இதை மட்டும் செய்தால் போதும்! திருமணமானவர்களுக்கு மாதம் ரூ.18,500 அரசு வழங்கும்!

பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா திட்டத்தில் 7.40 சதவீத வருடாந்திர வட்டி கிடைக்கும், இந்த சதவீத வட்டியின் மூலம் உங்கள் முதலீட்டுக்கான ஆண்டு வட்டி ரூ. 2,22,000 ஆகும்.   

Written by - RK Spark | Last Updated : Oct 5, 2022, 01:47 PM IST
  • பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா திட்டத்தின் மூலம் ஓய்வூதியம் கிடைக்கும்.
  • இந்த திட்டம் இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தால் இயக்கப்படுகிறது.
  • இந்த திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.
இதை மட்டும் செய்தால் போதும்! திருமணமானவர்களுக்கு மாதம் ரூ.18,500 அரசு வழங்கும்!

தனியார் நிதி நிறுவங்களின் மூலம் செயல்படுத்தப்படும் முதலீட்டு திட்டங்களை அரசால் வழங்கப்படும் திட்டங்கள் நமது பணத்திற்கு பாதுகாப்பை வழங்குவதாக அமைந்துள்ளது.  அந்த வகையில் மத்திய அரசின் கீழ் செயல்படும் பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா திட்டத்தின் மூலம் திருமணமானவர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் கிடைக்கிறது, இந்தத் திட்டம் மத்திய அரசால் 26 மே 2020 அன்று தொடங்கப்பட்டது.  இந்த திட்டத்தில் 31 மார்ச் 2023 வரை முதலீடு செய்யலாம்.  இந்திய அரசால் செயல்படுத்தப்படும் இந்த திட்டம் இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தால் இயக்கப்படுகிறது.  60 வயதை தாண்டிய தம்பதியர்கள் இந்த திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.  ஆரம்பத்தில் ரூ.7.5 லட்சமாக இருந்த அதிகபட்ச முதலீட்டு வரம்பு தற்போது இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டு இருக்கிறது.  

மேலும் படிக்க | இந்த 2 ரூபாய் நாணயம் உங்களிடம் இருந்தால், நீங்களும் லட்சாதிபதி ஆகலாம்

மூத்த குடிமக்களுக்கு சிறந்த வகையில் பயனளிக்கும் திட்டமாக இது கருதப்படுவதால் மூத்த குடிமக்கள் பலரும் இந்த திட்டத்தில் சேருவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.  60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் இந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.  தம்பதியர்கள் இருவரும் இந்த பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா திட்டத்தில் சேர விரும்பும் பட்சத்தில் ஒவ்வொருவரும் தனித்தனியாக ரூ.15 லட்சம் என்கிற கணக்கில் மொத்தமாக ரூ.30 லட்சத்தை முதலீடாக செலுத்த வேண்டும்.  இதில் முதலீடு செய்வதன் மூலம் உங்களுக்கு 7.40 சதவீத வருடாந்திர வட்டி கிடைக்கும், இந்த சதவீத வட்டியின் மூலம் உங்கள் முதலீட்டுக்கான ஆண்டு வட்டி ரூ. 2,22,000 ஆகும். 

இந்த ஆண்டு வட்டித்தொகையை தொகையை 12 மாதங்களுக்கு சரிபாதியாக பிரிக்கும்போது ரூ.18500 கிடைக்கிறது, இந்த ரூ.18,500 முதலீட்டாளருக்கு மாதந்தோறும் ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது.  மேலும் தம்பதியரில் ஒருவர் மட்டும் முதலீடு செய்துகொள்ளும் ஆப்ஷனும் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.  அதன்படி ரூ.15 லட்சம் முதலீடு செய்தால், ஆண்டு வட்டி ரூ.111000 மற்றும் முதலீட்டாளருக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் ரூ.9250 கிடைக்கும்.  இந்த திட்டத்தின் முதிர்வு காலம் மொத்தம் 10 ஆண்டுகள், முதிர்ச்சிக்கு பிறகு பணத்தை எடுத்துக்கொள்ளலாம் மற்றும் திட்டத்தை எப்போது வேண்டுமானாலும் சரண்டர் செய்யலாம்.

மேலும் படிக்க | ஆதார் அட்டை மூலம் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்க முடியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

More Stories

Trending News