இந்திய பொருளாதாரத்தை பாதிக்கும் ஆன்லைன் கேமிங் செயலிகள் - எப்படி?

வெளிநாட்டில் இருந்து செயல்படும் சட்டவிரோத ஆப்ஷோர் ஆன்லைன் கேமிங் செயலிகள், இந்திய பொருளாதாரத்தை பாதிப்பதால் அவற்றை தடை செய்வதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளது மத்திய அரசு.   

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 27, 2022, 06:56 PM IST
  • ஆன்லைன் சூதாட்ட கேமிங் செயலிகள்
  • தடை செய்ய மத்திய அரசு நடவடிக்கை
  • கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு
இந்திய பொருளாதாரத்தை பாதிக்கும் ஆன்லைன் கேமிங் செயலிகள் - எப்படி? title=

உலகம் முழுவதும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் களைகட்டியுள்ளது. ஐபிஎல் மற்றும் ஆசிய கோப்பைகளுக்கு பிறகு நடக்கும் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழா என்பதால், உலகம் முழுவதும் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் இப்போட்டிகளை ஆவலுடன் பார்த்து வருகின்றனர். இந்த நேரத்தை சரியாக பெருநிறுவனங்கள் பயன்படுத்திக் கொண்டு கவர்ச்சியான விளம்பரங்களை ஒளிபரப்பி வருகின்றனர். தொலைக்காட்சி, செயலிகளில் மட்டுமல்லாது பல்வேறு இணையதளங்களிலும் கிரிக்கெட் தொடர்பான விளம்பரங்கள் இணையத்தில் இடம்பெறுகின்றன. 

இவற்றில் பெரும்பாலானவை இந்தியாவுக்கு சொந்தமில்லாத வெளிநாடுகளில் இருந்து இயங்கும் ஆப்ஷோர் ஆன்லைன் கேமிங் செயலிகளாக இருக்கின்றன. இவற்றால் இந்திய அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. ஆன்லைனை பயன்படுத்தி தடை செய்யப்பட்ட பெட்டிங் நிறுவனங்கள் வரி ஏய்பில் ஈடுபடுவதை கருத்தில் கொண்டிருக்கும் மத்திய அரசின் வருவாய்த்துறை, MeITY உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.   

மேலும் படிக்க | NPS: பென்ஷன் இல்லை என்ற டென்ஷன் வேண்டாம்; ₹64,000 ஓய்வூதியம் தரும் சூப்பர் திட்டம்!

அவற்றில், Parimatch, DafaBet, Betway, 22 Bet மற்றும் 1xBet உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட ஆன்லைன் செயலிகளின் பட்டியலையும் வருவாய்த்துறை பகிர்ந்திருகிறது. இந்த நிறுவனங்களின் செயல்பாடுகளை உன்னிப்பாகவும் கவனித்து வரும் வருமானவரித்துறை, ஜிஎஸ்டி இயக்குநரகம், அந்த செயலிகளால் ஏற்படும் வரி இழப்பையும் கணக்கீடு செய்து வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை சூதாட்டங்கள் தடை செய்யப்பட்டவை. அந்த தளங்களில் ஒளிபரப்பாகும் விளம்பரங்கள் உள்ளிட்டவைகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும், வரியும் இருக்கின்றன. 

இந்திய மார்க்கெட்டை பொறுத்தவரை ஆன்லைன் கேமிங் துறையின் சந்தை மதிப்பு 2 பில்லியன் அமெரிக்க டாலர். இதனை குறிவைத்தது தான் இந்தியாவில் இல்லாமல், வெளிநாடுகளை மையமாக கொண்டு இயங்கும் ஆன்லைன் ஆப்ஷோர் கேமிங் செயலிகள் விளம்பரங்களை ஒளிபரப்பி வருகின்றன. Dafabet, Betway, Bet365, Parimatch, Fairplay மற்றும் 1xbet போன்ற  சூதாட்ட தளங்கள் இந்திய ஆன்லைன் கேமிங் துறையில் குறைந்தபட்சம் 25-30 பில்லியன்கள் வரை வரி ஏய்ப்பு செய்யலாம் என யூகிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஏற்கனவே சூதாட்ட விளம்பரங்களுக்கு தடை செய்திருந்தாலும், இணையத்தில் இயங்கும்ம் இத்தகைய நிறுவனங்கள் 5 ஆயிரம் கோடிக்கும் மேல் சம்பாதிப்பதாக பல்வேறு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இவை நேரடியாக அல்லாமல் குறுக்கு வழியில் நியூஸ் உள்ளிட்ட இணையதளங்களில் தங்களின் விளம்பரங்களை ஸ்பான்சர்களாக இடம்பெறச் செய்கின்றன. 

மேலும் படிக்க | Jackpot! பழைய அரிய ‘ரூபாய் நோட்டுக்களை’ விற்று லட்சாதிபதியாக ஆவது எப்படி..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News