IRCTC Ticket Cancellation Rules: இந்தியாவில் ரயில்வே நெட்வொர்க் மிகவும் பெரியது. தினமும் கோடிக்கணக்கான மக்கள் இந்த ரயிலில் பயணித்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் விமானம் டாக்ஸி போன்று போக்குவரத்து வசதிகளை விட ரயிலில் பயணிப்பது மக்களுக்கு சவுகரியமாக இருப்பதாக கருதுகின்றனர். இரண்டாவது காரணம் ரயில் கட்டணம் குறைவு, அதுமட்டுமின்றி ரயிலில் நாம் பாதுகாப்பாகவும் வேகமாகவும் பயணிக்க முடிகிறது. அதேசமயம் பேருந்துகளில் இல்லாத பல வசதிகள் ரயில்களில் உள்ளன உதாரணமாக கழிப்பறைகள் தொடங்கி படுக்கை வசதி வரை பல வசதிகள் இதில் அடங்கும்.
அந்த வகையில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு அனைவரும் தங்கள் வீட்டிற்கு செல்வார்கள். இதற்காக அனைவரும் ரயில் டிக்கெட்டுகளை மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்து இருப்பார்கள். நீங்களும் அந்த நபர்களில் ஒருவராக இருந்து, ஹோலி பண்டிகையின் போது எங்காவது செல்ல டிக்கெட்டை முன்பதிவு செய்திருந்தால், சில காரணங்களால் டிக்கெட்டை ரத்து செய்ய விரும்பினால், டிக்கெட்டை ரத்து செய்வதற்கு முன் IRCTC விதிகளைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
டிக்கெட்டை எத்தனை மணி நேரத்திற்கு முன்பே ரத்து செய்வது பொருத்தமாக இருக்கும்? RAC அல்லது வெயிட்டிங் பட்டியல் டிக்கெட்டை ரத்து செய்ய எவ்வளவு கட்டணம் விதிக்கப்படும்? உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டை 4 மணி நேரத்திற்கு முன்பு ரத்து செய்தால் எவ்வளவு பணம் திரும்பப் கிடைக்கும்? உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்கான விதிகள் என்ன? இவை அனைத்தையும் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | மாத சம்பளம் வாங்குவோர் கவனத்திற்கு! மார்ச் 31க்குள் இந்த வேலைகளை முடிச்சுருங்க!
டிக்கெட் சார்ட் தயாரித்த பிறகு டிக்கெட்டை ரத்து செய்வதற்கான விதி என்ன?
டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்பட்ட பிறகு பட்டியலில் RAC அல்லது காத்திருப்பு இருக்கை இருந்தால், ரயிலின் திட்டமிடப்பட்ட புறப்படும் நேரத்திற்கு 30 நிமிடங்களுக்கு முன் டிக்கெட்டை ரத்து செய்தால், ரத்துசெய்தல் கட்டணம் செலுத்த வேண்டும். இதில் ஸ்லீப்பர் வகுப்புக்கு ரூ.60 கட்டணம் வசூலிக்கப்படும். அதேசமயம், ஏசி வகுப்பிற்கு ரூ.65 வசூலிக்கப்படும். கட்டணத்தைக் கழித்த பிறகு, மீதமுள்ள பணம் உங்களுக்குத் திருப்பி வழங்கப்படும்.
உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டை 4 மணி நேரத்திற்கு முன்பு ரத்து செய்தால் எவ்வளவு ரீஃபண்ட் கிடைக்கும்?
IRCTC விதிகளின்படி, உறுதிப்படுத்தப்பட்ட ரயில் டிக்கெட்டை 4 மணி நேரத்திற்கு பிறகு ரத்து செய்தால் ஒரு ரூபாய் கூட திரும்ப கிடைக்காது. அதேசமயம், திட்டமிடப்பட்ட புறப்படும் நேரத்திற்கு 4 மணி நேரத்திற்கு முன் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டை ரத்து செய்தால் பணத்தைத் திரும்பப் பெறலாம்.
உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்கான விதிகள் என்ன?
1. திட்டமிடப்பட்ட புறப்படும் நேரத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன் உறுதிப்படுத்தப்பட்ட பொது வகுப்பு (2S) டிக்கெட்டை ரத்து செய்வதற்கு ஒரு பயணிக்கு ரூ.60 ரத்து கட்டணம் விதிக்கப்படும்.
2. உறுதிப்படுத்தப்பட்ட ஸ்லீப்பர் வகுப்பு டிக்கெட்டுக்கு ரூ.120 ரத்து கட்டணம்.
3. உறுதிப்படுத்தப்பட்ட ஏசி சேர் கார் மற்றும் மூன்றாவது ஏசி டிக்கெட்டை ரத்து செய்தால், நீங்கள் ரூ. 180 கேன்சிலேஷன் கட்டணம் செலுத்த வேண்டும்.
4. செகண்ட் ஏசியில் ரூ.200, முதல் ஏசி மற்றும் எக்ஸிகியூட்டிவ் வகுப்பில் ரூ.240 கேன்சிலேஷன் கட்டணம் செலுத்த வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ