நீல நிற ஆதார் அட்டை பற்றி உங்களுக்கு தெரியுமா? இது யாருக்கு வழங்கப்படுகிறது?

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நீல நிற ஆதார் அட்டை வழங்கபடுகிறது, ஆனால் குழந்தைக்கு 5 வயது ஆகும் தருவாயில் இந்த அட்டை செல்லாது.  

Written by - RK Spark | Last Updated : Nov 9, 2022, 11:06 AM IST
  • ஆதார் கார்ட் முக்கியமான ஒன்றாக மாறி உள்ளது.
  • குழந்தைகளுக்கு நீல நிற ஆதார் வழங்கப்படுகிறது.
  • 5 வயதிற்கு மேல் மீண்டும் புதுப்பிக்க வேண்டும்.
நீல நிற ஆதார் அட்டை பற்றி உங்களுக்கு தெரியுமா? இது யாருக்கு வழங்கப்படுகிறது? title=

இந்திய குடிமகன்களின் முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக மாறியுள்ள ஆதார் அட்டையை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யூஐடிஏஐ) மக்களுக்கு வழங்கிவருகிறது.  அரசு மற்றும் தனியார் என அனைத்து விதமான முக்கிய பணிகளுக்கும் இப்போது ஆதார் அட்டை தான் முதன்மையான அடையாளமாக விளங்கி கொண்டு இருக்கிறது.  ஆதார் அட்டையிலுள்ள 12 இலக்க எண்ணில் மொத்த மக்கள் தொகை மற்றும்  பயோமெட்ரிக் டேட்டாக்கள் போன்ற முக்கியமான தகவல்கள் உள்ளது.  ஆதார் அட்டையை பெரியவர்கள் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்கிற நிபந்தனை எதுவும் கிடையாது, பிறந்த குழந்தைக்கு கூட ஆதார் அட்டை வழங்கப்படுகிறது.  குழந்தைகளுக்கென்று பிரத்யேகமாக வழங்கப்படும் ஆதார் அட்டையானது பால் ஆதார் என்று அழைக்கப்படுகிறது, ஆனால் இந்த பால் ஆதார் அட்டை பெரியவர்களின் ஆதார் அட்டையிலிருந்து வேறுபடுகிறது.

மேலும் படிக்க | ஏர்டெல், ஜியோ பயனர்கள் எச்சரிக்கை: 5ஜி போன்களை வாங்க வேண்டாம்! 

பொதுவாக ஆதார் அட்டை பெற எப்படி விண்ணப்ப செயல்முறை இருக்குமோ அதனை பின்பற்றியே பால் ஆதார் அட்டைக்கும் விண்ணப்பிக்க வேண்டும்.  பதிவு மையத்தில் உரிய விண்ணப்பப் படிவத்தை பெற்று அதனை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைக்க வேண்டும்.  இதில், இருப்பிடச் சான்று (பிஓ), உறவுச் சான்று (பிஓஆர்) மற்றும் பிறந்த தேதி ஆவணம் (டிஓபி ) போன்ற ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும். யூஐடிஏஐ 31 வகையான பிஓஐ-கள் மற்றும் 44 பிஓஏ, 14 பிஓஆர்மற்றும் 14 டிஓபி ஆவணங்களை ஏற்றுக்கொள்கிறது, குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஆதார் அட்டை நீல நிறத்தில் வழங்கப்படுகிறது. 

blue

பால் ஆதார் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை:

1) 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நீல நிற ஆதார் அட்டை வழங்கபடுகிறது, ஆனால் குழந்தைக்கு 5 வயது ஆகும் தருவாயில் இந்த அட்டை செல்லாது.

2) குழந்தையின் பள்ளி ஐடியை ஆதார் பதிவுக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.

3) குழந்தை 5 வயதாக இருக்கும்போது ஆதாரில் பதிவு செய்யப்பட்ட பயோமெட்ரிக் டேட்டாவை மீண்டும் குழந்தையின் 15 வயதில் அப்டேட் மறக்காமல் செய்ய வேண்டும்.  இந்த பயோமெட்ரிக் அப்டேட் குழந்தைகளுக்கு இலவசம்.

4) குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் அல்லது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சான்று ஏதேனும் ஒன்றை வைத்து குழந்தைக்கான ஆதார் அட்டையை பெற்றுக்கொள்ளலாம்.

5) குழந்தைகளுக்கான ஆதாரில் அவர்களின் கைரேகைகள் மற்றும் கருவிழி போன்ற பயோமெட்ரிக் தகவல்கள் இருக்காது.  அதனால் குழந்தை 5 வயதைத் தாண்டியவுடன் அவர்களின் பயோமெட்ரிக் டேட்டாக்களை அப்டேட் செய்யப்பட வேண்டும்.

மேலும் படிக்க | பான் கார்டு & பே ஸ்லிப் இல்லாமல் தனிநபர் கடன் பெறுவது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News