அரசு பணியில் இல்லாதாவர்களுக்கு, ஓய்வூதிய திட்டம் என்பது வரமாகும். இப்போது தேசிய ஓய்வூதிய திட்டம் NPS விதிகள் மாறிவிட்டன. அதன் மூலம் ஓய்வூதிய கணக்கு திறப்பது இன்னும் எளிது.
புதிய விதிப்படி, இப்போது வங்கிகளின் வாடிக்கையாளர்கள் (பதிவுசெய்யப்பட்ட POPs - பாயிண்ட் ஆஃப் ப்ரெசன்ஸ்) மொபைல் எண்களில் OTP ஐப் பயன்படுத்தி கணக்குகளைத் திறக்கலாம்.
இப்போது தேசிய ஓய்வூதிய திட்டத்தில் (NPS) முதலீடு செய்வது இப்போது மிக எளிது. அதன் விதிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சந்தாதாரர்கள் NPS கணக்கைத் திறக்க, OTP வசதியை பயன்படுத்தலாம். இணையம் அல்லாத வங்கி டிஜிட்டல் முறை மூலம் என்.பி.எஸ் கணக்குகளைத் திறக்க POP உதவியுடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் மின்னஞ்சலில் OTP வரும்.
அக்டோபர் 6, 2020 அன்று வெளியிடப்பட்ட ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (PFRDA) அறிவிப்பின்படி, PFRDA இப்போது புதிய வாடிக்கையாளர்களுக்காக வீடியோ அடிப்படையிலான வாடிக்கையாளர் அடையாள செயல்முறையை (VCIP) அறிமுகப்படுத்தியுள்ளது.
உங்கள் வயது 30 ஆக இருந்தால், ஒவ்வொரு மாதமும் 5,000 ரூபாயை என்.பி.எஸ் கணக்கில் முதலீடு செய்து வர வேண்டும், தொடர்ந்து 30 ஆண்டுகள் முதலீடு செய்யுங்கள். அதாவது 60 வயது வரை. 60 வயதில் அந்த முதலீட்டில் 10% வருமானத்துடன், உங்கள் கணக்கில் ரூ.1.12 கோடி இருக்கும். விதிப்படி, நீங்கள் 60 வயதை அடைந்ததும், உங்களுக்கு மொத்தமாக ரூ .45 லட்சம் ரொக்கம் கிடைக்கும். இது தவிர, ஒவ்வொரு மாதமும் 45,000 ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கும்.முதலீட்டாளர் 30 ஆண்டுகளில் மொத்தம் 18 லட்சம் ரூபாய் மட்டுமே முதலீடு செய்ய வேண்டி இருக்கும்.
தேசிய ஓய்வூதிய திட்டத்தில், வாடிக்கையாளர்களுக்கு வரி விலக்கு கிடைக்கும். வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80 சி இன் கீழ், நீங்கள் ரூ .1.5 லட்சம் தவிர கூடுதலாக ரூ .50,000 அளவிற்கு விலக்கு பெறலாம். என்.பி.எஸ்ஸில் முதலீடு செய்வதன் மூலம், நீங்கள் வருமான வரியில் ரூ .2 லட்சம் விலக்கு பெறலாம்.
ALSO READ | பென்ஷன் இல்லையே என்ற டென்ஷன் வேண்டாம்... ₹44,793 ஓய்வூதியம் தரும் முதலீடு இருக்கு..!!!
1000 ரூபாயிலிருந்து கணக்கைத் திறக்கலாம்
- NPS இன் கீழ், இரண்டு வகையான கணக்குகள், டயர் -1 மற்றும் டயர் -2 திறக்கப்படுகின்றன.
- டயர் -1 என்பது ஓய்வூதியக் கணக்கு, டயர் -2 ஒரு சுய விருப்பத்தின் பேரில் தொடங்கும் கணக்கு, இதில் சம்பளமும் பெறும் எந்த நபரும் முதலீடு செய்ய ஆரம்பிக்கலாம்.
- டயர் -1 கணக்கைத் திறந்த பின்னரே, டயர் -2 கணக்கு திறக்கப்படுகிறது.
- NPS டயர் -1 பரமாரிக்க, ஆண்டு பங்களிப்பு ஏற்கனவே ரூ.6,000 லிருந்து ரூ .1,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
- இந்த முதலீட்டை நீங்கள் 65 வயது வரை தொடரலாம்.
- என்.பி.எஸ் முதலீட்டில் 40 சதவீத ஆன்யுட்டி வாங்குவது அவசியம்.
- 60 சதவீத தொகையை 60 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பப் பெறலாம்.
- குறைந்தபட்ச வருடாந்திர முதலீடு செய்யப்படாவிட்டால், கணக்கு முடக்கப்பட்டு செயலிழக்கப்படும்.