மூத்த குடிமக்களுக்கு அரசு புதிய திட்டம்! இனி மாதம் ரூ.18,500 பெறலாம்!

அரசாங்கம் PMVVY திட்டம் மூலமாக 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு மானியத்துடன் கூடிய ஓய்வூதியத்தை வழங்குகிறது.  

Written by - RK Spark | Last Updated : Aug 21, 2022, 02:09 PM IST
  • மூத்த குடிமக்களுக்கு அரசாங்கத்தின் அசத்தலான ஓய்வூதிய திட்டம்.
  • 60 வயதிற்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் ரூ.18500 ஓய்வூதியம் பெறமுடியும்.
  • மார்ச் 31, 2023 வரை 60 வயது வந்த எந்தவொரு நபரும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
மூத்த குடிமக்களுக்கு அரசு புதிய திட்டம்! இனி மாதம் ரூ.18,500 பெறலாம்! title=

ஒவ்வொரு நபரும் அவர்களின் எதிர்கால தேவையை கருத்திற்கொண்டு நிதி பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வண்ணம் பல்வேறு முதலீட்டு முறைகளை நாடுகின்றனர்.  இதற்கென்று பல்வேறு முதலீட்டு முறைகள் உள்ளன, அதிலும் குறிப்பாக மூத்த குடிமக்களின் நலனுக்காக அரசாங்கம் சிறப்பான திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.  அரசாங்கத்தின் இந்த திட்டத்தின் மூலம் வயது மூப்படைந்த பிறகு அவர்களுக்கு மிகப்பெரிய ஓய்வூதியம் கிடைக்கும், மேலும் இதில் நீங்கள் முதலீடு செய்யும் அசல் பணம் பாதுகாப்பாக இருப்பதோடு நிலையான வருமானமும் கிடைக்கும். அரசாங்கத்தின் இந்த  மூத்த குடிமக்கள் பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனாவில் (PMVVY) திட்டத்தின் கீழ், 60 வயதிற்குப் பிறகு கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து ஒவ்வொரு மாதமும் ரூ.18500 ஓய்வூதியம் பெறமுடியும்.  இதில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு உங்கள் முழு முதலீடும் திரும்பப் பெறப்படும்.

அரசாங்கம் PMVVY திட்டம் மூலமாக 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு மானியத்துடன் கூடிய ஓய்வூதியத்தை வழங்குகிறது.  இதன்மூலம் மூத்த குடிமக்களுக்கு மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு அல்லது வருடாந்திர ஓய்வூதிய வசதி வழங்கப்படுகிறது, இந்தத் திட்டத்தின் பலனை முழுமையாக பெற விரும்புபவர்கள் மொத்தமாக ரூ.15 லட்சம் முதலீடு செய்ய வேண்டும்.  மார்ச் 31, 2023 வரை 60 வயது வந்த எந்தவொரு நபரும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.  மூத்த குடிமக்களுக்கான இந்தத் திட்டத்தின் காலம் மொத்தம் 10 ஆண்டுகள். PMVVY-ன் கீழ் ஓய்வூதியம் வாங்குபவர் தேர்ந்தெடுக்கும் முறையைப் பொறுத்து மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு அல்லது வருடாந்திர அடிப்படையில் செலுத்தலாம்.  முதல் தவணை செலுத்திய நாளிலிருந்து 1 வருடம், 6 மாதங்கள், 3 மாதங்கள் அல்லது 1 மாதத்திற்குப் பிறகு தொடங்குகிறது.  உதாரணமாக, நீங்கள் மாதாந்திர ஓய்வூதியம் செலுத்தும் முறையைத் தேர்ந்தெடுத்திருந்தால், இப்போது திட்டத்தை வாங்கினால், 1 மாதத்திற்குப் பிறகு உங்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கும்.

மேலும் படிக்க | இந்த தகவலை யாருக்கும் அனுப்ப வேண்டாம்! ஊழியர்களுக்கு EPFO எச்சரிக்கை!

இந்த திட்டத்தில் மாதந்தோறும் குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ 1000 மற்றும் அதிகபட்ச ஓய்வூதியமாக மாதம் ரூ 9250 கிடைக்கும்.  இத்திட்டத்தின் கீழ் கிடைக்கும் குறைந்தபட்ச கொள்முதல் விலை மாதாந்திர ஓய்வூதியம் ரூ.1,62,162, காலாண்டு ஓய்வூதியம் ரூ.1,61,074, அரையாண்டு ஓய்வூதியம் ரூ.1,59,574 மற்றும் ஆண்டு ஓய்வூதியம் ரூ.1,56,658 ஆகும்.  இத்திட்டத்தின் கீழ் அதிகபட்ச கொள்முதல் விலை மாதாந்திர ஓய்வூதியம் ரூ.15 லட்சம், காலாண்டு ஓய்வூதியம் ரூ.14,89,933, அரையாண்டு ஓய்வூதியம் ரூ.14,76,064 மற்றும் ஆண்டு ஓய்வூதியம் ரூ.14,49,086 ஆகும்.  31-03-2023 வரை வாங்கிய பாலிசிகளுக்கு, திட்டத்திற்குப் பொருந்தும் வட்டி விகிதம் மாதந்தோறும் 7.40% pa ஆக இருக்கும்.

மேலும் படிக்க | வீட்டுக்கடன் வாங்கணுமா? மிகக்குறைந்த வட்டியில் கடன் வழங்கும் வங்கிகள், நிதி நிறுவனங்கள் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News