இந்தியாவில் அதிகரித்து வரும் மோசடி சம்பவங்களை கருத்திற்கொண்டு, ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) அதன் உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சமூக ஊடகங்கள் வாயிலாக அதன் உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இபிஎஃப்ஓ தனது ட்விட்டர் கணக்கு மூலம் தொலைபேசி அல்லது சமூக ஊடகங்களில் யாருக்கும் தனிப்பட்ட தகவல்களை வெளியிட வேண்டாம் என்று அதன் உறுப்பினர்களை எச்சரித்துள்ளது. மோசடியில் ஈடுபடும் கும்பல் மக்களின் ஆதார் எண், பான் எண், யுஏஎன், வங்கிக் கணக்குகள் அல்லது ஓடிபி போன்ற ஏதேனும் விவரங்களை கேட்கின்றனர். அப்படி யாரேனும் இதுபோன்று முக்கியமான தனிப்பட்ட தகவல்கள் பற்றி கேட்கும் பட்சத்தில் அதனை நம்பி அவர்களின் மோசடி வலையில் சிக்கிவிட வேண்டாம் என்று இபிஎஃப்ஓ எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து பிஎஃப் அமைப்பு அதன் உறுப்பினர்களுக்கு தெரியவிக்கையில், நாங்கள் ஒருபோதும் உங்களிடம் தொலைபேசி, சமூக ஊடகங்கள், வாட்ஸ்அப் போன்றவற்றின் மூலமாக தனிப்பட்ட தகவல்கள் எதையும் கேட்பதில்லை என்று தெளிவாக கூறியுள்ளது. இபிஎஃப்ஓ அமைப்பு அதன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் ட்வீட்டில், "இபிஎஃப்ஓ அதன் உறுப்பினர்களிடம் ஒருபோதும் ஆதார், பான், யூஏஎன், வங்கி கணக்கு அல்லது ஓடிபி போன்ற எவ்வித தனிப்பட்ட தகவல்களையும் தொலைபேசி மூலமாகவோ அல்லது சமூக வலைத்தளங்கள் வாயிலாக கேட்பதில்லை" என்று பதிவிட்டுள்ளது.
#EPFO never asks its members to share their personal details like Aadhaar, PAN, UAN, Bank Account or OTP over phone or on social media.#AmritMahots@AmritMahotsav pic.twitter.com/3ejePGuvQm
— EPFO (@socialepfo) August 20, 2022
மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு 3 பம்பர் பரிசுகள், கணக்கில் வரும் கூடுதல் தொகை
மேலும் கூறுகையில், "எந்தவொரு சேவைகளுக்கும் வாட்ஸ்அப், சமூக ஊடகங்கள் போன்றவற்றின் மூலமாக பணத்தை டெபாசிட் செய்யவும் கேட்பதில்லை" என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதுபோன்று தனிப்பட்ட தகவல்களை கேட்டு வரும் அழைப்புகளுக்கோ அல்லது செய்திகளுக்கோ பதிலளிக்காமல் நிராகரிக்க கோரி இபிஎஃப்ஓ கூறியுள்ளது. மேலும் இபிஎஃப்ஓ உறுப்பினர்கள் அவர்களின் ஆவணங்களை ஆன்லைனில் பாதுகாப்பாக சேமித்து வைத்திருக்க டிஜிலாக்கரை பயன்படுத்த அறிவுறுத்துகிறது. ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களைப் பகிர்தல், சேமிப்பது மற்றும் சரிபார்த்தல் ஆகியவற்றுக்கான பாதுகாப்பான கிளவுட் அடிப்படையிலான தளம் தான் இந்த டிஜிலாக்கர். இந்த செயலியை ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு சாதனைகளில் டவுன்லோடு செய்துகொள்ளலாம்.
மேலும் படிக்க | EPFO வட்டி விகிதம் உயர உள்ளதா? மத்திய அமைச்சர் கொடுத்த மிகப்பெரிய தகவல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ