பிப்ரவரி 2023 வங்கி விடுமுறை நாட்கள்! முழு பட்டியல் இதோ!

Bank Holidays: இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின்படி, பிப்ரவரி மாதத்தில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மொத்தம் 10 வங்கி விடுமுறைகள் இருக்கும்.   

Written by - RK Spark | Last Updated : Jan 25, 2023, 08:32 AM IST
  • பிப்ரவரியில் 10 நாட்கள் வங்கி விடுமுறை.
  • விடுமுறை பட்டியலை அறிவித்த ஆர்பிஐ.
பிப்ரவரி 2023 வங்கி விடுமுறை நாட்கள்! முழு பட்டியல் இதோ! title=

2023 ஆம் ஆண்டின் முதல் மாதமான ஜனவரி முடிவடையவுள்ள நிலையில், அடுத்த மாதமான பிப்ரவரி மாதத்தில் எத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்கிற தகவல் வெளியிடப்பட்டு இருக்கிறது.  என்னதான் நாம் மொபைல் மூலமாக இணைய வங்கிச் சேவை வசதிகளை பயன்படுத்தி வந்தாலும் பலரது வாழ்க்கையில் வங்கிகள் தான் முக்கியப் பங்கு வகிக்கின்றது.  எடுத்துக்காட்டாக, பணம் திரும்பப் பெறுதல் மற்றும் டிமாண்ட் டிராஃப்ட் போன்ற வேலைகளுக்கு மக்கள் வங்கிகளுக்கு தான் செல்ல வேண்டியிருக்கும்.  அப்படி இருக்கையில் நீங்கள் வங்கிக்கு செல்லும் அன்றைய தினம் வங்கி மூடப்பட்டு இருந்தால், உங்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படும்.  அதனால் நீங்கள் ஒவ்வொரு மாதத்திலும் வங்கிகள் எந்தெந்த நாட்களில் மூடப்பட்டு இருக்கும் என்பதை முன்கூட்டியே தெரிந்து வைத்திருப்பது உங்களுக்கு நல்லது.  இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின்படி, பிப்ரவரி மாதத்தில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மொத்தம் 10 வங்கி விடுமுறைகள் இருக்கும். 

மேலும் படிக்க | ஏர்டெல் யூஸ் பண்றீங்களா? உங்களுக்கு நெட்ஃபிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் இலவசம்!

பிப்ரவரி 2023 வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல்:

பிப்ரவரி 5, 2023 ஞாயிற்றுக்கிழமை - (இந்தியா முழுவதும்)

பிப்ரவரி 11, 2023 இரண்டாவது சனிக்கிழமை - (இந்தியா முழுவதும்)

பிப்ரவரி 12, 2023 ஞாயிற்றுக்கிழமை - (இந்தியா முழுவதும்)

பிப்ரவரி 15, 2023 லுய்-நகை-நி - (ஹைதராபாத்)

பிப்ரவரி 18, 2023 மகாசிவராத்திரி - (அகமதாபாத், பேலாப்பூர், பெங்களூரு, ஹைதராபாத், கான்பூர், லக்னோ, மும்பை, நாக்பூர், ராய்ப்பூர், ராஞ்சி, சிம்லா, திருவனந்தபுரம்)

பிப்ரவரி 19, 2023 ஞாயிற்றுக்கிழமை - (இந்தியா முழுவதும்)

பிப்ரவரி 20, 2023 ஒரு மாநில நாள் - (ஐஸ்வால்)

பிப்ரவரி 21, 2023 லோசர் - (காங்டாக்)

பிப்ரவரி 25, 2023 மூன்றாவது சனிக்கிழமை - (இந்தியா முழுவதும்)

பிப்ரவரி 26, 2023 ஞாயிற்றுக்கிழமை - (இந்தியா முழுவதும்)

வங்கி விடுமுறை நாட்களிலும் இணையம் மற்றும் மொபைல் பேங்கிங், பணப் பரிமாற்றங்களுக்கான யூபிஐ, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளின் பயன்பாடு போன்ற இதர வசதிகளும் உங்களுக்கு கிடைக்கும் என்பதால் நீங்கள் இதனை பற்றி கவலைப்பட தேவையில்லை.

மேலும் படிக்க | வங்கி லாக்கர் ஒப்பந்தம் தொடர்பாக ரிசர்வ் வங்கி முக்கிய உத்தரவு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News