ஏர்டெல் யூஸ் பண்றீங்களா? உங்களுக்கு நெட்ஃபிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் இலவசம்!

Airtel Black plans with free OTT benefits: ஏர்டெல் அதன் பயனர்களுக்கு நெட்ப்ளிக்ஸ், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் வீடியோக்கள் போன்ற பல டிஜிட்டல் தளங்களின் இலவச ஓடிடி சந்தாக்களுடன், அன்லிமிடட் அழைப்பு மற்றும் இணைய நன்மைகளையும் வழங்குகிறது.    

Written by - RK Spark | Last Updated : Jan 25, 2023, 07:24 AM IST
  • ஏர்டெல் கூடுதல் பலன்களுடன் கூடிய ரீசார்ஜ் திட்டத்தினை வழங்குகிறது.
  • ஏர்டெல் பயனர்களுக்கு நெட்ப்ளிக்ஸ், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், அமேசான் இலவசம்.
  • அன்லிமிடட் அழைப்பு மற்றும் இணைய நன்மைகளையும் வழங்குகிறது.
ஏர்டெல் யூஸ் பண்றீங்களா? உங்களுக்கு நெட்ஃபிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் இலவசம்!

Airtel Black plans with free OTT benefits: ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் நலனுக்கென சிறந்த விலையில் கூடுதல் பலன்களுடன் கூடிய ரீசார்ஜ் திட்டத்தினை வழங்குகிறது.  ஏர்டெல் அதன் வாடிக்கையாளர்களை ஒரு திட்டத்தின் கீழ் இரண்டு அல்லது பல சேவைகளை பயன்படுத்த அனுமதிக்கிறது.  ஏர்டெல் பிளாக் என அழைக்கப்படும் இந்த சேவையானது, ஏர்டெல்லின் மொபைல், டிடிஹெச் மற்றும் ஃபைபர் சேவைகளை ஒரே திட்டத்தில் இணைக்க பயனர்களை அனுமதிக்கிறது.  இதுதவிர ஏர்டெல் அதன் பயனர்களுக்கு நெட்ப்ளிக்ஸ், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் வீடியோக்கள் போன்ற பல டிஜிட்டல் தளங்களின் இலவச ஓடிடி சந்தாக்களுடன், அன்லிமிடட் அழைப்பு மற்றும் இணைய நன்மைகளையும் வழங்குகிறது.

மேலும் படிக்க: வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி குடுத்த BSNL! இனி இந்த திட்டம் இல்லை!

ஏர்டெல் பிளாக் ரூ 699 திட்டம்:  இந்த திட்டத்தின் கீழ், பயனர்கள் ஃபைபர் மற்றும் லேண்ட்லைன் இணைப்பு, அன்லிமிடட் அழைப்பு மற்றும் 40 எம்பிபிஎஸ் இணைய வேகத்தை பெறலாம்.  இதில் பயனர்கள் டிடிஹெச் மூலம் ரூ.300 மதிப்புள்ள டிவி சேனல்களுக்கான அணுகலைப் பெறலாம் மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் செயலிக்கான இலவச சந்தாவையும் பெறலாம்.  மேலும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம், சோனி லிவ், லயன்ஸ்கேட் போன்ற பல ஓடிடி சேனல்களை பெறலாம்.

ஏர்டெல் பிளாக் ரூ 899 திட்டம்: இந்த திட்டத்தில் பயனர்கள் 2 போஸ்ட்பெய்டுகளை டிடிஹெச் உடன் இணைத்து 105 ஜிபி இணைய டேட்டா, வரம்பற்ற அழைப்பு மற்றும் பல நன்மைகளைப் பெறலாம். பயனர்கள் அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி பிளஸ் ஹோஸ்டார் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் செயலிக்கான இலவச சந்தாவைப் பெறுவார்கள்.

ஏர்டெல் பிளாக் ரூ 1098 திட்டம்: ஃபைபர் மற்றும் லேண்ட்லைன் இணைப்பை இணைத்து, பயனர்கள் 100 Mbps வேகத்தில் அன்லிமிடட் அழைப்பு மற்றும் இணைய நன்மைகளைப் பெறலாம்.  போஸ்ட்பெய்டு மொபைல் இணைப்பில், பயனர்கள் அன்லிமிடட் அழைப்புடன் 75 ஜிபி டேட்டாவைப் பெறலாம்.  அமேசான் பிரைம் வீடியோ மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாருக்கு இலவச சந்தாவை இந்த திட்டம் வழங்குகிறது.

ஏர்டெல் பிளாக் 1099 திட்டம்: இந்தத் திட்டங்கள் ஃபைபர், லேண்ட்லைன் மற்றும் டிடிஹெச் இணைப்புடன் அன்லிமிடட் அழைப்பு மற்றும் 200 எம்பிபிஎஸ் இணைய வேகம் மற்றும் ரூ.350 மதிப்புள்ள டிவி சேனல்களை வழங்குகிறது.  அமேசான் ப்ரைம் வீடியோ, டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் போன்றவற்றின் நன்மைகளை வழங்குகிறது.

ஏர்டெல் பிளாக் ரூ 1599 திட்டம்: ஃபைபர், லேண்ட்லைன் மற்றும் டிடிஹெச் நன்மைகளுடன் நெட்ப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் வீடியோ, டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஆகியவற்றுக்கான இலவச சந்தாவுடன், 300 எம்பிபிஎஸ் இணைய வேகம் கிடைக்கிறது.

ஏர்டெல் பிளாக் ரூ 1799 திட்டம்: இந்த திட்டத்தின் கீழ், பயனர்கள் ஃபைபர், லேண்ட்லைன் மற்றும் 4 போஸ்ட்பெய்ட் மொபைல் இணைப்புகளை பெற முடியும்.  அன்லிமிடட் அழைப்பு, ஃபைபரில் 200 எம்பிபிஎஸ் இணைய வேகம் மற்றும் போஸ்ட்பெய்டு மொபைலில் 190ஜிபி இணைய டேட்டா போன்ற நன்மைகளை வழங்குகிறது.  இதுதவிர  அமேசான் ப்ரைம் வீடியோ, டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஆகியவற்றின் நன்மைகளும் கிடைக்கும்.

ஏர்டெல் பிளாக் ரூ 2299 திட்டம்: இதில் ஃபைபர் லேண்ட்லைன் மற்றும் 4 போஸ்ட்பெய்ட் இணைப்புகளை இணைக்க முடியும்.  அன்லிமிடட் அழைப்பு, ஃபைபரில் 300 எம்பிபிஎஸ் வேகம் மற்றும் மொபைல் இணைப்பில் 240ஜிபி டேட்டாவை வழங்குகிறது.

மேலும் படிக்க: BSNL: ரூ.397-க்கு ரீச்சார்ஜ் செய்தால் வருஷம் முழுவதும் டேட்டா, அழைப்புகள் இலவசம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

More Stories

Trending News