வங்கிக் கணக்கில் பணம் இல்லாவிட்டாலும், 10 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்; எப்படி?

Money Tips: உங்களிடம் ஜன்-தன் கணக்கு இருந்து அதில் இருப்பு இல்லை என்றால் நோ டென்ஷன்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 27, 2021, 09:19 AM IST
வங்கிக் கணக்கில் பணம் இல்லாவிட்டாலும், 10 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்; எப்படி? title=

புதுடெல்லி: வங்கி இருந்தாலும் அதில் பணம் இல்லாவிட்டாலும் 10 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். ஆனால் இதற்கு நீங்கள் ஜன்தன் கணக்கு வைத்திருக்க வேண்டும். பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (Pradhan Mantri Jan Dhan Yojana) திட்டத்தின் கீழ் நீங்கள் கணக்கைத் திறக்கவில்லை என்றால், அதை இப்போதே திறக்கவும். ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ், வங்கி கணக்குகள் பூஜ்ஜிய இருப்பில் (Zero Balance Account) திறக்கப்படுகின்றன. மத்திய அரசின் இந்த திட்டம் 7 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரை 41 கோடிக்கும் அதிகமான கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தில் காப்பீடு உள்ளிட்ட பல வகையான வசதிகள் உள்ளன. இந்த வசதிகளில் ஒன்று ஓவர் டிராஃப்ட். அதைப் பற்றி பார்ப்போம்.

10 ஆயிரம் ரூபாய் எப்படி கிடைக்கும்
ஜன்தன் யோஜனா (Pradhan Mantri Jan Dhan Yojana) திட்டத்தின் கீழ், உங்கள் கணக்கில் இருப்பு இல்லாவிட்டாலும், 10,000 ரூபாய் வரை ஓவர் டிராஃப்ட் வசதியைப் பெறுவீர்கள். இந்த வசதி குறுகிய கால கடன் போன்றது. முன்பு இந்த தொகை 5 ஆயிரம் ரூபாயாக இருந்தது. தற்போது அதை 10 ஆயிரமாக அரசு உயர்த்தியுள்ளது. இந்தக் கணக்கில் ஓவர் டிராஃப்ட் வசதிக்கான அதிகபட்ச வயது வரம்பு 65 ஆண்டுகள். ஓவர் டிராஃப்ட் வசதியைப் பெற, உங்கள் ஜன்தன் கணக்கு குறைந்தது 6 மாதங்கள் பழமையானதாக இருக்க வேண்டும். இல்லையெனில், 2,000 ரூபாய் வரை மட்டுமே ஓவர் டிராஃப்ட் கிடைக்கும்.

ALSO READ | உங்கள் சேவிங்ஸ் அக்கவுண்டை ஜன் தன் அக்கவுண்ட்டில் எவ்வாறு மாற்றுவது

இத்திட்டம் 2014ல் தொடங்கப்பட்டது
பிரதமர் நரேந்திர மோடி (PM Modi) 2014 ஆம் ஆண்டு சுதந்திர தின உரையில் ஜன்தன் யோஜனா திட்டத்தை தொடங்குவதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திட்டம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், ஜனவரி 6, 2021க்குள், மொத்த ஜன்தன் கணக்குகளின் எண்ணிக்கை 41.6 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த திட்டத்தின் இரண்டாவது பதிப்பை 2018 இல் அரசாங்கம் அதிக அம்சங்கள் மற்றும் நன்மைகளுடன் அறிமுகப்படுத்தியது.

ஜன்தன் யோஜனாவில் பல வசதிகள் உள்ளன

* ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் கணக்கையும் திறக்கலாம்.
* இந்தத் திட்டத்தின் கீழ் கணக்கைத் தொடங்கினால், ரூபே ஏடிஎம் கார்டு, ரூ.2 லட்சம் விபத்துக் காப்பீடு, ரூ.30 ஆயிரம் ஆயுள் காப்பீடு மற்றும் டெபாசிட் தொகைக்கான வட்டி ஆகியவை கிடைக்கும்.
* 10 ஆயிரம் ஓவர் டிராஃப்ட் வசதியும் இதில் கிடைக்கும்.
* இந்தக் கணக்கை எந்த வங்கியிலும் தொடங்கலாம்.
* இதில் மினிமம் பேலன்ஸ் பராமரிக்க வேண்டியதில்லை.

ALSO READ | SBI வாடிக்கையாளர்களே.. உடனே இதை செய்தால் 2 லட்சம் வரை நன்மை கிடைக்கும்!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News