முதல் நாளே அதிர்ச்சி!! LPG Gas சிலிண்டர்களின் விலையில் அதிரடி அதிகரிப்பு, விலை பட்டியல் இதோ

LPG Cylinder Price Hike: எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்குப் பிறகு நாட்டின் முக்கிய நகரங்களில் கேஸ் சிலிண்டர்களின் விலைகளில் என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது என இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 1, 2023, 07:47 AM IST
  • வர்த்தக எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
  • வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்களின் விலை என்ன?
  • வர்த்தக எரிவாயு சிலிண்டர் விலை கடந்த மாதம் குறைந்தது.
முதல் நாளே அதிர்ச்சி!! LPG Gas சிலிண்டர்களின் விலையில் அதிரடி அதிகரிப்பு, விலை பட்டியல் இதோ title=

Commercial LPG Cylinder Price Hike: அக்டோபர் தொடக்கத்தில் எண்ணெய் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளன. இன்று முதல் வர்த்தக எரிவாயு சிலிண்டர் விலை ரூ.200 -க்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளது (Commercial LPG Cylinder Price Hike). புதிய கட்டணங்கள் ஞாயிற்றுக்கிழமை அதாவது அக்டோபர் 1, 2023 முதல் அமலுக்கு வந்துள்ளன. இந்த விலை உயர்வுக்குப் பிறகு நாட்டின் முக்கிய நகரங்களில் கேஸ் சிலிண்டர்களின் விலைகளில் என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது என இந்த பதிவில் காணலாம். 

கேஸ் சிலிண்டர் விலை உயர்வு: முக்கிய நகரங்களில் விலை எவ்வளவு உயர்ந்துள்ளது?

நாட்டின் தலைநகரான டெல்லியில், விலை உயர்வுக்கு பிறகு 19 கிலோகிராம் எல்பிஜி சிலிண்டர் 1731.50 ரூபாய்க்கு விற்கப்படுகின்றது. சென்னையில் வணிக காஸ் சிலிண்டர் விலை ரூ.203 அதிகரித்து, விலை ரூ.1,695 -இல் இருந்து ரூ.1898 ஆக உயர்ந்துள்ளது. மற்ற பெருநகரங்களைப் பற்றி பேசுகையில், கொல்கத்தாவில் எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.203.50 அதிகரித்துள்ளது. இங்கு வணிக எரிவாயு சிலிண்டர் ரூ.1636.00 -க்கு பதிலாக தற்போது ரூ.1,839.50 -க்கு கிடைக்கிறது. மும்பையில், 19 கிலோ வணிக ரீதியான எல்பிஜி எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.204 அதிகரித்துள்ளது. முன்னர் சிலிண்டருக்கு ரூ.1,482 ஆக இருந்த விலை தற்போது 1,684 ரூபாயாக உயர்ந்துள்ளது. 

வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்களின் விலை என்ன? (Price of Domestic LPG Gas Cylinder)

கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் வீட்டு உபயோக காஸ் சிலிண்டரின் (Domestic LPG Gas Cylinder Price) விலையை 200 ரூபாய் அளவுக்கு அரசாங்கம் குறைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்குப் பிறகு, அக்டோபர் 1 ஆம் தேதி வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை. இது பழைய விகிதத்திலேயெ உள்ளது. நாட்டின் நான்கு பெருநகரங்களில், 14.20 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலை பின்வருமாறு

சென்னை - ரூ.918.50
டெல்லி - ரூ.903
கொல்கத்தா - ரூ.929
மும்பை - ரூ.902.50

மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு அட்டகாசமான செய்தி.... தீபாவளிக்கு முன் அதிரடி டிஏ உயர்வு

வர்த்தக எரிவாயு சிலிண்டர் விலை கடந்த மாதம் குறைந்தது

செப்டம்பர் 2023 இல், எண்ணெய் நிறுவனங்கள் வீட்டு உபயோக மற்றும் வணிக எரிவாயு சிலிண்டர்களின் (Gas Cylinder) விலையில் பெரிய குறைப்பைச் செய்தன. கடந்த மாதம் 19 கிலோ சிலிண்டர் விலை ரூ.158 வரை குறைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தலைநகர் டெல்லியில் அதன் விலை 1,522 ரூபாயை எட்டியது.வணிக எரிவாயு சிலிண்டர்களின் விலை உயர்வின் விளைவால், உணவகங்களில் சாப்பிடுவதற்கு ஆகும் செலவு அதிகரிக்கலாம். 

பண்டிகை காலத்தில் பொதுமக்களுக்கு அதிர்ச்சி

இந்தியாவில் இது பண்டிகை காலம். நவராத்திரி, தீபாவளி என தொடர்ந்து பல பண்டிகைகள் வரவுள்ளன. இந்த நேரத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டால் அது மக்களை வெகுவாக பாதிக்கும். வணிக ரீதியான கேஸ் சிலிண்டர்களின் விலையில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றம் பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க | வீட்டுக் கடனுக்கு ரூ 9 லட்சம் மானியம்! வட்டி கிடையாது! அசல் மட்டுமே செலுத்தினால் போதும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News