10, 20, 50, 100, 200, 500 ரூபாய் நோட்டுகள் தொடர்பான புதிய அப்டேட் தந்த ரிசர்வ் வங்கி

RBI rules for mutilated notes: ரிசர்வ் வங்கியிடம் இருந்து பெறப்பட்ட தகவலின்படி, உங்களிடம் கிழிந்த அல்லது சேதமடைந்த ரூபாய் நோட்டுள் இருந்தால், பீதி அடையத் தேவையில்லை. இது தொடர்பான புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Sep 11, 2023, 10:44 AM IST
  • சேதமடைந்த ரூபாய் நோட்டுகளை மாற்றுவது எப்படி.
  • புதிய ரூபாய் நோட்டுக்களை உங்களுக்கு அளிப்பார்.
  • கூட்டுறவு வங்கி மற்றும் கிராம வங்கிகளுக்கு நோட்டுகளை மாற்றித் தரும் அதிகாரம் இல்லை.
10, 20, 50, 100, 200, 500 ரூபாய் நோட்டுகள் தொடர்பான புதிய அப்டேட் தந்த ரிசர்வ் வங்கி title=

ரூபாய் நோட்டுகள் புதுப்பிப்புகள்: இந்தியாவில், காகித நோட்டுகளைப் பயன்படுத்தும்போது, ​​​​அவை கிழிந்து அல்லது சேதமடைந்து (mutilated notes) போவது மிகவும் சகஜமாகும். பல முறை வங்கி ஏடிஎம்மில் (Bank ATM) பணம் எடுக்கச் செல்லும் போது, ​​கிழிந்த நோட்டுகளுடன் வெளியே வருகிறோம். வித்தியாசமான அல்லது மிகவும் மோசமான நிலையில் உள்ள அத்தகைய நோட்டுகள் உங்களிடம் இருந்தால், இப்போது அது தொடர்பான விதிகளை இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது இந்தியன் ரிசர்வ் வங்கி (RBI) இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வங்கியும் அழுக்கடைந்த, கிழிந்த அல்லது சேதமடைந்த ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக புதிய நோட்டுகளுக்கு மாற்றும் வசதியை வழங்க உத்தரவிட்டுள்ளது. ஆனால் அத்தகைய நோட்டுகளின் மதிப்பை தீர்மானிக்க விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த விதிகளைப் பற்றி இப்போது தெரிந்துக்கொள்ளுங்கள்-

எக்ஸ்சேஞ்ச் செய்ய யாரும் மறுக்க முடியாது
இது தொடர்பாக ரிசர்வ் வங்கியிடம் இருந்து பெறப்பட்ட தகவலின்படி, உங்களிடம் அழுக்கடைந்த, கிழிந்த அல்லது சேதமடைந்த ரூபாய் நோட்டுகள் இருந்தால், பீதி அடையத் தேவையில்லை. ரிசர்வ் வங்கி மற்றும் வேறு எந்த வங்கியும் அத்தகைய நோட்டுகளை ஏற்க மறுக்க முடியாது. ரிசர்வ் வங்கி (நோட் ரீஃபண்ட்) விதிகளின் கீழ், அழுக்கடைந்த, கிழிந்த அல்லது சேதமடைந்த ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்.

மேலும் படிக்க | இந்திய ரயில்வேயின் சிறப்புச் சலுகை! இனி ரூ.20க்கு முழு உணவு கிடைக்கும்!

பணத்தைத் திரும்பப் பெறுவது நோட்டின் நிலையைப் பொறுத்தது
பயனற்ற நோட்டுகளை ரிசர்வ் வங்கி அலுவலகங்கள் அல்லது நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம். இருப்பினும், முழு ரீஃபண்ட் பெறுவது முற்றிலும் நோட்டின் நிலையைப் பொறுத்தது.

வங்கிக் கணக்கு திறக்க வேண்டிய அவசியமில்லை
DBS Bank India, நுகர்வோர் வங்கி குழுமத்தின் நிர்வாக இயக்குநரும் தலைவருமான பிரசாந்த் ஜோஷி கூறுகையில், அழுக்கடைந்த, கிழிந்த அல்லது சேதமடைந்த ரூபாய் நோட்டுகளை மாற்றும் வசதிக்காக ஒருவர் கணக்கு தொடங்க தேவையில்லை. அவர் தனது அருகிலுள்ள வங்கிக் கிளைகளுக்குச் சென்று இந்த வேலையை எப்போது வேண்டுமானாலும் செய்துக்கொள்ளலாம். அதேபோல் இந்த சேவையை அனைத்து வேலை நாட்களிலும் பயன்படுத்தலாம்.

எந்த வகையான நோட்டுகள் கிழிந்த நோட்டுகளாக்கும்?
சவுத் இந்தியன் வங்கியின் பொது மேலாளரும், வங்கிச் செயல்பாட்டுக் குழுமத்தின் தலைவருமான சிவராமன் கே, ரூபாய் நோட்டின் ஒரு பகுதி காணாமல் போயிருந்தாலோ அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட துண்டுகளால் நோட்டு செய்யப்பட்டாலோ அது கிழிந்த நோட்டு என்று அழைக்கப்படுகிறது என்றார்.

கிழிந்த நோட்டுகளின் மதிப்பு எவ்வளவு?
இந்நிலையில் அத்தகைய அழுக்கடைந்த, கிழிந்த அல்லது சேதமடைந்த ரூபாய் நோட்டுகளின் மதிப்பு ரிசர்வ் வங்கி மற்றும் வங்கியின் சொந்த விதிகளின்படி தீர்மானிக்கப்படுகிறது. ஜோஷியின் கூற்றுப்படி, நீங்கள் பெறும் வங்கி நோட்டின் மதிப்பு நோட்டின் தரத்தைப் பொறுத்தது என்றார்.

ரூ.50க்கு குறைவான மதிப்புள்ள நோட்டுகளுக்கான விதி
ரிசர்வ் வங்கி விதிகளின்படி, 50 ரூபாய்க்கும் குறைவான மதிப்புள்ள நோட்டுகளைப் பற்றி பேசுகையில், உங்கள் நோட்டு 50 சதவிகிதம் அல்லது அதற்கும் குறைவாக சேதமடைந்திருந்தால், நீங்கள் முழு மதிப்பையும் பெறலாம்.

ரிசர்வ் வங்கியின் விதிகள் என்ன தெரியுமா?
ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவலின்படி, ரூ.2000 நோட்டின் நீளம் 16.6 செ.மீ., அகலம் 6.6 செ.மீ., பரப்பளவு 109.56 சதுர சென்டிமீட்டர். அதே நேரத்தில், உங்கள் நோட்டு 88 சதுர சென்டிமீட்டராக இருந்தால், உங்களுக்கு முழுத் தொகையும் கிடைக்கும். இது தவிர, உங்கள் நோட்டின் அளவு 44 சதுர சென்டிமீட்டராக இருந்தால், பாதித் தொகை மட்டுமே திருப்பிக் கொடுக்கப்படும்.

500 ரூபாய் நோட்டுக்கு என்ன விதி?
அதே சமயம் ரூ.500 நோட்டின் நீளம் 15 செ.மீ., அகலம் 6.6 செ.மீ., பரப்பளவு 99 சதுர சென்டிமீட்டர். அப்படியானால், ரூ.500 நோட்டின் அளவு 80 சதுர சென்டிமீட்டராக இருந்தால், முழுத் தொகையும், 40 சதுர சென்டிமீட்டராக இருந்தால் பாதித் தொகையும் திருப்பி அளிக்கப்படும்.

மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு லாட்டரி.. ஓய்வு பெற்ற பிறகும் மாத வருமானம் பெறலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News