியின் 80சி பிரிவின் கீழ் விலக்கு பெறுவதற்கான வரம்பை ஆண்டுக்கு ரூ.1.5 லட்சத்திற்கு மேல் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு செய்தால், பிபிஎஃப் மற்றும் காப்பீட்டின் கீழ் வழங்கப்படும் வரி விலக்கு அதிகரிக்கும், இது நடுத்தர வர்க்கம் மற்றும் சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு நேரடியாக பலனளிக்கும்.

ஜிஎஸ்டியில் இருந்து காப்பீட்டுக்கு விலக்கு: 2024 பட்ஜெட்டில் காப்பீடு தொடர்பான விலக்குகளும் அறிவிக்கப்படலாம். வரவிருக்கும் பட்ஜெட்டில், நிதியமைச்சர் ஜிஎஸ்டியில் இருந்து காப்பீட்டுக் கொள்கைகளுக்கு விலக்கு அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது காப்பீட்டு பிரீமியத்தைக் குறைக்கும். விலக்கு பெறுவதன் மூலம், காப்பீட்டின் எண்ணிக்கையும் அதிகரித்து, பொருளாதாரம் வளரும்.

மேலும் படிக்க | பிப்ரவரி 1 முதல் முக்கிய விதிகளில் மாற்றம்... நோட் பண்ணிக்கோங்க மக்களே..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News