EPF Rule: பிஎஃப் கணக்கு மூடப்பட்டாலும் வட்டி கிடைக்குமா? புதிய விதி என்ன?

EPFO: உங்கள் இபிஎஃப் கணக்கு செயலிழந்தாலும், அதற்கு வட்டி கிடைக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இது குறித்த விரிவான தகவல்களை இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 29, 2022, 11:07 AM IST
  • இபிஎஃப் கணக்கு, அதாவது பிஎஃப் கணக்கு வேலை செய்பவர்களுக்காக திறக்கப்படுகிறது.
  • அதில் பணியாளர் பணிபுரியும் நிறுவனமும், பணியாளரும் சமமான பங்களிப்பை அளிக்கிறார்கள்.
  • அதில் டெபாசிட் செய்யப்படும் பணத்திற்கு அரசு மூலம் வட்டி வழங்கப்படுகிறது.
EPF Rule: பிஎஃப் கணக்கு மூடப்பட்டாலும் வட்டி கிடைக்குமா? புதிய விதி என்ன? title=

நமது நாட்டில், பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) கீழ் கோடிக்கணக்கான பணியாளர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். ஊழியர்களுக்கு பிஎஃப் கணக்கின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் வட்டி வழங்கப்படுகிறது. தற்போது 8.1 சதவீத வட்டியை மத்திய அரசு வழங்குகிறது. தற்போது செயலில் உள்ள கணக்குகளுக்கு மட்டுமே வட்டிப் பணம் வெளியிடப்படுகிறது. எனினும், உங்கள் இபிஎஃப் கணக்கு செயலிழந்தாலும், அதற்கு வட்டி கிடைக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இது குறித்த விரிவான தகவல்களை இந்த பதிவில் காணலாம்.

இதைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன், இபிஎஃப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். இபிஎஃப் கணக்கு, அதாவது பிஎஃப் கணக்கு வேலை செய்பவர்களுக்காக திறக்கப்படுகிறது. அதில் பணியாளர் பணிபுரியும் நிறுவனமும், பணியாளரும் சமமான பங்களிப்பை அளிக்கிறார்கள். அதில் டெபாசிட் செய்யப்படும் பணத்திற்கு அரசு மூலம் வட்டி வழங்கப்படுகிறது. 

பொதுவாக பிஎஃப் கணக்கில் சேரும் தொகை எதிர்காலத்திற்கான ஒரு பாதுகாப்பு நிதியாக பார்க்கப்படுகின்றது. அதுமட்டுமின்றி, திடீர் அவசர தேவைகள் ஏற்படும்போதும், இபிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை எடுக்கலாம். இருப்பினும், ஒரு பணியாளர் தனது பணிக்காலத்தில் இபிஎஃப்-லிருந்து பணத்தை எடுக்காமல் இருந்தால், பணி ஓய்வு பெறும் நேரத்தில், அதில் சேர்க்கப்பட்டுள்ள நிதி, வட்டியுடன் சேர்ந்து பெரிய தொகையாக கிடைக்கும். 

மேலும் படிக்க | LPG Gas விலை குறையும்! நம்பிக்கை கொடுக்கும் அரசின் சிறப்புத் திட்டம் 

மூடப்பட்ட பிஎஃப் கணக்கிற்கும் வட்டி கிடைக்குமா?

நீங்கள் இபிஎஃப் கணக்கு வைத்திருப்பவராக இருந்தால், உங்களுக்கு ஒவ்வொரு வருடமும் வட்டி வழங்கப்படும். 2013 நிதியாண்டில் ஒரு உறுப்பினர் மூன்று ஆண்டுகளாக இபிஎஃப்-க்கு பங்களிக்கவில்லை என்றால், அவரது வட்டி பணத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் இந்த முடிவு 2016 இல் திரும்பப் பெறப்பட்டது. அதாவது அனைத்து கணக்குகளுக்கும் வட்டி செலுத்தப்படும்.

இபிஎஃப் கணக்கில் எப்போதெல்லாம் வட்டி கிடைக்காது

கணக்கில் இருந்து முழுப் பணமும் எடுக்கப்பட்டு, அது பயன்படுத்தப்படாமல் இருந்தால், அதற்கு வட்டி செலுத்தப்படாது. மறுபுறம், இபிஎஃப் கணக்கின் ஓய்வு காலம் முடிந்தாலும், வட்டி வழங்கப்படாது. மேலும், கணக்கு வைத்திருப்பவர்களின் வயது 58 ஆக இருந்து, நீண்ட காலமாக இபிஎஃப்- இன் தொகை எடுக்கப்படவில்லை என்றாலும், வட்டித் தொகை வழங்கப்படாது.

கணக்கு இருப்பை எவ்வாறு சரிபார்க்கலாம்

நீங்கள் இபிஎஃப்ஓ-​​இல் உறுப்பினராக இருந்து, இபிஎஃப் கணக்கின் கீழ் இருப்பைச் சரிபார்க்க விரும்பினால், அதை ஆன்லைனில் சரிபார்க்கலாம். இபிஎஃப்ஓவின் அதிகாரப்பூர்வ இணையதளம், எஸ்எம்எஸ், மிஸ்டு கால் மற்றும் உமங் ஆப் மூலம் பிஎஃப் கணக்கு இருப்பைச் சரிபார்க்கலாம்.

மேலும் படிக்க | டிசம்பர் 1 முதல் மாற இருக்கு 5 முக்கியமான மாற்றங்கள் என்னென்ன? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News