NSC Interest Rate: அஞ்சலக NSCக்கு உத்தரவாத வருமானம், புதிய வட்டி வீதம்

அஞ்சலகத்தில் NSCயில் முதலீடு செய்வது உத்தரவாத வருமானத்தை அளிக்கிறது என்பதோடு பல கணக்குகளைத் திறக்கும் வசதியும் இருக்கிறது

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Apr 15, 2021, 09:09 PM IST
  • அஞ்சலக NSCக்கு உத்தரவாத வருமானம்
  • புதிய வட்டி வீதம் என்ன?
  • நிலையான வட்டி எவ்வளவு?
NSC Interest Rate: அஞ்சலக NSCக்கு உத்தரவாத வருமானம், புதிய வட்டி வீதம் title=

புதுடெல்லி: அஞ்சலகத்தில் NSCயில் முதலீடு செய்வது உத்தரவாத வருமானத்தை அளிக்கிறது என்பதோடு பல கணக்குகளைத் திறக்கும் வசதியும் இருக்கிறது.  தேசிய சேமிப்பு சான்றிதழ்கள் (NSC Certificate): அஞ்சலக சிறு சேமிப்பு திட்டத்தில், வட்டி விகிதம் ஒவ்வொரு காலாண்டிலும் மதிப்பாய்வு செய்யப்படுகிறது, ஆனால் என்எஸ்சியில் முதலீடு செய்யும் போது, ​​வட்டி விகிதம் முழு முதிர்வு காலத்திற்கும் அப்படியே இருக்கும்.

சிறு சேமிப்பு திட்டங்களில் ஒரு சிறப்பான சேமிப்பு திட்டம் தேசிய சேமிப்பு சான்றிதழ்கள் (என்.எஸ்.சி) திட்டம் ஆகும். NSC திட்டத்தின் முதிர்வு காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். இதில் வருமானத்திற்கு உத்தரவாதம் உண்டு. 

என்.எஸ்.சி.யில் (NSC) முதலீடு செய்தால் வருமான வரி விலக்கும் கிடைக்கிறது. சிறு சேமிப்பு திட்டத்தில், வட்டி விகிதம் ஒவ்வொரு காலாண்டிலும் மதிப்பாய்வு செய்யப்படுகிறது, ஆனால் என்எஸ்சியில் செய்யப்படும் முதலீடுகலுக்கான வட்டி விகிதம் முழு முதிர்வு காலத்திற்கும் நிலையானதாக தொடரும்.  

ALSO READ: Covidஐ அடியோடு விரட்ட 5 மருந்துகள் இன்னும் ஐந்து மாதத்தில்...

என்.எஸ்.சி.யில் குறைந்தபட்ச முதலீட்டு தொகை (Minimum investment amount in NSC)

புதிய முதலீட்டாளர்களுக்கான என்.எஸ்.சி வட்டி விகிதம் தற்போது ஆண்டுக்கு 6.8% என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. என்.எஸ்.சியில் குறைந்தபட்ச முதலீட்டு தொகை 1000 ரூபாய் ஆகும். ரூபாய் 100இன் மடங்கில் பணத்தை முதலீடு செய்யலாம். அதிகபட்ச முதலீட்டுக்கு வரம்பு இல்லை. ஆண்டுதோறும் முதலீட்டாளருக்கு வட்டி செலுத்தப்படுவதில்லை, ஆனால் அது முதலீட்டுத் தொகையுடன் சேர்க்கப்படுகிறது. NSC யின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள்.

என்.எஸ்.சி.யில் வருமான வரி விலக்கு

என்.எஸ்.சியில் (NSC) முதலீடு செய்தால், வருமான வரி பிரிவு 80 சி இன் கீழ் என்.எஸ்.சி.யில் ஆண்டுக்கு ரூ .1.5 லட்சம் வரையிலான முதலீட்டிற்கு வருமான வரி விலக்கு பெறலாம். வரி விதிக்கக்கூடிய வருமானத்தில், மொத்த வருமானத்திலிருந்து தொகை கழிக்கப்படுகிறது. 

Also Read | சனிக்கிழமை முதல்  RTGSஇல்லை! ஏன்? 

என்.எஸ்.சி-யில் ஆண்டுதோறும் பெறப்படும் வட்டியானது முதலீட்டாளரால் மறு முதலீடு செய்யப்படுவதாகக் கருதப்படுகிறது. பிரிவு 80 சி இன் கீழ் ரூ .1.5 லட்சம் ரூபாய்க்கு வரி விலக்கு கிடைக்கும் என்பது கூடுதல் நன்மையாகும்.

இந்த தொகை மறு முதலீடு செய்யப்படாது  

என்.எஸ்.சி.யில் முதலீடு செய்திருந்தால், ஐந்தாம் ஆண்டில் அல்லது கணக்கு முதிர்ச்சியடையும் கடைசி ஆண்டில் வட்டியும் கணக்கில் சேர்க்கப்படாது. இறுதி ஆண்டில் என்.எஸ்.சி யிலிருந்து பெறப்பட்ட வட்டித் தொகையானது கணக்கு வைத்திருப்பவரின் வருமானத்தில் சேர்க்கப்பட்டு அதற்கேற்ப வரி விதிக்கப்படுகிறது. என்.எஸ்.சி கணக்கில் இருந்து கடன் பெறலாம் என்பதும் கூடுதல் நன்மையாகும்.

ALSO READ: சமூக இடைவெளி இல்லை, சென்னை காசிமேடு துறைமுகத்தில் குவியும் மீன்பிரியர்கள்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News