JOBS: PNB வங்கியில் சிறப்பு அதிகாரிக்கான காலியிடங்கள் நிரப்பபட உள்ளன..!!!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் சிறப்பு அதிகாரி பதவிக்கான காலியிடத்திற்கு விண்ணபிக்க அக்டோபர் 6, 2020  கடைசி நாளாகும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 3, 2020, 05:54 PM IST
  • பஞ்சாப் நேஷனல் வங்கியில் சிறப்பு அதிகாரி பதவிக்கான காலியிடத்திற்கு விண்ணபிக்க அக்டோபர் 6, 2020 கடைசி நாளாகும்.
  • பஞ்சாப் நேஷனல் வங்கியில் உள்ள இந்த பதவிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
  • வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.pnbindia.in என்ற வலைதளத்திற்கு சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
JOBS: PNB வங்கியில் சிறப்பு அதிகாரிக்கான காலியிடங்கள் நிரப்பபட உள்ளன..!!! title=

PNB வங்கியில் சிறப்பு அதிகாரி பதவிக்கான காலியிடம் நிரப்பபட உள்ளது.  ஊதிய அளவு ரூ.42020 முதல் ரூ .51490 / -

இந்த பதவிக்கு தேவையான கல்வித் தகுதி இருந்தால், உடனே விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்க உங்களுக்கு சில நாட்கள் மட்டுமே உள்ளன. இது உங்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு.

பஞ்சாப் நேஷன்ல் வங்கியில் சிறப்பு அதிகாரி பதவிக்கான காலியிடத்திற்கு விண்ணபிக்க அக்டோபர் 6, 2020  கடைசி நாளாகும்.

பதவியின் பெயர் - சிறப்பு அதிகாரி, ஸ்பெஷலிஸ்ட் ஆபீசர் (SO)
காலியாக உள்ள இடங்களின் எண்ணிக்கை - 535
தகுதி - இளங்கலை பட்டம், முதுகலை பட்டம், எம்பிஏ, சிஏ, சட்டப் பட்டம், பிஇ-பிடெக், டிப்ளோமா (பதவிகளுக்கு ஏற்ப வெவ்வேறு தகுதிகள் )
ஊதிய அளவு - மாதத்திற்கு 42020 முதல் 51490 / - வரை
வயது வரம்பு - 25 முதல் 37 வயது வரை

ALSO READ | DigiLocker: PAN, ஆதார், பாஸ்போர்ட், ட்ரைவிங் லைசன்ஸ் தொலையும் என்ற கவலையே இல்லை..!!!

விண்ணப்ப கட்டணம்

பஞ்சாப் நேஷனல் வங்கியில் உள்ள அரசு வேலைக்கு காலியிடத்தில் விண்ணப்பிக்கும் SC/ST/PWBD பிரிவினர், விண்ணப்பக் கட்டணமாக ரூ .175 ஐ டெபாசிட் செய்ய வேண்டும். மற்ற அனைத்து பிரிவுகளை சேர்ந்த விண்ணப்பதாரர்கள், விண்ணப்பக் கட்டணமாக ரூ .850 செலுத்த வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்பத்திற்கான கடைசி தேதி - 6 அக்டோபர், 2020

பஞ்சாப் நேஷனல் வங்கியில் உள்ள இந்த பதவிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்காக, வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.pnbindia.in என்ற வலைதளத்திற்கு சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். எல்லா தகவல்களையும் சரியாக பதிவிடவும். விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்கும் முன் தகவல்களை சரிபார்த்த பின், சமர்பிக்கவும்.

 ALSO READ | Password-ஐ ஹேக் செய்ய 10 நிமிடங்கள் போதும்... தடுக்க இன்றே இதை செய்யுங்கள்..!!!

 

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News