எல்பிஜி சிலிண்டர் விலை இன்று உயர்வு: பிப்ரவரி 1 ஆம் தேதி அதிகாலையில் எல்பிஜி விலை உயர்வால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்று பட்ஜெட் தாக்கல் தினத்தை முன்னிட்டு, கேஸ் சிலிண்டர் விலை உயர்வு மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. அதன்படி சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை, ரூ.12.50 அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில் இன்று முதல் வர்த்தக சிலிண்டரின் விலை ரூ.1,937ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
நான்கு பெருநகரங்களில் எல்பிஜி 19 கிலோ சிலிண்டரின் விலை என்ன?:
டெல்லியில் வர்த்தக சிலிண்டர் விலை உயர்வுக்கு பிறகு ரூ.1769.50ஐ எட்டியுள்ளது. அதே நேரத்தில், கொல்கத்தாவில் 19 கிலோ வர்த்தக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.1887.00ஐ எட்டியுள்ளது. மும்பையில் ரூ.1723.50 ஆகவும், சென்னையில் வணிக கேஸ் சிலிண்டர் விலை ரூ.1937 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | Budget 2024: கடந்த பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்புகள் என்ன என்ன தெரியுமா?
வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் விலை:
அதே நேரம் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதனால் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.918.50 என்ற அளவிலேயே தொடர்கிறது. இதனால் இல்லத்தரசிகளுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது.
கேஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு என்ன காரணம்?
சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன. அதன்படி சமீபத்தில் இஸ்ரேலுக்கும்-ஹமாஸ் எனும் பாலஸ்தீன விடுதலை அமைப்புக்கு இடையே நடைபெற்று வரும் போர் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் பரவியுள்ளதால், எண்ணெய் விலை அதிகரித்திருக்கிறது. எனவே சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் ரூ.12.50 விலை உயர்ந்திருக்கிறது. ஏற்கெனவே இந்த சிலிண்டர் ரூ.1924.50க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.1937க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் சிறு குரு வணிகர்கள் பாதிப்பை எதிர்கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம் சிலிண்டர் விலையில் நிவாரணம் கிடைத்தது:
முன்னதாக கடந்த ஜனவரி 1 ஆம் தேதி 19 கிலோ கொண்ட வணிக சிலிண்டர் விலையில் ரூபாய் 4.50 குறைக்கப்பட்டது. இதனால் ரூபாய் 1,929க்கு விற்கப்பட்டு வந்த வணிக சிலிண்டர் விலை ரூபாய் 1,924.50 ஆக குறைந்தது. அதே சமயம் டிசம்பர் 22ஆம் தேதி வணிக சிலிண்டர் விலையில் ரூபாய் 39.50 குறைப்பட்டது. எனவே இடைக்கால பட்ஜெட் மற்றும் தேர்தல் நடைபெற உள்ளதால், பிப்ரவரி மாதத்திலும் வணிக சிலிண்டர் விலை குறையும் என எதிர்பார்த்த நிலையில், நேர் எதிராக வணிக சிலிண்டரின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது ஏமாற்றத்தை தந்துள்ளது.
காலை 11 மணிக்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல்:
இதற்கிடையில் இன்று காலை 11 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். இந்த ஆண்டு பொதுத்தேர்தல்கள் நடக்கவுள்ள நிலையில், இந்த பட்ஜெட் ஒரு இடைக்கால பட்ஜெட்டாக (Interim Budget) இருக்கும். தேர்தலுக்குப் பிறகு புதிய அரசு அமைந்த பிறகு ஜூலை மாதம் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இடைக்கால பட்ஜெட்டாக இருப்பதால் முக்கிய அறிவிப்புகள் எதுவும் வெளியாகாது என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், வாக்காளர்களை ஈர்க்கும் வகையில் அரசு சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடலாம் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க | Budget 2024: இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு கிடைக்கப்போகும் சலுகைகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ