7th Pay Commission: DA Hike-க்கு முன் ஊழியர்களுக்கு கிடைத்த குட் நியூஸ்: பதவி உயர்வு விதிகளில் மாற்றம்

7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. பதவி உயர்வு தொடர்பான விதிகளில் மத்திய அரசு சில மாற்றங்களை செய்துள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 11, 2023, 05:04 PM IST
  • எந்த ஊழியர்களுக்கான பதவி உயர்வு விதிகள் மாற்றப்பட்டுள்ளன?
  • அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட தகுதி என்ன?
  • எந்த பிரிவில் யாருக்கு பதவி உயர்வு கிடைக்கும்?
7th Pay Commission: DA Hike-க்கு முன் ஊழியர்களுக்கு கிடைத்த குட் நியூஸ்: பதவி உயர்வு விதிகளில் மாற்றம் title=

7வது ஊதியக்குழு, சமீபத்திய புதுப்பிப்பு: மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. இன்னும் சில நாட்களில் அவர்களுக்கு அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு வரவுள்ளது. ஆனால், அதற்கு முன்னர் மற்றொரு நல்ல செய்தி வந்துள்ளது. இது ஊழியர்களின் பதவி உயர்வு பற்றியது. ஏழாவது ஊதியக் குழுவின் கீழ் ஊதியம் பெறும் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள ஊழியர்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பதவி உயர்வு தொடர்பான விதிகளில் மத்திய அரசு சில மாற்றங்களை செய்துள்ளது. இந்த மாற்றங்களுக்குப் பிறகு, குறைந்தபட்ச சேவை விதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன (அப்கிரேட் செய்யப்பட்டுள்ளன). இதில், பாதுகாப்பு அமைச்சகத்தின் பாதுகாப்பு சிவில் ஊழியர்களுக்கான (defense civilian employees) பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் ஆண்டின் இரண்டாம் அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருக்கும் அதே நேரத்தில் இந்த முடிவு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

எந்த ஊழியர்களுக்கான பதவி உயர்வு விதிகள் மாற்றப்பட்டுள்ளன?

மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள பாதுகாப்பு சிவில் ஊழியர்களுக்கு திருத்தப்பட்ட விதிமுறைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. 7வது ஊதியக்குழுவின் ஊதியக்குழு மற்றும் பே-பேண்டின் கீழ் வரும் ஊழியர்களுக்கு இது பொருந்தும். மேலும், அத்தகைய ஊழியர்களின் சம்பளம் பாதுகாப்பு சேவை மதிப்பீடுகளில் இருந்து வழங்கப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பையும் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட தகுதி

பதவி உயர்வுக்கான தகுதி பற்றிய விவரங்கள் பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிவிப்பில் பகிரப்பட்டுள்ளன. இதில், ஒவ்வொரு நிலைக்கு ஏற்ப பதவி உயர்வுக்கான தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதன் குறிப்பாணை வெளியிடப்பட்டது. இது தவிர, தர வாரியாகவும் பட்டியல் பகிரப்பட்டுள்ளது. முழு பட்டியலையும் கீழே பார்க்கலாம்.

மேலும் படிக்க | இந்த வங்கிகளில் UPI மூலம் டிஜிட்டல் கரன்சியில் பரிவர்த்தனை: ரிசர்வ வங்கி அனுமதி, குஷியில் பயனர்கள்!!

எந்த பிரிவில் யாருக்கு பதவி உயர்வு கிடைக்கும்?

பட்டியலின்படி, எலிஜிபிலிடி க்வாலிஃபையிங் சர்வீஸ் ஃபார் ப்ரமோஷன் பட்டியலில் லெவல் 1 முதல் 2 வரை, 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும். அதேசமயம் லெவல் 2 முதல் 4 வரை, 3 முதல் 8 ஆண்டுகள் அனுபவம் தேவை. 17-ஆம் லெவல் வரையிலான பணியாளர்களுக்கு 1 வருட அனுபவமும், 6 முதல் 11-ஆம் லெவல்களுக்கு 12 வருட அனுபவமும் இருக்க வேண்டும். இதன் அடிப்படையில்தான் பதவி உயர்வுக்கான விதிமுறை உள்ளது.

ஊழியர்களின் அகவிலைப்படி உயரும்

மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டின் இரண்டாம் பாதிக்கான அகவிலைப்படி உயர்வு பற்றி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதில் மொத்தம் 1 கோடிக்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள். செப்டம்பர் இறுதிக்குள் இரண்டாம் பாதியில் அகவிலைப்படி அதிகரிப்புக்கான அறிவிப்பு வெளியாகலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இம்முறையும் அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரிக்கலாம். இருப்பினும், சில அறிக்கைகள் அகவிலைப்படி 3 சதவீதம் அதிகரிக்கும் என்று தெரிவிக்கின்றன. உயர்த்தப்பட்ட அகவிலைப்படி ஜூலை 1, 2023 முதல் அமலுக்கு வரும். தற்போது இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. எனினும் இது விரைவில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

ஜூலையில் ஏஐசிபிஐ 139.7 புள்ளிகளை எட்டியது:

சமீபத்தில் ஏஐசிபிஐ குறியீடு (All India Consumer Price Index (AICPI)) ஜூலை 2023 மாதத்திற்கான தரவை வெளியிட்டது. இதில் தற்போது 3.3 புள்ளிகள் அதிகரிப்பு காணப்படுகிறது. ஜூன் 2023 இல், இந்த எண்ணிக்கை 136.4 புள்ளிகளாக இருந்த நிலையில் தற்போது, ஜூலையில் இந்த எண்ணிக்கை 139.7 புள்ளிகளை எட்டியுள்ளது. 

மேலும் படிக்க | அமைச்சர் அளித்த ஜாக்பாட் அப்டேட்: மீண்டும் வருகிறதா பழைய ஓய்வூதியம்? எப்போது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News