கோடீஸ்வரராக இப்படியெல்லாம் வழி இருக்கா? இலக்கு வைத்தால் எல்லாம் சாத்தியமே!

Tips For Invest Money : இலக்கு அடிப்படையிலான முதலீடு என்றால் என்ன? அதிக வருமானம் பெறுவதற்காக திட்டமிட்டு செய்யப்படும் முதலீடுகள்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 23, 2024, 09:51 PM IST
  • இலக்கு அடிப்படையிலான முதலீடு
  • அதிக வருமானம் பெற திட்டமிடலாமே!
  • திட்டமிட்டு செய்யப்படும் முதலீடுகள்...
கோடீஸ்வரராக இப்படியெல்லாம் வழி இருக்கா? இலக்கு வைத்தால் எல்லாம் சாத்தியமே! title=

எந்தவொரு விஷயத்தையும் செய்யும்போது திட்டமிட்டு செய்தால் வெற்றி கிடைக்குக்ம். அதிலும், பணத்தை முதலீடு செய்யத் திட்டமிட்டால், கவனமாகத் திட்டமிட்டு சேமிப்பது முக்கியம். இலக்கு அடிப்படையிலான முதலீடு என்பது எதிர்காலத்தில் எவ்வளவு பணம் தேவை என்ற இலக்கை மனதில் வைத்து சரியான இடத்தில் முதலீடு செய்வதாகும்.

இலக்கு அடிப்படையிலான முதலீடு

வாழ்க்கையில் ஏதாவது பெரியதாகச் செய்ய விரும்புவார்கள், அதற்காக சரியாக திட்டமிடவேண்டும். இல்லாவிட்டால், திட்டம் மட்டும் அப்படியே இருக்கும், ஆசைகள் பூர்த்தியாகாது. வாழ்க்கையில் இலக்கை அடைய, முதலீடு செய்யும்போதும் இலக்கு நிர்ணயித்து பணத்தை சேமிக்க வேண்டும்.  

பல்வேறு முதலீடுகள்

உங்கள் முதலீடு என்பது, சொத்து, பரஸ்பர நிதி, தங்கம் என பல்வேறு வகைகளில் இருக்கலாம். இவற்றில் முதலீடு செய்யும்போது அதிலிருந்து பணத்தை திரும்பப்பெறும்போது, தொகையை திரும்பப் பெறும்போது கிடைக்கும் பணத்தில், ​​பணவீக்கத்தின் தாக்கமும் இருக்கும் என்பதை மனதில் வைத்துக் கொண்டு இலக்கை நிர்ணயிக்க வேண்டும்.

நீங்கள் எவ்வளவு பணத்தை சேமிக்க வேண்டும் என்பதை பணவீக்கமும், உங்களுக்கு எவ்வளவு பணம் தேவை என்ற இரண்டு விஷயங்கள் தீர்மானிக்கும். உங்கள் இலக்கை நிர்ணயித்த பிறகு, அதற்கு உங்களுக்கு எவ்வளவு பணம் தேவைப்படும் என்பதைக் கணக்கிட வேண்டும்.

எந்த விருப்பத்திற்காக திட்டமிடுகிறீர்கள் என்பதைப் பொறுத்து இலக்கு நிர்ணயிக்க வேண்டும். உங்கள் குழந்தையின் கல்விக்காகச் சேமிக்க விரும்புகிறீர்களா அல்லது ஓய்வூதியத்தைத் திட்டமிடுகிறீர்களா? என்பதன் அடிப்படையில் இலக்கை நிர்ணயிக்க வேண்டும்.

உதாரணமாக, ஓய்வூதியம் பெறத் திட்டமிடுகிறீர்கள் என்றும், அதை 35 வயதில் முடிவு செய்து இலக்கு நிர்ணயிக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அடுத்த 25 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 20,000 என்ற அளவில் சேமிக்க முடிவதாக வைத்துக் கொள்வோம்.

மேலும் படிக்க | இந்தியாவில் ஜூன் மாதத்தில் சுற்றுலா செல்ல ஏற்ற சில சிறந்த இடங்கள்..!!

உங்கள் 60 வயது வரை செய்யும் முதலீடு எவ்வளவு பணம் கொடுக்கும் என்பதை இலக்காக வைத்துக் கொண்டு முதலீட்டு வகையை தேர்ந்தெடுக்க வேண்டும். சந்தை தொடர்பான தயாரிப்புகளில் சராசரியாக 12% வருமானம் கிடைக்கும் என்று வைத்துக் கொண்டால், உங்கள் அறுபதாவது வயதில் 3 கோடியே 80 லட்சம் ரூபாய் வரை சேமிக்கலாம்.

இலக்கு அடிப்படையிலான முதலீட்டைச் செய்யும்போது, ​​​​சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். உங்கள் இலக்குகளை அடையாளம் கண்டு முன்னுரிமைகளை அமைக்கவும். அதாவது எதற்காக எவ்வளவு தொகை வேண்டும் என்பதை இலக்காக வைக்கவும். தேவைகளின் முக்கியத்துவத்துக்கு ஏற்ப முன்னுரிமை அமைக்கவும். இது பணத்தை எங்கு முதலீடு செய்ய வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள உதவும்.

பணவீக்கம் மற்றும் இரண்டாவது உங்கள் இலக்கை அடைய எடுக்கும் நேரத்தை கணித்து அதற்கு ஏற்றவாறு முதலீடு செய்யவும். அதேபோல, குறைந்த ஆபத்துள்ள முதலீடுகள் குறுகிய கால இலக்குகளுக்கு பொருத்தமானதாக இருக்கும். நீண்டகால இலக்குகளுக்கு கொஞ்சம் ரிஸ்க் எடுக்கலாம்.

சரியான முதலீட்டு முறையைத் தேர்வு செய்யவது முக்கியமானது. இலக்குக்கு ஏற்றவாறு வெவ்வேறு வழிகளில் பணத்தை முதலீடு செய்வது நன்மை பயக்கும். இலக்குகளை விரைவாக அடைய, குறைந்த ஆபத்துள்ள முதலீட்டு முறைகளை நீங்கள் தேர்வு செய்யலாம். நிலையான வைப்பு, குறுகிய கால பத்திரங்கள் என்றால், நீண்ட கால இலக்குகளுக்கு, பங்குகள், பரஸ்பர நிதிகளில் கொஞ்சம் ரிஸ்க் எடுத்து முதலீடு செய்யலாம்.

மதிப்பாய்வு செய்யவும்
உங்கள் இலக்குகள் மற்றும் முதலீடுகளை அவ்வப்போது மதிப்பாய்வு செய்து, தேவைக்கேற்ப உங்கள் முதலீடுகளை மறுசீரமைக்கவும். காலத்திற்கேற்றவாறு மாறிவரும் இலக்குகள் மற்றும் ரிஸ்குக்ககு ஏற்ப உங்கள் பணத்தை முதலீடு செய்யும் முறையை மாற்றாலாம்.  

தொடர் முதலீடு
உங்கள் சம்பளத்திலிருந்து முதலீட்டுக் கணக்கிற்குத் தானாகப் பணத்தை மாற்றும் தானியங்கி வசதியைத் தொடங்குங்கள். உங்கள் இலக்கை நிறைவேற்ற இவ்வாறு தொடர்ந்து பணத்தைச் சேமித்து வருகிறீர்கள். கையில் தொகை வந்தால், வேறு செலவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து சேமிப்பை தள்ளிப் போடும் மனநிலை உருவாகலாம். 

முதலீடு செய்வதில் மாற்றம் எதுவும் வேண்டாம்
எந்த முதலீட்டுத் திட்டத்தைச் செய்தாலும், அதை தொடர்ந்து செஅ வேண்டும். பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும். நட்டம் அடைந்துவிடுமோ என்ற அச்சத்தில் எந்த முடிவையும் எடுக்காதீர்கள், நீண்ட கால நிதி இலக்குகளை அச்சம் பாதிக்கும்.  

முதலீடு செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும். உங்கள் வெவ்வேறு இலக்குகளை மனதில் வைத்து உங்கள் முதலீடுகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை தொடர்ந்து கண்காணிக்கவும். தேவைப்பட்டால், முதலீடு செய்யப்பட்ட தொகையை அல்லது உங்கள் முதலீட்டு உத்தியை மாற்றவும்,  

மேலும் படிக்க | FD முதலீடுகளுக்கு அதிக வட்டி வழங்கும் HDFC வங்கி... சான்ஸை மிஸ் பண்ணாதீங்க...!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News