SBI Rule: வங்கி விதிகளில் மாற்றம், இந்த போனில் மட்டுமே இனி YONO ஆப் பயன்படுத்த முடியும்

SBI YONO App New Rule: முக்கிய மாற்றங்களை செய்துள்ளது எஸ்பிஐ வங்கி. இவற்றைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியது வாடிக்கையாளர்களுக்கு மிக அவசியமாகும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 4, 2022, 10:48 AM IST
  • எஸ்பிஐ வங்கியின் விதிகளில் மாற்றம்.
  • வங்கி இந்த தகவல்களை அளித்துள்ளது.
  • இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கான பாதுகாப்பு அம்சங்களை அதிகரித்து வருவதாக வங்கி தெரிவித்துள்ளது.
SBI Rule: வங்கி விதிகளில் மாற்றம், இந்த போனில் மட்டுமே இனி YONO ஆப் பயன்படுத்த முடியும் title=

எஸ்பிஐ புதிய விதி: நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐயின் வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய செய்தி. வாடிக்கையாளர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு வங்கி முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளது. 

இந்த மாற்றத்தின் கீழ், இப்போது வாடிக்கையாளர்கள், வங்கியில் பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண் கொண்ட போனின் மூலம்தான் எஸ்பிஐ-இன் யோனோ செயலியில் லாக் இன் செய்ய முடியும். அதாவது, இப்போது நீங்கள் வேறு எந்த எண்ணிலிருந்தும் வங்கியின் இந்த சேவையைப் பெற முடியாது. ஆன்லைன் வங்கி மோசடியில் இருந்து வாடிக்கையாளர்களை காப்பாற்ற வங்கி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதைப் பற்றி விவரமாக அறியலாம். 

ஆன்லைன் வங்கி மோசடியில் இருந்து பாதுகாப்பு

குறிப்பிடத்தக்க வகையில், நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது பல வித புதிய வசதிகளை வழங்கி வருகிறது. இப்போது அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடியைக் கருத்தில் கொண்டு, வங்கி இந்த புதிய மேம்படுத்தலை யோனோ செயலியில் செய்துள்ளது.

மேலும் படிக்க | ஆயுள் காப்பீட்டு திட்டம் எடுக்க போறீங்களா? இத கவனத்துல வச்சுக்கோங்க!

இதன் மூலம், வாடிக்கையாளர்கள் பாதுகாப்பான வங்கி அனுபவத்தைப் பெறுவதோடு மட்டுமல்லாமல், ஆன்லைன் மோசடிகளுக்கு இரையாவதையும் தவிர்க்கலாம். இதுமட்டுமின்றி வாடிக்கையாளர்களின் கணக்கின் பாதுகாப்பும் அதிகரிக்கும்.

வங்கி தகவல் அளித்துள்ளது
புதிய பதிவுக்கு, வாடிக்கையாளர்கள் வங்கியில் பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண் எந்த போனில் உள்ளதோ அந்த போனையே பயன்படுத்த வேண்டும் என வங்கி ஏற்கனவே வாடிக்கையாளர்களுக்கு தகவல் வழங்கியிருந்தது. அதாவது, யோனோ கணக்கு வைத்திருப்பவர்கள் வேறு எண் மூலமாக லாக் இன் செய்ய முயற்சித்தால், எந்தப் பரிவர்த்தனையையும் செய்ய எஸ்பிஐ அனுமதிக்காது. அதாவது, இப்போது வேறு யாரும் உங்கள் கணக்கில் தவறுதலாக கூட நுழைய முயற்சிக்க முடியாது.

தொலைபேசி எண்களுக்கான விதிகளும் உருவாக்கப்பட்டுள்ளன

இதுமட்டுமல்லாமல், தொலைபேசி எண்ணுக்கும் வங்கி விதியை உருவாக்கியுள்ளது. புதிய விதியின் கீழ், நீங்கள் எந்த ஃபோன் மூலமாகவும் செயலியில் லாக் இன் செய்ய முடியாது. முன்னர் வாடிக்கையாளர்கள் எந்த தொலைபேசியிலிருந்தும் லாக் இன் செய்ய முடிந்தது. இப்போது நீங்கள் வங்கியில் பதிவு செய்துள்ள எண் எந்த போனில் உள்ளதோ, அந்த போன் மூலமாகத்தான் யோனோ செயலியின் வசதியைப் பயன்படுத்த முடியும். இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கான பாதுகாப்பு அம்சங்களை அதிகரித்து வருவதாக வங்கி தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | Education Loan: பெற்றோர்களின் கவனத்திற்கு; உங்கள் பிள்ளைகளுக்கு சிக்கல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News