பால் கறக்கும்போது முகத்தில் விழுந்த சாணி: வாலை பிடித்து கடித்த பெண் - வைரல் வீடியோ

பால் கறந்து கொண்டிருக்கும்போது  மாடு ஒன்று திடீரென முகத்தில் சாணி போட்டதால் கடுப்பான பெண், அம்மாட்டின் வாலைப் பிடித்து கடித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 23, 2023, 10:27 PM IST
  • பால் கறந்த பெண்ணுக்கு சோகம்
  • முகத்தில் சாணி போட்ட மாடு
  • கடுப்பாகி வாலைக் கடித்த பெண்
பால் கறக்கும்போது முகத்தில் விழுந்த சாணி: வாலை பிடித்து கடித்த பெண் - வைரல் வீடியோ title=

வித்தியாசமான வீடியோக்கள் நாள்தோறும் இணையத்தை ஆக்கிரம்மிக்கும் இந்த காலத்தில், ஒரு பெண் மாட்டின் வாலைப் பிடித்துக் கடித்த வீடியோ இப்போதைய டிரெண்டிங்கில் அதிக கவனத்தையும், லைக்குகளையும் பெற்றுள்ளது. என்னது மாட்டின் வாலை பிடித்து பெண் கடித்துவிட்டாரா? என கேட்கும்போது உங்களுக்கேகூட கொஞ்சம் வியப்பாக இருக்கும். ஆனால் முழு சம்பவத்தையும் அறிந்தால் தான் அந்தப் பெண்ணின்  பக்கம் இருக்கும் நியாயத்தையும் நீங்கள் உணர்ந்து கொள்ள முடியும். அந்தப் பெண் மாட்டிடம் பால் கறக்க சென்றிருக்கிறார். தினமும் அவர் வழக்கமாக செய்யக்கூடிய ஒன்று தான் என்றாலும், அன்று மாடு என்ன கோபத்தில் இருந்ததோ தெரியவில்லை.

மேலும் படிக்க | முத்தம் கொடுத்த சிங்கங்கள், பாச மழையில் நனைந்த நபர்: நம்ப முடியாத வைரல் வீடியோ

அந்தப் பெண் பால் கறக்க சென்றதும், மாடு அசௌகரியமாக இருந்துள்ளது. இது அப்பெண்ணுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இருந்திருக்கிறது. ஏனென்றால் தினமும் பழக்ககூடிய மாடு என்பதால், அதனுடைய செய்கைகளின் அர்த்தம் தெரிந்திருக்க நிச்சயம் வாய்ப்பு உண்டு. ஆனால், அதனை அவர் கவனிக்க மறுத்தாரா? இல்லை நேரமின்மை காரணமாக புறந்தள்ளிவிட்டு செய்தாரா என்று தெரியவில்லை. முடிவில் மாட்டின் சாணியை முகத்தில் வாங்க வேண்டிய மோசமான அனுபவத்தை பெற்றுவிட்டார். எப்போது மாட்டிடம் பால் கறக்க சென்றாலும் பால் கறப்பதற்கு முன்பு அதற்கு தண்ணீர் வைத்து அழைத்து வர வேண்டும். அந்த நேரத்தில் மாடு சாணி மற்றும் சிறுநீர் கழித்துவிடும். அதனை அந்தப் பெண் செய்யவில்லைபோலும்.

அவசரம் அவசரமாக அவர் மாட்டிடம் பால் கறக்க, மாடோ அதனுடைய அவசரத்தை அடக்க முடியவில்லை. வாய் இருந்தாலாவது சொல்லியிருக்கும். வாய் இல்லாத பிராணி என்பதால், அதனால் அவசரத்தை அடக்க முடியவில்லை. இறுதியாக பால் கறந்து கொண்டிருந்த பெண்ணின் வாயிலேயே சாணியை போட்டுவிட்டது. ஒரு மொத்தை சாணி. வேறு பக்கம் அமர்ந்தாவது அவர் பால் கறந்திருக்கலாம். அதையும் அப்பெண் செய்யாத காரணத்தால் மாடும் இது தான் வாய்ப்பு என முகத்திலேயே சாணியை போட்டுவிட்டது. இதனால் கடுப்பான அந்தப் பெண், மாட்டின் வாலைப் பிடித்து ஆக்ரோஷமாக கடித்து தன்னுடைய கோபத்தை தீர்த்துக் கொண்டார். @nevertellmeodd என்ற டிவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டிருக்கும் இந்த வீடியோ இதுவரை இரண்டு லட்சத்து 60 ஆயிரம் பார்வைகளைப் பெற்றுள்ளது. கொஞ்சம் காமெடியான வீடியோ தான். இதுவரை நீங்கள் பார்க்கவில்லை என்றால், பார்த்து ரசியுங்கள்..!

மேலும் படிக்க | மொட்டை மாடியில் பட்டையை கிளப்பிய சிறுமி: சொக்கிய நெட்டிசன்கள், வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News