EPS Pension: வேலை பார்த்துக்கொண்டே ஓய்வூதியமும் பெற முடியுமா? EPFO விதி என்ன?

EPS Pension Scheme: இத்திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், ஒருவர் 58 வயதுக்குப் பிறகும் தொடர்ந்து பணிபுரிந்தாலும், அவருக்கு இபிஎஸ் ஓய்வூதியம் கிடைக்கும். அதாவது வேலையைத் தொடர்ந்துகொண்டே அவர் ஓய்வூதியம் பெற முடியும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 15, 2024, 04:33 PM IST
  • ஓய்வூதியம் பெற 10 ஆண்டுகள் பணிபுரிய வேண்டியது கட்டாயம்.
  • 50 வயதுக்கு குறைவாக உள்ள ஊழியர்கள் ஓய்வூதியம் பெற முடியுமா?
  • 58 ஆண்டுகளுக்கு முன் ஓய்வூதியத் தொகை எவ்வளவு கிடைக்கும்?
EPS Pension: வேலை பார்த்துக்கொண்டே ஓய்வூதியமும் பெற முடியுமா? EPFO விதி என்ன? title=

EPS Pension Scheme: PF உறுப்பினரா நீங்கள்? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) மூலம் ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம் (EPS) நிர்வகிக்கப்படுகிறது. 58 வயதில் ஓய்வுபெற்ற, ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு சமூகப் பாதுகாப்பை வழங்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். 

EPS 1995
இபிஎஸ் 1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் இபிஎஃப் கணக்கு (EPF Account) உள்ளது. இபிஎஃப் உறுப்பினர்கள் (EPF Members) அனைவரும் தாமாக இபிஎஃஸ் -இலும் உறுப்பினர்களாக்கப்படுகிறார்கள். 

Employee Pension Scheme

இத்திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், ஒருவர் 58 வயதுக்குப் பிறகும் தொடர்ந்து பணிபுரிந்தாலும், அவருக்கு இபிஎஸ் ஓய்வூதியம் கிடைக்கும். அதாவது வேலையைத் தொடர்ந்துகொண்டே அவர் ஓய்வூதியம் பெற முடியும்.

EPS 95 Pension Scheme

இபிஎஃப் சந்தாதாரர்கள் (EPF Subscribers) தங்கள் அடிப்படி சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் மாதா மாதம் 12% தொகையை பிஎஃப் கணக்கில் பங்களிக்கிறார்கள். அதே அளவு தொகையை நிறுவனமும் பங்களிக்கின்றது. பணியாளர்கள் அளிக்கும் தொகை முழுவதும் இபிஎஃப் கணக்கிற்கு செல்கிறது. ஆனால், நிறுவனத்தின் பங்களிப்பில் 8.33% ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தில் (EPS) டெபாசிட் செய்யப்படுகிறது. 3.67% EPF இல் டெபாசிட் செய்யப்படுகின்றது. EPS 95 திட்டம், 1952 ஆம் ஆண்டின் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி மற்றும் இதர விதிகள் சட்டம் பொருந்தும் நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களின் அனைத்து ஊழியர்களுக்கும் பொருந்தும்.

EPS Pension: ஓய்வூதியம் பெற 10 ஆண்டுகள் பணிபுரிய வேண்டியது கட்டாயம்

- EPS ஓய்வூதியத் திட்டத்தின் பலன் EPFO ​​சந்தாதாரர்களாக உள்ளவர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.
- EPFO இன் விதிகளின்படி, EPF க்கு பங்களித்து, 10 வருட சேவையை முடித்து, 50 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்கள் ஓய்வூதியம் பெற தகுதியுடையவர்கள். 
- மொத்த பணிக்காலம் 10 ஆண்டுகளுக்கு குறைவாக இருந்தால், ஓய்வூதியத்திற்காக டெபாசிட் செய்யப்பட்ட தொகையை இடையில் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.

மேலும் படிக்க | இந்த பெண்களுக்கு தீபாவளி போனஸ், மாநில அரசு அசத்தல் அறிவிப்பு... யாருக்கெல்லாம் கிடைக்கும்?

EPS Pension: 50 வயதுக்கு குறைவாக உள்ள ஊழியர்கள் ஓய்வூதியம் பெற முடியுமா?

இபிஎஃப் சந்தாதாரர் 10 வருட சேவையை முடித்திருந்தாலும் அவரது வயது 50 வயதுக்கு குறைவாக இருந்தால், அவர் ஓய்வூதியத்தை கோர முடியாது. அத்தகைய சூழ்நிலையில், வேலையை விட்ட பிறகு, அவர்களுக்கு EPF இல் டெபாசிட் செய்யப்பட்ட தொகை மட்டுமே கிடைக்கும்.

EPS Pension: 58 ஆண்டுகளுக்கு முன் ஓய்வூதியத் தொகை எவ்வளவு கிடைக்கும்?

- ஒரு ஊழியர் 10 ஆண்டுகள் பணிபுரிந்திருந்து, அவரது வயது 50 முதல் 58 வயதுக்குள் இருந்தால், அவர் ஓய்வூதியம் பெற தகுதியுடையவர் ஆகிறார்.
- ஆனால் அவர் ஓய்வூதியமாக பெறும் தொகை குறைவாக இருக்கும். 
- அதாவது, அவர் 10 ஆண்டுகள் பணிபுரிந்திருந்தால், 50 வயதிற்குப் பிறகு எர்ளி பென்ஷனைப் பெறலாம். 
- இருப்பினும், 58 வயதுக்கு முன்னரே ஓய்வூதியத்தை கோரும்போது, ​​58 வயதிற்கு ஏற்ப, ஒவ்வொரு ஆண்டுக்கும் ஓய்வூதியம் 4 சதவீதம் குறைக்கப்படுகிறது. 
- உதாரணமாக, ஒரு EPF ​​உறுப்பினர் 55 வயதில் மாதாந்திர ஓய்வூதியத்தை கோர விரும்பினால், அவர் ஓய்வூதியத் தொகையில் 88 சதவீதம் (100% - 3×4) மட்டுமே பெறுவார்.

EPS 95: ஊனமுற்றோர் ஓய்வூதியம்

- இபிஎஸ் 95ன் கீழ் ஊனமுற்றோர் ஓய்வூதியத்திற்கான (Diabled Pension) வசதியும் உள்ளது.
- சேவையின் போது நிரந்தரமாக அல்லது சில உறுப்புகளில் ஊனமுற்ற உறுப்பினர்களுக்கு இந்த நிதி உதவி கிடைக்கிறது. 
- இத்தகைய உறுப்பினர்களுக்கு, வயது நிபந்தனை மற்றும் 10 ஆண்டுகளுக்கான ஓய்வூதிய நிதிக்கான பங்களிப்பு ஆகிய நிபந்தனைகள் பொருந்தாது. 
- ஒரு உறுப்பினர் இரண்டு ஆண்டுகள் EPS -இல் பங்களித்திருந்தாலும், அவர் இந்த ஓய்வூதியத்திற்கு தகுதியானவராகிறார்.

மேலும் படிக்க | PF சந்தாதாரர்களுக்கு முக்கிய செய்தி: நிறுவனங்களுக்கு EPFO புதிய விதிகள் அறிமுகம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News